அரசியல் பற்றியே எழுதி வரும் நேரத்தில் தமாசுக்கு இடையில் சரத்குமாரின் பேட்டி.கொஞ்சம் பழசுதான்!பாருங்கள் மனுஷனின் தன்னம்பிக்கையை!!!!
***************
விடியல் படத்தின் பிரஸ் மீட்டில் சரத் பேசியவயே பின்வருவன!
விடியல் படத்தைவிட வேறு விவகாரங்கள் பற்றியே அவர் பேச்சு அதிகமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் ஆஸ்கர் விருது பற்றி அவர் பேச்சு திரும்பியது. அப்போது அவர் இப்படிச் சொன்னார்:
நான் சினிமாவில் 27 வருஷமா இருக்கேன். சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய வெற்றிப் படங்களில் நடித்தவன் நான்.
நடிக்க வந்ததிலிருந்தே ஆஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது.
எப்படியாவது ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று.
நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.
இப்போது நான் நிறைய மலையாளப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒரு கன்னடப் படம் பண்ணுகிறேன். பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் பண்ணுவேன். நிச்சயம் ஆஸ்கர் வெல்வேன்.
ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஆஸ்கர் வெல்லலாம். {விட்டு கொடுக்கும் மனப்பான்மை? }
எப்படியும் 90 வயது வரை நான் இருப்பேன். அதற்கான உடல் மன பலம் எனக்கு இருக்கிறது. 85 வயதில் கூட டூயட் பாட முடியும். டூயட் பாட கால்கள் நன்றாக இருந்தால் போதும். மற்றபடி வயது ஒரு தடையில்லை.
**************************************************************************
.
(ஒரு சின்ன கற்பனை..ஹீ ஹீ மட்டமான Graphics-க்கு மன்னிக்கவும்! ;))
அடங்கப்பா!தன்னம்பிக்கையின் அளவுகோல் உடைந்தது!
மனுஷன் இன்னா மாதிரி கனவு காணுறார்!முதல்ல இவுரு கட்சியே பூட்ட கேசு.முதல்ல திமுகவுல இருந்து விலகி அப்புறம் அதிமுகவுல ஒரு வாரம் அடுத்த வாரம் சொந்த கட்சி.....அப்புறம் மறுபடியும் கலிஞ்சருக்கு ஜால்ரா!!!!
இப்போ ஆஸ்கார் விருது வாங்க போறாராம்!
ரசூல் பூக்குட்டி மற்றும் ரெஹ்மான் வாங்கும்போது நான் வாங்க கூடாதா என கேட்கிறார்.
அது சரி அந்த இருவருக்கும் அவார்டு கொடுத்ததின் காரணமே டன்னி பாயில் என்ற வெள்ளைகார இயக்குனர் ச்லம்டாக் படத்த எடுத்ததால்தான்(அதே 2008 வருடத்தில் வெளியான ரீடர் படத்த விட இது சிறந்த படமாம் ..தமாசு!)
இது பற்றி ஷாஜி ஏற்கெனவே எழுதியிருக்கிறார்.(Curious case of Benjamin button படத்தின் பின்னணி இசை பற்றி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.)
சரி இப்போ சரத்துக்கு இன்னா ஆச்சி ஒன்னியும் வெளங்கல!ஓவரா வெயில்ல சூட்டிங் போனதால ஏற்பட்ட பக்கவிளைவா இருக்கலாம்! ராதிகா சித்தி எதுக்கும் ஒருதபா சரத்த டாக்டராண்ட கூட்டிகினு போறது நல்லது.
இப்படிதான் கடந்த இருபது ஆண்டா ஒரு ஒலக நாயகன் சொல்லிகினு இருந்தார்.அப்பால "சீ! இந்த பழம் புளிக்கும்!" கதையா "நான் அவர்களுக்கு கமல்ஹாசன் விருது கொடுக்கத்தான் ஆசை" என்று அந்தர் பல்டி அடித்தார்.
நீங்களும் "நான் அவர்களுக்கு சரத் விருது கொடுக்கத்தான் ஆசை" என பல்டி அடிக்கலாம்!
அப்புறம் நீங்க "நான் நூறு வயசு வாழ்வேன் தொண்ணூறு வயசு வரை டூயட் பாடுவேன்" என்பதெல்லாம் என் கவலை இல்லை நீங்கள் SN.லக்ஷ்மி கூட வேணும்னா டூயட் பாடுங்கள்.நான் உங்கள் படம் பார்ப்பதில்லை(ரிஸ்க் எடுக்க முடியல சார்!!.அதான்!)
எடையில அந்த ரஜினிய ஏன் இழுத்தார்னு பிரியல..அவுரே "நான் நேத்து வருவேன்! நாளைக்கு வருவேன் அவன் சொன்னா வருவேன் இவன் சொன்னா வருவேன்" என அரசியில்ல கொரலி வித்த காட்டிகினு இருந்தார்.இப்போதான் கொஞ்சம் தெளிஞ்சிருக்கார் .இமயமலை அதிகமா போறதுக்கெல்லாம் ஆஸ்கார் குடுப்பாங்களான்னு தெரியலேயே ராசா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக