ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒபாமாவும் கக்கூசும்!!!





கடந்த சில நாட்களாக இந்தியாவை பார்த்து கைகொட்டி சிரிக்காத நாடில்லை என கூறலாம்(உகாண்டா உட்பட.நான் அந்த நாட்டை இழிவாக கூறவில்லை!மற்றவர்களின் மாய பிம்பத்தை உடைக்க எத்தனம்!) எல்லாம் இந்த Congress Wealth சாரி Corrupted Wealth அட மன்னிச்சிருங்க அது சரியாகவே எழுத வரமாட்டேங்கிறது!Common wealth games யப்பா கடைசியாக சரியாக!இந்த காமன் வெல்த் போட்டிக்கு பங்கேற்க வரும் வீரர்களுக்கு தங்குமிடமாக காமன் வெல்த் கிராமம் என்ற பெயரில் தங்கும் விடுதி (ஏதோ அவசர "இந்திய" கதியில்!!!) தயார் என "நினைத்து" பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வீரர்கள் பத்திரிகையாளர்கள் இன்ன பிறர் பார்த்து அட!?! என்ன சொல்ல அதிர்ச்சி அடைந்தனர் என்பதை தவிர வேறென்ன வார்த்தை சொல்ல?!
அந்த கிராமத்தில் இருந்த கழிப்பறையின் நிலைமையை BBC தொலைக்காட்சி விவரித்து படங்களுடன் காட்டியது!


இன்ன பிற நாடுகளும்(எதிரி என கூறப்படும் பாக் உட்பட) இந்தியாவின் டங்குவாரை அத்துபுட்டன (மெட்ராஸ் பாஷைக்கு மன்னிக்கவும்)
சுரேஷ் கலைவாணி சாரி சுரேஷ் கல்மாடி அனைத்து கலவாணிதனதிற்கும் தானே பொருபேற்பதாக இப்போது ஒப்புகொண்டிருப்பது பல தலைகளை காப்பாற்ற ஒரு தலையை பலி கொடுக்கும் இந்தியாவின் பாரம்பர்யம் (போபால் வழக்கில் அன்றேசனை யார் தப்ப விட்டதென்ற பழிக்கு ராஜிவை காப்பாற்ற சமாதியிலிருக்கும் நரசிம்ம ராவ் பலி கொடுக்கப்பட்டார் என்பது நாடறிந்தது) இப்போதும் பின்பற்றபட்டிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டியதில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பூசல்(வழக்கம் போல்)வெடித்து பூதாகரமாகிவிட்டது.முதலில் இந்த பிரச்னையை கிளப்பிய மணிசங்கருக்கு பாராட்டு போய்கொண்டிருக்கிறது என்பதும் சரத் பவர் சுரேஷ் கல்மாடியை பகடி செய்திருப்பதும்(அதாவது சுரேஷ் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டுக்கொள்ள முயன்றதாகவும் தூக்குமேடையும் ஊழலால் செய்ததால் உடைந்து இவர் உயிர் பிழைததாகவும் கிண்டலடித்தார்),.
இப்போ அரசு என்ன செய்யும்?எப்படியோ கெஞ்சி கூத்தாடி பங்கேற்கமாட்டோம் என அறிவித்த நாடுகள் பலவும் சரி வந்து தொலைக்கிறோம் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.இப்போது என்ன?போட்டிகள் நடக்கும்..முடியும்..வழக்கு கல்மாடி மேல்..பதவி விலக வற்புறுத்தல்(ராசா விவகாரம் போல்)..கூச்சல் ..தர்ணா..பின் என்ன?வழக்கம் போல் இந்தியாவும் தேசிய குணமான மறதி முன்னுக்கு வர மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்படும்.
அப்புறம் என்ன?
நம்ம வெளி நாட்டில் வசிக்கும் எப்போதாவது இந்தியா வருகை தரும் மன்மோகனின் எசமான் ஒபாமா நவம்பரில் இந்திய விசயமாம்.அதற்குள் கக்கூசெல்லாம் அமெரிக்க பெனாயில் போட்டு கழுவப்பட்டு பளீச்சென்று ஆகிவிடும் .பின்னே?சிறந்த பிரதமர் விருதை தனது அடிமையான மன்மோகனுக்கு சமீபத்தில்தான் வழங்கியது எசமான் அமெரிக்கா.அதற்கு விசுவாசமாக ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் ,போபால் விவகார மூடி மறைப்பு என பல வகையில் "நன்றி கடனை" அடிமை செய்துவிட்டாலும் இப்போது மேலும் ஒரு கைமாறாக ஒபாமா தங்கவிருக்கும் அறையிலாவது தெருநாய் தூங்குவதோ(காமன் வெல்த் கிராமம் போல்) அல்லது கக்கூஸ் மகாகேவலமாக இல்லாமலோ பார்த்து கொள்ளப்படும்.ஏனென்றால் எசமானருக்கு அடிமை சேவை செய்ய அல்லவே பிறந்திருக்கிறோம்!!!

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஐயோ வட போச்சே!!!


கடந்த சில வாரங்களாக இது பற்றியே பேச்சு.,..இல்லை நான் சொல்வது எந்திரன் படத்தை பற்றியோ அல்லது வேறேதோ அல்ல..இது NDM-1 என்று சுருக்கமாக அழைக்கப்படும் New Delhi Metallo-beta-lactamase என்ற கிருமி அழிப்பான் எதிர்ப்பு நொதி (Enzyme) இந்தியாவிலிருந்து உருவானதாகவும் ஆதலால் தங்கள் நாட்டவர் யாரும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாமெனவும் பல நாடுகளில் எச்சரிக்கப்பட்டனர்.இதை கேள்விப்பட்ட நமது "தேசபக்தர்கள்" குய்யோ முறையோ என கூப்பாடு போட்டனர்.இது இந்தியாவில் வளர்ந்து வரும் மருத்துவ சுற்றுலாவை பாதிக்கும் எனவும் இது தேசத்திற்கு எதிரான ஒரு அறிவிப்பு எனவும் கூறினார்.
அப்படியா?!
முதலில் இந்த மருத்துவ சுற்றுலா பற்றி சிறிது பார்க்கலாம்.பல வெளிநாட்டவர் தங்கள் நாட்டில் ஒரு மருத்துவ சிகிச்சை பெற அல்லது ஒரு அறுவை சிகிச்சை செய்ய செலவு அதிகமாகும் என்பதால் அவர்கள் இந்தியா வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதனால் அரசுக்கு வருமானம் வருவதால் மற்ற நாடுகள் விஷ பிரசாரம் செய்கின்றன என எதிர் கட்சிகளும் ஆளும் கட்சியும் கூறினாலும் முதலில் இந்த மருத்துவ சுற்றுலாவல் யாருக்கு லாபம்?
ஒரு தலைவலி என போனாலும் அந்த ஸ்கேன் எடு இந்த ஸ்கேன் எடு என அது இதுவென்று பல ஆயிரங்களை பிடுங்கி "ஏன்டா இங்க சிகிச்சைக்கு வந்தோம் " என மக்கள் நொந்து போகும் அளவுக்கு அராஜகம் செய்யும் அபோல்லோ போன்ற இந்த தனியார் மருத்துவமனைகள் தான் .
மேலும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் "இந்தியா செல்ல வேண்டாம்" என சில நாடுகள் எச்சரித்தபோது பொங்கிஎழுந்தது தேசபக்தியால் அல்ல..இத்தகைய மேற்கூறிய மருத்துவமனைக்கு வருமானம் குறைந்து விடும்.(உள்நாட்டு மக்கள் பெரும்பாலும் இத்தகைய மருத்துவமனைகளின் அட்டூழியத்தை ஏற்கெனவே கேட்டதனாலோ அல்லது அனுபவப்படதனாலோ அங்கே செல்வதை தவிர்த்து விடுவதால் இந்த மருத்துவமனைகள் பெரும்பாலும் ஏதும் அறியாத வெளிநாட்டு நோயாளிகளின் பாக்கெட்டை பதம் பார்கின்றன.இப்போது இத்தைகைய எச்சரிக்கையால் வெளிநாட்டு நோயாளிகளின் வருகை குறைந்து போகுமானால் இவர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.எனவே தான் தாங்கள் அவ்வப்போது ஊழியம் அழும் கட்சிகளை தூண்டிவிட்டு இத்தகைய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
இல்லையேல் இந்த கட்சிகள் வாய் மூடி மௌனியாக இருப்பதையே விரும்பும்.
மருத்துவ சுற்றுலா பாதிக்கப்படும் ஆதலால் வெளிநாட்டு நோயாளிகள் பாதிக்கபடுவர் என கவலைப்படும் கூப்பாடு போடும் எந்த கட்சியோ அமைப்போ முதலில் இங்கிருக்கும் சிகிச்சை பெற வசதியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கும் பணம் பிடுங்கும் பேய்களை அத்தகைய போக்கை கண்டிக்க துணிவுண்டா?
இல்லை.ஏனெனில் இந்த பாவப்பட்ட சிகிச்சை பெற வசதியில்லாத இந்தியர்களால் தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று இவர்கள் நினைக்கின்றனர்.
அதே நேரம் இந்த வெளிநாட்டு நோயாளிகளின் வருகையால் தனியார் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும்.அதில் இவர்களுக்கு "பங்கு" வெட்டப்படும்.
ஆம் ஞ்யாயம்தான்.பணம்தானே முக்கியம் ஏழை மக்கள் எக்கேடு கெட்டா இவர்களுக்கு என்ன?
வாழ்க சன நாயகம்!!!!