வியாழன், 4 நவம்பர், 2010

ஒபாமா விஜயம்!!


ஒபாமா இந்தியாவிற்கு வருகிறாராம்!அதுவும் தீபாவளி நேரத்தில் தனது இந்திய பயணம் அமையுமாறு பார்த்து கொண்டாராம்!
மும்பையில் ஒபாமா உருவம் பதித்த டி ஷர்டுகள் வியாபாரம் .அறிவிலிகள் அதை வாங்கி அணிந்து கொள்வதும் காண சகிக்காததாகிவிட்டது.ஏனென்றால் அமெரிக்காவிலேயே உள்ளாட்சி போன்ற தேர்தலில் ஒபாமாவின் சனநாயக கட்சி படு தோல்வி என தகவல் மேலும் அமெரிக்க மக்கள் மதியில் ஒபாமா மீது வெறுப்பு அதிகரிப்பதாவும் தகவல்.அப்படியிருக்க இங்கிருக்கும் அடிமைகள் சாரி இந்திய இளைஞ்சர்கள் ஒபமாவின் உருவம் படித்த டி ஷர்ட் அணிவது கேலிகூத்து.
அவரின் இந்திய வருகைக்காக தினமும் 900 கோடி பாதுகாப்புக்காக மட்டும் இந்திய அரசு செலவழிப்பதாக செய்தி.அருமை!இதுவல்லவோ சனநாயகத்திற்கு அழகு!எசமானிர்காக அடிமைகள் பல கோடி செலவழிப்பது.
மேலும் அவுட் சோர்சிங்கை தடையை ஞாயபடுத்தி பேசும் ஒபாமா (அதாவது தனது அமெரிக்க மக்களும் வேலை பார்க்க வேண்டுமாம்.ஆதலால் இந்த தடை அவசியமாம்!) அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இருக்கும் முட்டுகட்டைகளை இந்திய அரசு நீக்க வேண்டுமாம்.
அடங்கப்பா! புல்லரிக்குது.இதையும் இந்திய ஆட்சியிலிருக்கும் அடிமைகள் மண்டையை ஆட்டி "இந்தியாவில் உங்கள் நிறுவனங்கள் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என விரைவ்ல் ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம்.
ஏற்கெனவே போபால் விட வாயு விவகாரத்தில் லட்சகணக்கில் மக்கள் இறந்தும் நோய்வாய்ப்பட்டும் இப்போது பிறக்கும் குழந்தைகளும் ஊனத்தோடு பிறப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு வழக்கம் ஆகி விட்ட நிலையில் யூனியன் கார்பைட் தலைவர் வாரன் ஆண்டர்சன்னை கைது செய்து இந்திய அனுப்புமாறு ஒபாமாவிடம் கேட்க துணிவுண்டா?
அல்லது மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல ஆண்டுகள் முன்பே அது பற்றி தெரிந்தும் இந்திய அரசுக்கு தகவல் தராமலும், மேலும் தாக்குதல் நடந்த பின்பு ஹெட்லியை விசாரிக்க இந்திய அதிகாரிகளுக்கு லேசிலா அனுமதி கிடைத்தது?(ஆனால் அமெரிக்க அதிகாரிகள் ஏதோ திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் இந்திய வந்து அஜ்மல் கசாபை விசாரித்து சென்றனர்.என்ன இருந்தாலும் எசமான் இல்லையா?)
இப்போதும் ஒபாமா இங்கு வருவது அமெரிக்க அணு சக்தி உற்பத்தி நிறுவனகள் அங்கு காயிலாங்கடை போல் போட்டு வைத்திருக்கும் அணுசக்தி உபகரணங்களை இந்தியா தலையில் கட்டுவதற்கும்,விவசாயத்தை முழுமையாக அபகரிப்பதற்கும் மேலும் ஒரிசா,ஜார்கண்ட் போன்ற கனிமவளம் நிறைந்த மலைப்பகுதியை கைப்பற்றவும் ஒப்பந்தம் போடத்தான்.நம் இந்திய ஆட்சியலார்களும் இளித்து கொண்டே அடிமை சாசனத்தில் கையெழுத்து போடத்தான் போகின்றனர்.
வாழ்க சன நாயகம்!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக