சமீபத்தில் மாணவர்கள் ஆங்காங்கே ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன .இதற்கு காரணம் யார்?
"நாளைய பாரதம் மாணவர் கையில் "என அனைவரும் மேடையில் கூறி வரிகின்றனரே தவிர இன்றைய பாரதம் யார் கையில் உள்ளது என யாரும் கூற முனிவதில்லை.மாணவர்களின் தேவையையோ விருப்பத்தையோ யாரும் கண்டு கொள்வதில்லை.
பெற்றோர் அவர்களை படி படி என கூறி கல்வி என்பது வெறும் ஏடுகளில் இருக்கும் மதிப்பெங்களுக்குதான் என ஒரு என்னத்தை உருவாக்கி விடுகின்றனர்."என் புள்ள 100 கு 100 வாங்கணுங்க .நீங்க என்ன வேணும்னா பண்ணுங்க"என ஆசிரியரிடம் கூறி விடுகின்றனர்.இது மாணவர்களக்கு கல்வியில் மேலும் வெறுப்பையே ஏற்படுத்துகிறது.வீட்டிலும் உதை வாங்கி பள்ளியிலும் உதை வாங்கி அவர்களுக்கு வன்முறை எண்ணமே மனதில் பதிகிறது.
மேலும் இது போதாதென்று சினிமா வேறு.தனது விருப்ப நாயகன் என்ன செய்தாலும் அதை செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணம் உருவாகிறது.சினிமாவிலும் 10 பேரை அடிப்பவன் ஹீரோ ,ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி காதலிப்பவன் ஹீரோ என தவறாக காட்டபடுகிறது.இடை பார்க்கும் மாணவர்களுக்கும் வன்முறை எண்ணம் மேலும் வளர்கிறது.எனவே அவர்கள் சக மாணவர்களை அடிப்பதால் ஹீரோவாகி விடலாம் என நினைக்கின்றனர். அதன் விளைவே இத்தகைய வன்முறை.
இந்நிலையில் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள்.அது அவர்களை மேலும் வன்முறை செய்ய தூண்டுகிறது.முதலில் அணைத்து மாணவர்களும் ஒன்றாக பார்க்கப்பட வேண்டும்.அவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை புரிந்து அன்புடன் நடத்த வேண்டும்.மதிப்பெண் மட்டும் வாழ்க்கையில்லை.ஒழுக்கமும் அவசியம் என உணர்த்த வேண்டும்.சாதிகள் application form இல் இருந்து மட்டுமல்ல அனைவரது மனதில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக