வியாழன், 2 டிசம்பர், 2010

குற்றவாளியை விடு அதை வெளிப்படுத்தியவனை பிடி:அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசம்

கடந்த சில நாட்களாக விக்கிலீக்ஸ்    ஜூலியன் அச்சாஞ்  வெளியிட்ட Cable Gate என்கிற ஆவானங்கள்தான்  ஊடகங்களை கலக்கி கொட்னிருக்கிறது(தமிழ் ஊடகங்களை அல்ல!இங்கு வனிதா  ஓடிபோனாலா  என்பதுதான் முக்கிய செய்தி  .நாசமாய் போக!)
அப்படி என்ன இருக்கிறது இந்த ஆவணங்களில்?

                                          சரித்திரத்தில் ஒரு வீரன் -ஜூலியன்  அசாஞ்
அமெரிக்கா மற்ற நாட்டு விவகாரங்களில் எப்படி தன அக்டோபஸ்  விஷ கரங்களை நீட்டி ஆட்டுவித்திருக்கிறது என்பதுதான் இந்த ஆவங்களில் பெரும்பாலான செய்தி.
உதாரணமாக ஹிலரி கிளிண்டன் இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கேட்பதை "அலைகிறார்கள் அவர்கள்" என்று இந்தியாவை அசிங்கப்படுத்தியிருக்கிறார்.(இதை கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை இந்தியா.ஆமா என்ன இருந்தாலும் எசமானர் இல்லையா.எப்படி எதிர்த்து பேசமுடியும்!!!)
               இதுதவிர இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாகவும் ஆவனைகள் வெளிவந்திருக்கிர்ன்றன.ஆனால் அதில் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே வெளி வந்திருக்கிறது.அதாவது ராஜபக்சே சகோதரர்கள் போற்குற்றவாளிகள் என்பது.ஆனால் தெரிந்து என்ன செய்து விட்டன அமெரிக்காவும் அதன் கைத்தடியான ஐநா சபையும்?
ஏற்கெனவே ஈராக் மற்றும் ஆப்கனில் அமெரிக்க மற்றும் நாட்டோ கூட்டுப்படைகள் நடத்திய அட்டூழியங்களை  வெளியிட்டுள்ளது இதே விக்கிலீக்ஸ்  .
ஆக புஷ் ஹிலரி கிளிண்டன் ஒபமா பிரிட்டனை பிரதமர் டோனி பளீர் ..etc..etc என இந்த இராக் மற்றும் ஆப்கன் போருக்கு உதவிய அனைவரும் போற்குற்றவாளிகளே!
ஊருக்கு நாட்டமை வேலை பார்க்கும் அமெரிக்கா(ஒரு நூறு ஆண்டாக இதைதான் செய்து வந்திருக்கிறது.சாட்சி:வரலாறு) தான் செய்த போர்குற்றங்கள் மற்றும் உளவு வேலைகளை  குற்றம் என ஒப்புகொள்ளாதது அதன் உண்மை முகத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது(விவரம் தெரிந்தவர்களுக்கு அமெரிக்காவின் விஷமத்தனம் சொல்லி விளங்க வேண்டியதில்லை.ஆனால் இன்னும் பெரும்பாலான இந்தியா பிரஜைகள் ஒபாமாவை காந்தி ரேஞ்சுக்கு பார்த்த பார்க்கும் அவல நிலைதான் நம் நாட்டில் உள்ளது.அவர்களுக்கு இந்த ஆவனைகள் ஒபாமாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியிஐக்கிறது.திருந்துங்கையா!)
அதுவும் இந்தியா சம்பந்தப்பட்ட ஆவணங்களும் வெளியாகி உள்ளன.ஆனால் இந்த ஆவணங்கள்  வெளியாகும் முன்பே அமெரிக்கா தன அடிமை இந்தியாவை எச்சரித்தது.(இந்த மாதிரி எங்கள் கேப்மாரித்தனம் வெளிவரப்போகிறது.அதெல்லாம் நம்ப வேண்டாம்.நாக ரொம்ப நல்லவங்க..அடங்கப்பா ஆள்பவர்களே இன்னும் அமெரிக்க அடிமையாகத்தான் நாம் இருக்க வேண்டுமா?உங்களுக்கு மூளை  கிடையாதா?அது சரி அரசியல் வாதிக்கு மூளையேது  ?அட்லீஸ்ட் தேசப்பற்று ? அதெல்லாம் இப்போது அருங்காட்சியகத்தில்தான் பார்க்கமுடியும்!!!)
அந்த ஆவன்னகளில் முக்கியமாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் தீவிரவாத எதிர்ப்பு நிதியை அவர்கள் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்  என்பது தெரிந்தே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி உதவி தொடர்ந்து அளித்துவருகிறது.(ஏன் பேசாம அமெரிக்க ராணுவத்தையே பாகிஸ்தானுக்கு அனுப்பிடுங்களேன் .அட சை)
         இதை விட முக்கியமாக இந்தியாவின் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உளவாளிகள் ஆகியோரின் கைரேகை மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் மேலும் அவர்களின் கண்ணின் பாப்பா (Iris)அமைப்பு முகவரி மற்றும் மேலும்பல ரகசியங்களை உளவாளிகளை விட்டு கண்காணிக்க சொல்லியிருக்கிறார் அமெரிக்க Secretory of State  ஹிலரி கிளிண்டன்.
  
           பின்னே அடிமைகளை பற்றி எசமானர்கள் தெரிந்துவைத்து கொள்ள வேண்டாமா?அட கருமமே!!!இதுக்கு எதுக்குடா தனியா இந்தியா கொடி.. பிரதமர்.. பாராளுமன்றம்.. மட்டை..  எல்லாம்  ?பேசாம இந்தியா அமெரிக்காவின் காலனி நாடு   என அறிவித்து தொலைத்துவிடலாமே?
           சபாஷ்.இந்தியாவை ஆட்டிவைப்பது பிரதமர் என்னும் பொம்மை மூலம் ஒரு இத்தாலிய பிரஜை.இந்தியாவில் என்ன நடக்கிறது அதன் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதையெல்லாம் கண்காணிப்பது எசமான் அமெரிக்கா!!!இதுவல்லவோ தேசியம் ..தேசபக்தி...சுயசார்பு நிலை..நாசமாய் போக!!!
            இதில் நகைச்சுவை என்னவென்றால்(ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கியது அல்ல.அது இந்த நூற்றாண்டின் நகைச்சுவை!!) இத்தனை உளவு வேலைகளையும் போற்குற்றங்களையும் புரிந்த இன்னும் பல களவானித்தனங்களை  செய்து கொண்டிருக்கும்   அமெரிக்கா  மற்றும் அதற்கு உதவிய நாடுகள் இல்லையாம்.இந்த களவானித்தனங்களை வெளியிட்ட விகிலீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் ஆசான்ஜாம்!!!சூப்பரப்பு கொலை செய்தவன் குற்றவாளி அல்ல அதை வெளியில் கண்டுபிடித்து சொல்பவன்தான் குற்றவாளி.மேலும் அவர் மீது கற்பழிப்பு புகார் வேறு ஜோடிக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்கான்னா சும்மாவா?ஹீ ஹீ ( இதற்கு முன் நான் எழுதியதுபோல் ரத்தன் டாடாவின் நீரா ராடியவுடனான பேச்சு(எ)பேரம் குற்றமல்ல என்றும் இதை பதிவு செய்தவர்களை தண்டிக்க வேண்டுமெனவும் டாடா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.)
          மேலும் அசாஞ்சை பிடிக்க சர்வதேச போலீசு (அதான் Interpol) முயற்சி    செய்து  வருகிறதாம் .ஆமா  அந்த  போர்  குற்றவாளி  ராஜபக்சேவையோ    அல்லது  கொத்ரோச்சியையோ  பிடிக்க  வக்கில்ல  ..சிரிப்பு  போலீசுதான்  நீங்க !!!  

             இப்போது புரிந்ததா?அமெரிக்க ஏகாதிபத்யதிற்கும் இந்தியா முதலாளித்துவத்திற்கும்    ஒரு சின்ன வேறுபாடு கூட இல்லை.
           An American has always two opinions.one for himself and second for the rest   என்று Mark Twain அமெரிக்கர்களின் இரட்டைதனமையை குறிப்பிடுகிறார்.இப்போது அது மற்றொரு  முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

பி கு: இந்த  http://www.wikileaks.org/   என்னும்  வலைத்தளம்  பல  நேரங்களில்  வருவதில்லை ( ஹ்ம்ம் உண்மைய  சொன்னா கோவம்தான் வரும் எல்லாருக்கும்!!!..இவனே  இந்த  ஆவணங்கள்  வேண்டுவோர்    கீழே  உள்ள  இணைப்பை  தங்கள்  Browser இல்  காபி,பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்
   http://www.filefactory.com/file/b48a7g7/n/cablegate-201011301101.7z
      இது ஒரு 7Zip file.அதாவது  வின்சிப் போல.இதை extract சிய கீழ்கண்ட மென்பொருளை பயன்படுத்துங்கள்.
   http://www.7-zip.org/download.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக