கடந்த ஒரு வாரமாக இந்தியாவே நாரி கொண்டிருக்கும் இரு விவகாரங்கள்.முதலில் ஊழலில் வெள்ளைகாரனை விட அதிகம் சுரண்டி சாதனை படைத்த அலைகற்றை ஊழல் இரண்டு எடயூரப்பா 6000 கோடி நிலா மோசடி .கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வந்த பாஜகவிற்கு செக் வைக்கும் வகையில் எட்யூர்ப்பாவின் ஊழல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது.இது காங்கிரசின் களவானித்தனத்தில் ஒரு வண்ணம்.அதற்காக எடயூரப்பா அப்பாவி என்று நான் சொல்லவில்லை.எல்லாரும் கேப்மாரிங்கதான்.
ஆனால் தனது அமைச்சரவையில் இருந்த ஊழல் மன்னன் ராசாவை நீக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடித்த காங்கிரஸ் இப்போது பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கூறுவது கேலிக்கூத்து .
இப்போது நடக்கபோவது என்ன?அதான் எல்லாருக்கும் தெரியுமே..இப்படியே கொஞ்ச நாள் ஆர்பாட்டம் செய்துவிட்டு சிறிது காலம் ஆனவுடன் இரண்டு கேபமாரிதனங்களும் மூடி மறைக்கப்படும்.
ஊழல் பணத்தை மீட்கவோ அல்லது அலைகற்றை பெற்ற நிறுவங்களை தடை செய்வதோ இந்தியா சனநாயகத்தில் நடக்கும் என எதிர்பார்ப்பவன் அடிமுட்டாள்.
ஏற்கெனவே இந்த ஊழல் பணத்தை கொண்டு சிலர் அமேசான் காட்டில் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி போட்டுள்ளதாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.இது வெறும் சாம்பிள்தான்.நிலம் வாங்குவது தீவு வாங்குவது சொத்து வாங்குவது என ஊழல் பணம் அனைத்தும் கரைக்கப்படும்.மீதம் இருக்கும் பணம் ஸ்விஸ் பாங்கில் பத்திரமாக போடப்படும்.அதை இங்க கொண்டுவர நாதியற்ற ஒரு அரசுதான் இங்கு நடந்து வருகிறது என அனைவருக்கும் தெரியும்.
அப்புறம் வழக்கம் போல் அம்பானி போன்ற இந்த ஊழலால் லாபமடைந்தவர்களின் துணையுடன் மீண்டும் இவர்களே ஆட்சி பிடிப்பார்கள்..the cycle goes on....வாழ்க சன நாயகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக