ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல திசைகளிலிருந்தும் குரல் எழும்பி வரும் நிலையில்(சட்டசபை பக்கம் தலைவைத்தும் படுக்காத!!!) எதிர்கட்சி தலைவி இது குறித்து குடியரசு தலைவருக்கு தந்தி அனுப்புங்கள் என கூக்குரலிட்டார் .அவ்வாரே அம்மாவின் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று Times Now தொலைகாட்சிக்கு ஜெ அளித்த பெட்டியில் ராசாவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் தயங்குவது ஏன் என தனது யூகத்தை கூறினார்.அதில் காங்கிரஸ் தனது கட்சியில் ஊழல் குற்றசாட்டில் ஈடுபட்ட கல்மாடி மற்றும் சவானை நீக்கி விட்டதாகவும் ராசாவை நீக்கினால் எங்கே திமுக மத்தியில் ஆதரவை வாபஸ் வாங்கிவிடும் என்ற அச்சத்தினால்தான் என ஜெ கூறினார்.
மேலும் அவர் கூறும்போது ராசா மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் திமுக ஆதரவை விளக்கி கொண்டாலும் தனது கட்சி மற்றும் தனது கூட்டணி கட்சிகள் மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் எனவும் சந்துல சிந்து பாடினார்.
அதாவது காங்கிரசிற்கு திமுக கூட்டணியை சேர்ந்த 18 எம்.பிக்கள் தற்போது ஆதரவளிப்பதாகவும் ஒரு வேலை ராசா மீது எடுக்கும் நடவடிக்கையால் அவர்கள் வாபஸ் வாங்கினால் தனது அதிமுக -வை சேர்ந்த ஒன்பது எம்பிக்களும் மேலும் கூட்டணி கட்சி எம்பிக்களும் சேந்து அதே பதினெட்டு எம்பிக்கள் ஆதரவை எந்த முன் நிபந்தனை இன்றியும் ஆதரவளிக்க தயார் என அறிவித்துள்ளார்.
ஆகா! இதுவல்லவோ அரசியலுக்கு அழகு!
கடந்த ஆண்டு இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர் கொன்று குவிக்க ராஜபக்சே அரசுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய தமிழர் விரோத காங்கிரசு அரசுக்கு அம்மையார் ஆதரவளிக்க தயாராம்!
ஏற்கெனவே இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் புதைமணலில் சிக்கி கொண்டிருப்பதாகவும் தன பக்கம் வருமாறும் தூது விட்டார் அம்மையார்.ஆனால் பலிக்கவில்லை!
அப்போ விடுதலைப்புலி கோஷம் விடாமல் தூக்கத்திலும் எழுப்பும் வைகோவின் கதி?
ஒரு பிரச்னையும் அவருக்கு இல்லை.இப்போ நம்ம திருமா ஒரு பக்கம் காங்கிரசு கூட்டணி அரசில் அங்கம் வகித்து கொண்டே மறு பக்கம் தினமும் தமிழக மீனவர் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையா? தமிழன் செத்தால் எவனுக்கென்ன?
அப்போ இந்த அம்மையார் கடந்த ஆண்டு இலகையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் தினமும் தமிழக மீனவர் கொல்லப்படுவதை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நடத்திய ஆர்பாட்டங்கள்,மற்றும் பெட்ரோல் விலையேற்றம்,முன்பேர வணிகம் ..etc..etc.. ஆகியவற்றை கண்டித்தும் நடத்திய ஆர்பாட்டங்கள் வெறும் வெற்று கூச்சல் என இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது!
இருக்கவே இருக்கு பன்ச் டயலாகு :"அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை"
வாழ்க சன நாயகம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக