வியாழன், 4 நவம்பர், 2010

ஒபாமா விஜயம்!!


ஒபாமா இந்தியாவிற்கு வருகிறாராம்!அதுவும் தீபாவளி நேரத்தில் தனது இந்திய பயணம் அமையுமாறு பார்த்து கொண்டாராம்!
மும்பையில் ஒபாமா உருவம் பதித்த டி ஷர்டுகள் வியாபாரம் .அறிவிலிகள் அதை வாங்கி அணிந்து கொள்வதும் காண சகிக்காததாகிவிட்டது.ஏனென்றால் அமெரிக்காவிலேயே உள்ளாட்சி போன்ற தேர்தலில் ஒபாமாவின் சனநாயக கட்சி படு தோல்வி என தகவல் மேலும் அமெரிக்க மக்கள் மதியில் ஒபாமா மீது வெறுப்பு அதிகரிப்பதாவும் தகவல்.அப்படியிருக்க இங்கிருக்கும் அடிமைகள் சாரி இந்திய இளைஞ்சர்கள் ஒபமாவின் உருவம் படித்த டி ஷர்ட் அணிவது கேலிகூத்து.
அவரின் இந்திய வருகைக்காக தினமும் 900 கோடி பாதுகாப்புக்காக மட்டும் இந்திய அரசு செலவழிப்பதாக செய்தி.அருமை!இதுவல்லவோ சனநாயகத்திற்கு அழகு!எசமானிர்காக அடிமைகள் பல கோடி செலவழிப்பது.
மேலும் அவுட் சோர்சிங்கை தடையை ஞாயபடுத்தி பேசும் ஒபாமா (அதாவது தனது அமெரிக்க மக்களும் வேலை பார்க்க வேண்டுமாம்.ஆதலால் இந்த தடை அவசியமாம்!) அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இருக்கும் முட்டுகட்டைகளை இந்திய அரசு நீக்க வேண்டுமாம்.
அடங்கப்பா! புல்லரிக்குது.இதையும் இந்திய ஆட்சியிலிருக்கும் அடிமைகள் மண்டையை ஆட்டி "இந்தியாவில் உங்கள் நிறுவனங்கள் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என விரைவ்ல் ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம்.
ஏற்கெனவே போபால் விட வாயு விவகாரத்தில் லட்சகணக்கில் மக்கள் இறந்தும் நோய்வாய்ப்பட்டும் இப்போது பிறக்கும் குழந்தைகளும் ஊனத்தோடு பிறப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு வழக்கம் ஆகி விட்ட நிலையில் யூனியன் கார்பைட் தலைவர் வாரன் ஆண்டர்சன்னை கைது செய்து இந்திய அனுப்புமாறு ஒபாமாவிடம் கேட்க துணிவுண்டா?
அல்லது மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல ஆண்டுகள் முன்பே அது பற்றி தெரிந்தும் இந்திய அரசுக்கு தகவல் தராமலும், மேலும் தாக்குதல் நடந்த பின்பு ஹெட்லியை விசாரிக்க இந்திய அதிகாரிகளுக்கு லேசிலா அனுமதி கிடைத்தது?(ஆனால் அமெரிக்க அதிகாரிகள் ஏதோ திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் இந்திய வந்து அஜ்மல் கசாபை விசாரித்து சென்றனர்.என்ன இருந்தாலும் எசமான் இல்லையா?)
இப்போதும் ஒபாமா இங்கு வருவது அமெரிக்க அணு சக்தி உற்பத்தி நிறுவனகள் அங்கு காயிலாங்கடை போல் போட்டு வைத்திருக்கும் அணுசக்தி உபகரணங்களை இந்தியா தலையில் கட்டுவதற்கும்,விவசாயத்தை முழுமையாக அபகரிப்பதற்கும் மேலும் ஒரிசா,ஜார்கண்ட் போன்ற கனிமவளம் நிறைந்த மலைப்பகுதியை கைப்பற்றவும் ஒப்பந்தம் போடத்தான்.நம் இந்திய ஆட்சியலார்களும் இளித்து கொண்டே அடிமை சாசனத்தில் கையெழுத்து போடத்தான் போகின்றனர்.
வாழ்க சன நாயகம்!!!!!

கடல் அலை ஓயட்டும் மீன் பிடிக்க போகிறேன்!!-காங்கிரஸ் அடிக்கும் கூத்து!!!


கடந்த சில மாதங்களாக பத்திரிகைகளில் நாரிக்கொண்டிருக்கும் ஐ .மு.கு அரசின் ஊழல் விவகாரங்கள்தான்.
முதலில் ராசாவின் அலைக்கற்றை ஓதிக்கீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி(எத்தனை பூஜ்யம் என நாட்டில் பாதி பேருக்கு தெரியாதென்பது வேறு விடயம்).அது டெல்லி வரை சென்று நாறிய பொது(தமிழனின் பெயர் எங்கெல்லாம் புகழ பெறக்கூடதோ அங்கெல்லாம் பெயர் பெறுகிறது) இங்கிருக்கும் முதல்வர் "ஹா ராசா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் தாக்குகிறீர்கள் எனவும் ராசாவோ பிரதமரின் அனுமதி பெற்றுதான் அனுமதி(அதான் ஊழல்) வாங்கித்தான் "அனைத்தையும்" செய்ததாகவும் கூறினார்.பின்பு சி பீ ஐ ரெய்டு நடத்திய பொது ஹா..வட நாட்டவரின் கைப்பிடி இறுகுகிறது எனவும் தமிழன் மேல் தொடுக்கப்படும் போர் போலவும் "உண்மை தமிழர்கள்" சிலர் கூப்பாடு போட பின்பு அந்த ஊழல் அலை ஓய்ந்தது.(அதாவது பத்திரிக்கைகள் பொறுத்தவரையில் நயன்தாரா பிரபுதேவாவுடன் ஓடிப்போன விவகாரம் முக்கியமாக்கபட்டது!)
பின்பு லலித் மோடி ஐ பி எல் முறைகேடு மற்றும் சசி தரூர் சுனந்தா புஸ்கருக்கு பங்கு வாங்கி கொடுத்தது என அது ஒரு சீசனில் செய்திகளை வந்தது.இதை புலனாய்வு பத்திரிக்கைகளும் நன்கு பயன் படுத்தி கொண்டு கல்லா கட்டின.(பிரபாகரன் உசுரோட இருப்பதாக கிராபிக்ஸ் படம் வெளியிட்டதை மறக்க முடியுமா?)
அதுவும் மறைந்து அடுத்து காமன் வெல்த் முறைகேடுகள் தினசரி வழக்கமாயின(கக்கூஸ் சரியில்லை தொடங்கி பாலம் இடிந்து விழுந்தது வரை..)
அப்போது காங்கிரஸ் சொன்னது "காமன் வெல்த் முதலில் முடியட்டும்.பின்பு நிச்சயமாக விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கபடுவர்" என கூறி அப்போதைக்கு எதிர்கட்சிகள் மட்டும் ஊடகங்களின் வாயை அடைத்தது!
அப்புறம் காமன் வெல்த் முடிந்ததும் ஏதோ விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டி கொண்டிருந்த பொது (சுரேஷ் களமாடி ஜாலியாக கடலை சப்பிட்டுகொடிருக்க)திடீரென மற்றோர் புகார்.
ஆதர்ஷ் சொசைடி ஊழல்.அதாவது இந்த கார்கில் போரில் உயிர் நீத்த வீர்களின் மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தார்க்கு கவுரவிக்கும் வகையில் மும்பையின் மைய பகுதியில் பல மாடி அடுக்கு வீடு(பிளாட்) கட்டியதில் ஊழல் நடந்தது வெளிவந்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் ராஜினாமா வரை கொண்டுவிட்டது.மேலும் பெரிய தலைகள் உருளும் போல!இப்போது காங்கிரஸ் சொல்வது "ஒபாமா வந்து சென்றபின் இந்த ஊழலை பற்றி விசாரிப்போம்" யப்பா இவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால் கடலில் அலை ஓயட்டும் பின்பு நான் மீன் பிடித்துவருகிறேன் என்பதுபோல் உள்ளது.என்ன செய்து தொலைக்க!இதற்கு பெயர்தான் சனநாயகமாம்!நம்ப வேண்டுமாம்.எதிர்த்து பேசினால் நக்சல் அல்லது பிரிவினைவாதி முத்திரை இருக்கவே இருக்கிறது!
ஒபாமாவிற்கு இரத்தின கம்பள விரித்து அடிமைகள் வரவேற்க எசமான் ஒபாமாவிற்கு பல் இளித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பர்(மன்மோகன் சிங்க் பற்றி சொல்லவே தேவையில்லை.32 பல்லும் தெரியும் புகைபடத்தில்!!!)

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒபாமாவும் கக்கூசும்!!!





கடந்த சில நாட்களாக இந்தியாவை பார்த்து கைகொட்டி சிரிக்காத நாடில்லை என கூறலாம்(உகாண்டா உட்பட.நான் அந்த நாட்டை இழிவாக கூறவில்லை!மற்றவர்களின் மாய பிம்பத்தை உடைக்க எத்தனம்!) எல்லாம் இந்த Congress Wealth சாரி Corrupted Wealth அட மன்னிச்சிருங்க அது சரியாகவே எழுத வரமாட்டேங்கிறது!Common wealth games யப்பா கடைசியாக சரியாக!இந்த காமன் வெல்த் போட்டிக்கு பங்கேற்க வரும் வீரர்களுக்கு தங்குமிடமாக காமன் வெல்த் கிராமம் என்ற பெயரில் தங்கும் விடுதி (ஏதோ அவசர "இந்திய" கதியில்!!!) தயார் என "நினைத்து" பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வீரர்கள் பத்திரிகையாளர்கள் இன்ன பிறர் பார்த்து அட!?! என்ன சொல்ல அதிர்ச்சி அடைந்தனர் என்பதை தவிர வேறென்ன வார்த்தை சொல்ல?!
அந்த கிராமத்தில் இருந்த கழிப்பறையின் நிலைமையை BBC தொலைக்காட்சி விவரித்து படங்களுடன் காட்டியது!


இன்ன பிற நாடுகளும்(எதிரி என கூறப்படும் பாக் உட்பட) இந்தியாவின் டங்குவாரை அத்துபுட்டன (மெட்ராஸ் பாஷைக்கு மன்னிக்கவும்)
சுரேஷ் கலைவாணி சாரி சுரேஷ் கல்மாடி அனைத்து கலவாணிதனதிற்கும் தானே பொருபேற்பதாக இப்போது ஒப்புகொண்டிருப்பது பல தலைகளை காப்பாற்ற ஒரு தலையை பலி கொடுக்கும் இந்தியாவின் பாரம்பர்யம் (போபால் வழக்கில் அன்றேசனை யார் தப்ப விட்டதென்ற பழிக்கு ராஜிவை காப்பாற்ற சமாதியிலிருக்கும் நரசிம்ம ராவ் பலி கொடுக்கப்பட்டார் என்பது நாடறிந்தது) இப்போதும் பின்பற்றபட்டிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டியதில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பூசல்(வழக்கம் போல்)வெடித்து பூதாகரமாகிவிட்டது.முதலில் இந்த பிரச்னையை கிளப்பிய மணிசங்கருக்கு பாராட்டு போய்கொண்டிருக்கிறது என்பதும் சரத் பவர் சுரேஷ் கல்மாடியை பகடி செய்திருப்பதும்(அதாவது சுரேஷ் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டுக்கொள்ள முயன்றதாகவும் தூக்குமேடையும் ஊழலால் செய்ததால் உடைந்து இவர் உயிர் பிழைததாகவும் கிண்டலடித்தார்),.
இப்போ அரசு என்ன செய்யும்?எப்படியோ கெஞ்சி கூத்தாடி பங்கேற்கமாட்டோம் என அறிவித்த நாடுகள் பலவும் சரி வந்து தொலைக்கிறோம் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.இப்போது என்ன?போட்டிகள் நடக்கும்..முடியும்..வழக்கு கல்மாடி மேல்..பதவி விலக வற்புறுத்தல்(ராசா விவகாரம் போல்)..கூச்சல் ..தர்ணா..பின் என்ன?வழக்கம் போல் இந்தியாவும் தேசிய குணமான மறதி முன்னுக்கு வர மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்படும்.
அப்புறம் என்ன?
நம்ம வெளி நாட்டில் வசிக்கும் எப்போதாவது இந்தியா வருகை தரும் மன்மோகனின் எசமான் ஒபாமா நவம்பரில் இந்திய விசயமாம்.அதற்குள் கக்கூசெல்லாம் அமெரிக்க பெனாயில் போட்டு கழுவப்பட்டு பளீச்சென்று ஆகிவிடும் .பின்னே?சிறந்த பிரதமர் விருதை தனது அடிமையான மன்மோகனுக்கு சமீபத்தில்தான் வழங்கியது எசமான் அமெரிக்கா.அதற்கு விசுவாசமாக ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் ,போபால் விவகார மூடி மறைப்பு என பல வகையில் "நன்றி கடனை" அடிமை செய்துவிட்டாலும் இப்போது மேலும் ஒரு கைமாறாக ஒபாமா தங்கவிருக்கும் அறையிலாவது தெருநாய் தூங்குவதோ(காமன் வெல்த் கிராமம் போல்) அல்லது கக்கூஸ் மகாகேவலமாக இல்லாமலோ பார்த்து கொள்ளப்படும்.ஏனென்றால் எசமானருக்கு அடிமை சேவை செய்ய அல்லவே பிறந்திருக்கிறோம்!!!

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஐயோ வட போச்சே!!!


கடந்த சில வாரங்களாக இது பற்றியே பேச்சு.,..இல்லை நான் சொல்வது எந்திரன் படத்தை பற்றியோ அல்லது வேறேதோ அல்ல..இது NDM-1 என்று சுருக்கமாக அழைக்கப்படும் New Delhi Metallo-beta-lactamase என்ற கிருமி அழிப்பான் எதிர்ப்பு நொதி (Enzyme) இந்தியாவிலிருந்து உருவானதாகவும் ஆதலால் தங்கள் நாட்டவர் யாரும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாமெனவும் பல நாடுகளில் எச்சரிக்கப்பட்டனர்.இதை கேள்விப்பட்ட நமது "தேசபக்தர்கள்" குய்யோ முறையோ என கூப்பாடு போட்டனர்.இது இந்தியாவில் வளர்ந்து வரும் மருத்துவ சுற்றுலாவை பாதிக்கும் எனவும் இது தேசத்திற்கு எதிரான ஒரு அறிவிப்பு எனவும் கூறினார்.
அப்படியா?!
முதலில் இந்த மருத்துவ சுற்றுலா பற்றி சிறிது பார்க்கலாம்.பல வெளிநாட்டவர் தங்கள் நாட்டில் ஒரு மருத்துவ சிகிச்சை பெற அல்லது ஒரு அறுவை சிகிச்சை செய்ய செலவு அதிகமாகும் என்பதால் அவர்கள் இந்தியா வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதனால் அரசுக்கு வருமானம் வருவதால் மற்ற நாடுகள் விஷ பிரசாரம் செய்கின்றன என எதிர் கட்சிகளும் ஆளும் கட்சியும் கூறினாலும் முதலில் இந்த மருத்துவ சுற்றுலாவல் யாருக்கு லாபம்?
ஒரு தலைவலி என போனாலும் அந்த ஸ்கேன் எடு இந்த ஸ்கேன் எடு என அது இதுவென்று பல ஆயிரங்களை பிடுங்கி "ஏன்டா இங்க சிகிச்சைக்கு வந்தோம் " என மக்கள் நொந்து போகும் அளவுக்கு அராஜகம் செய்யும் அபோல்லோ போன்ற இந்த தனியார் மருத்துவமனைகள் தான் .
மேலும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் "இந்தியா செல்ல வேண்டாம்" என சில நாடுகள் எச்சரித்தபோது பொங்கிஎழுந்தது தேசபக்தியால் அல்ல..இத்தகைய மேற்கூறிய மருத்துவமனைக்கு வருமானம் குறைந்து விடும்.(உள்நாட்டு மக்கள் பெரும்பாலும் இத்தகைய மருத்துவமனைகளின் அட்டூழியத்தை ஏற்கெனவே கேட்டதனாலோ அல்லது அனுபவப்படதனாலோ அங்கே செல்வதை தவிர்த்து விடுவதால் இந்த மருத்துவமனைகள் பெரும்பாலும் ஏதும் அறியாத வெளிநாட்டு நோயாளிகளின் பாக்கெட்டை பதம் பார்கின்றன.இப்போது இத்தைகைய எச்சரிக்கையால் வெளிநாட்டு நோயாளிகளின் வருகை குறைந்து போகுமானால் இவர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.எனவே தான் தாங்கள் அவ்வப்போது ஊழியம் அழும் கட்சிகளை தூண்டிவிட்டு இத்தகைய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
இல்லையேல் இந்த கட்சிகள் வாய் மூடி மௌனியாக இருப்பதையே விரும்பும்.
மருத்துவ சுற்றுலா பாதிக்கப்படும் ஆதலால் வெளிநாட்டு நோயாளிகள் பாதிக்கபடுவர் என கவலைப்படும் கூப்பாடு போடும் எந்த கட்சியோ அமைப்போ முதலில் இங்கிருக்கும் சிகிச்சை பெற வசதியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கும் பணம் பிடுங்கும் பேய்களை அத்தகைய போக்கை கண்டிக்க துணிவுண்டா?
இல்லை.ஏனெனில் இந்த பாவப்பட்ட சிகிச்சை பெற வசதியில்லாத இந்தியர்களால் தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று இவர்கள் நினைக்கின்றனர்.
அதே நேரம் இந்த வெளிநாட்டு நோயாளிகளின் வருகையால் தனியார் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும்.அதில் இவர்களுக்கு "பங்கு" வெட்டப்படும்.
ஆம் ஞ்யாயம்தான்.பணம்தானே முக்கியம் ஏழை மக்கள் எக்கேடு கெட்டா இவர்களுக்கு என்ன?
வாழ்க சன நாயகம்!!!!