ஒபாமா இந்தியாவிலிருந்து புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் காமன் வெல்த் ஊழல் புகழ் கல்மாடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் இருவரும் நீக்கப்பட்டனர்.
(பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் காங்கிரசில் வேறு சில பதவிகள் வழங்கப்படும்.அது வேறு விஷயம்!காங்கிரசின் பல ஆண்டு உக்தி அது .)
இது பிள்ளையாரை பிடிக்க எதுவோ ஆன கதையாய் ஆனது!.காங்கிரஸ் இவ்விருவரையும் நீக்கிய நோக்கம் ஏதோ ஊழலுக்கு எதிரான போர்! ஆஹா! ஓஹோ! என ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயன்றது.
(நன்றி:தினமணி)
விசாரணை கமிஷன் வைப்பது எதற்கு என சின்ன குழந்தைக்கும் தெரியும்!பல ஆண்டுகள் ஊழல் விசாரணை ஒய்வு பெற்ற நீதியரசர் குழுவால் நடத்தப்படும்.பின்னர் "இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை" என கூறி அனைவரும் விடுதலை செய்யப்படுவர்.அல்லது ஒரு சில கீழ் மட்ட தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவர்(அவர்களைத்தானே இவர்களால் தண்டிக்க முடிகிறது!!!).அப்புறம் அந்த கமிஷனின் ஆயுட்காலம் முடிக்கப்படும்.அம்புட்டுதேன்.
காங்கிரஸ் இவ்வுருவரையும் நீக்கிய காரணம் மற்றொன்று இருக்கிறது.அது தலையை காப்பாற்ற வாலை வெட்டிவிடும் தந்திரம்.ஊழலில் "பெரிய தலைகள்" பல ஈடுபட்டதால் அவர்களை காப்பாற்ற இவ்விருவரும் நீக்கப்பட்டனர்(அதற்காக கல்மாடி மற்றும் சவானிர்காக நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்க கூடாது).அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அதே நேரம் இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், கார்பரடே நிறுவனங்கள் (இந்த கார்பரடே நிறுவனங்கள் மட்டும் ஒவ்வொரு ஊழல் விவகாரத்திலும் சம்பந்தம் இருந்தாலும் அவர்கள் தப்பிவிடுகின்றனர்!!)
வெறும் ராஜினாமா நாடகங்கள் ஊழலை ஒழித்து விடாது!விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக(முக்கியமாக வாய்தா கொடுக்காமல்) விசாரணை நடத்தி ஊழலில் ஈடுபட்ட அனைவரும் (கார்பரடே நிறுவனங்கள் உட்பட) தண்டிக்கப்பட வேண்டும்.அப்போதுதான் காங்கிரஸ் Clean image மாயை கொஞ்சமாவது நிசமாகும்.இல்லையேல் வழக்கம் போல் மக்கள் மறந்து, பத்திரிகைகள் மறந்து, ஊழல் செய்தவரே அந்த ஊழலை மறக்கும் (வழக்கமான!) நிலைமை மாறும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக