திங்கள், 15 நவம்பர், 2010

டாட்டா என்கிற சாத்தான் ஓதிய வேதம்!

இப்போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என பத்திரிகை மற்றும் பிற ஊடகங்களில் இதே தினசரி பேச்சாகிப்போன நிலையில் ரத்தன் டாட்டா நேற்று திருவாய் மலர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்  தான் விமான சேவை தொடங்க தொன்னூறுகளில் விரும்பியதாகவும் அதற்கு அனுமதி பெற மூன்று பிரதம மந்திரிகளை சந்தித்ததாகவும்  கூறினார்.மேலும் அவர் கூறுகையில் இந்த பிரதம மந்திரிகள் போடாத முட்டுக்கட்டையை ஒரு விமான போக்குவரத்து அமைச்சரால் (யார் என இவர் பெயர் சொல்லவில்லை) தடைபட்டது என்றார்.
அந்த பெயரிடப்படாத விமான போக்குவரத்து அமைச்சர் இதன் டாடாவிடம் 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு இவர் இசைந்து கொடுக்காததால் விமான சேவை தொடங்கும் தனது கனவு தரைமட்டமாகிவிட்டதாம்!
இவர் இத்தனை வருடங்களாக இதுபற்றி வாயை திறக்காமல் இப்போது திறந்தது ஏன் என பல கேள்விகள் எழுந்தாலும் இவர் அந்த மந்திரி லஞ்சம் கேட்டவுடன் அப்போதே ஊழல் ஒழிப்பு துறைக்கோ அல்லது பிரதமருக்கோ(இவர் பிரதமரை சந்திப்பது சாமான்ய மக்களை போல் அவ்வளவு கடினம் இல்லை) புகார் தெரிவித்திருக்கலாம்.அல்லது ஊடகங்களுக்கு சொல்லியிருக்கலாம்.
அப்போதெல்லாம் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்போது "ஹோ!  அவர் லஞ்சம் கேட்டார் நான் கொடுக்கவில்லை!" என்பதுபோல் கூறி தன்னை ஒழுக்க சீலர்  போல் காட்டிகொள்வது வெறும் விளம்பரத்துக்காக அன்றி வேறெதற்கு?
அப்போது இவர் கூற வருவது இத்தனை வருட வியாபார வாழ்க்கையில் ஒருமுறை கூட கம்பெனி தொடங்குவதற்கோ அல்லது விரிவாக்கதிற்கோ  இவர் லஞ்சம் கொடுக்கவில்லை என கூற தயாரா?
 மேற்கு வாங்க மாநில சிங்கூரில் தனது நானோ சார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கு இவர் செய்த தகிடுதத்தங்கள் யாருக்கும் தெரியாது அல்லது மறந்திருப்பார் என நினைத்தாரா?
சிங்கூரில் விவசாய விளைநிலங்களை விவசாயகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டு "நிலத்தை கொடுக்க முடியாது" என போராடியவர்களை அங்கிருந்த டாடாவின் ஏவல் அரசாய் மாறிப்போன இடதுசாரி அரசின் காவல் துறையை விட்டு தடியடி ,கைது போன்ற அராஜகங்களை அரங்கேற்றியத்தை யாரும் மறந்திருக்க முடியாது.இந்த சிங்கூர் சம்பவம்  வெறும் ஒரே ஒரு உதாரணம் மட்டுமே.
இவர் நிலம் பறித்து அதில் கட்டிய தொழிற்சாலைகள் பலப்பல.
இப்போது அவர்கள் லஞ்சம் கேட்டார்கள் .நான் கொடுக்கவில்லை என கூறுவது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது.அடங்கப்பா இது அந்தர்பல்டிடா சாமி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக