சாதரணமாக எந்த ஒரு காட்சியும் தனது கட்சிக்காரன் ஊழலில் மாட்டிகொண்டால் அந்த நேரத்தில் அந்த கட்சி தலைவர் அதற்கு பதிலளிக்கும்போது "இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ஆதலால் நான் கருத்து கூற விரும்பவில்லை " ன்னு தான் சொல்வார்.ஆனா நம்ம கபில் சிபல் கூவுன கூவல் இருக்கே(வடிவேலு ஒரு படத்தில் "வாங்குன காசுக்கு மீறி கூவுராண்டா கொயாலே"ன்னு சொல்வார்)அந்த மாதிரி இவர் கூவுனது.
முதலில் இந்த கபில் சிபல் யாரென்று பலருக்கு தெரியாது.உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சராக இருக்கும் இவுரு ஒரு வழக்கில் வாதாட ஒரு மணிநேரத்திற்கு வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா?ஒரு கோடி.!!!!!மயக்கம் வந்தால் சோடா குடிக்கவும்.
இப்படியாக கேபினட் அமைச்சராவதற்கு முன் இவர் கேப்மாரி மொள்ளமாரிகளிடம் ஒரு மணிக்கு ஒரு கோடி வாங்கி அவர்களுக்கு ஆதரவாக வாதாடி அந்த "த்யாகிகளுக்கு " விடுதலை வாங்கியும் கொடுத்திருக்கிறார் .
இப்போது ஸ்பெக்ட்ரம் வழக்கை சி பீ ஐ நீதிமன்ற கண்காணிப்பில்(சி பீ ஐ மீது அவ்வளவு நம்பிக்கை நீதிமன்றத்துக்கு!!!!) விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் ஒய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டில் தலைமையில் ஒரு நபர் விசாரண கமிஷன்(ஒப்புக்கு!!) அமைத்த பின்னர் கபில் சிபல் திருவாய் மலர்ந்துள்ளார்.
அவர் சொல்வது ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு பைசா கூட அரசுக்கு நட்டம் இல்லையாம்.CAG(Comptroller and Auditor General) இந்த ஒரு லட்சத்தி எழுபத்தாராரியறம் கொடி ஊழல் என்பது வெறும் அவரது யூகமாம்.!!!!அடங்கப்ப இது அந்தர் பல்டிடா சாமி!!!இத கணக்கு தணிக்கை துறை அறிக்கை வந்த உடனேயே சொல்ல வேண்டியதுதானே!!நீரா ராடிய டேப் அது இதுன்னு எல்லா ஆதாரமும் இருக்கும்போதே இவர் மக்களை இழிச்சவாயனாக்கபார்ரிகிறார்.ஒரு ஆதாரமும் இல்லையெனில்?ச்பெக்டரமே இல்லையென இந்த மரமண்டை சொன்னாலும் ஆச்சரியமில்லை.இந்த லட்சணத்தில் இவர்தான் ராசாவிற்கு பதில் தொலை தட்ர்பு அமைச்சர்.இவர் ஆதாரங்களை களைக்கா மாட்டாரென்பது என்ன நிச்சயம்?எனவே இவர் பதவி நீக்கப்படவேண்டும்.
அப்புறம் எதுக்கு விசாரணை கமிஷன் அமைத்தது காங்கிரஸ்?கிளுகிளுப்ப காட்டவா?அப்படியே ஆதர்ஷ் ஊழல் காமன்வேல்த் ஊழல் ஐபிஎல் ஊழல்னு எல்லாத்துலையும் ஒரு பைசா ஊழல் நடக்கலைன்னு சொல்லிடுங்க.
விலைவாசி விண்ணை கிழித்துக்கொண்டு அண்ட வெளிக்கே சென்று விட்டது.அதற்கும் "விலைவாசி மிக மிக குறைவாக உள்ளது.உயர்வு என்பது எதிர்கட்சிகளின் ஊகமென ஒரு அறிக்கை கொடுத்துடுங்க.குடுத்துட்டு போர்வைய பொத்திகினு தூங்கு.நாடு வெளங்கும்.
சி பீ ஐ நீதிமன்ற கண்காணிப்போடு விசாரணை செய்துகொண்டிருக்கிறது.இந்த நேரத்தில் சரக்கடிச்சவன் ஓலருவதுபோல் இந்த பஞ்சுமிட்டாய் தலையன் கபில் சிபல் பெனாத்தியிருப்பது கேவலத்திலும் கேவலம்.இந்த கேவல செயலை செய்தமைக்கு நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியுள்ளார்.இவ்வாறு இடையில் குலைத்து வழக்கை திசை திருப்ப முயன்றாரென இவர் உள்ளே தள்ளப்பட வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக