பல ஆண்டுகளாக நம் இந்தியர்களிடம் மாறாமல் இருப்பது அமெரிக்கா பித்து.எப்படியாவது அமெரிக்கா சென்றுவிட வேண்டும்.குறிப்பாக உயர்தட்டு வகுப்பினரிடமும் மேல் நடுத்தர வர்கத்தினரிடமும் தவறாமல் இருப்பது இது.ஆங்கிலத்தில் பேசுவது உயர்வு தமிழில் பேசினால் இழிவு என்னும் ஒரு அசிங்கமான மாய வலையை உருவாக்கியவர்களும் இவர்களே அதில் முதலில் போய் விழுந்தவர்களும் இவர்களே.இப்போது நடக்கும் சம்பவம் அதற்கொரு பேரிடியாக அமைந்துள்ளது.ஒரு போலி பல்கலையால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கா பித்துபிடித்த மாணவர்கள் எப்படியாவது அமெரிக்கா மண்ணை(அல்லது கான்க்ரீட்டை !!)மிதித்து ஜென்ம சாபல்யம் அடைய துடியாய் துடித்து தாங்கள் செல்வது போலி விசா என்பது கூட தெரியாமல் இந்த நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் "மேதைகள்" அமெரிக்காவில் மாட்டிகொண்டிருக்கின்றனர்.
சிலர் சொல்கிறார்கள் "இது மாணவர்களின் தவறன்று.அந்த பல்கலையும் போலி விசாவுக்கு காரனமானவர்களுமே பொறுப்பென்று!" சரி அவ்வாறே இருக்கட்டும்.
இப்போது என்ன செய்ய வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அவர்கலேயன்றி இந்த மானவர்கள அல்ல.ஆனால் வந்தாருக்கு "செம மரியாதை" கொடுப்பதில் பெயர் போன(ஜார்ஜ் பெர்னாண்டசை உரித்து சோதனை போட்ட மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்து சோதனையிட்ட...etc..etc..) அமெரிக்கா அரசு செய்திருப்பது மிகவும் கீழ்த்தனமான கற்கால அடிமைகளை நடத்தும் முறையை பின்பற்றியிருக்கிறது.
அந்த காலத்தில் அடிமைகளின் கால்களில் சங்கிலியை கட்டி அதன் முனையை ஒரு இரும்பு குண்டில் இணைத்து விடுவர்,அதனால் அந்த அடிமை வெகுதூரம் அந்த குண்டை தூக்கி செல்லமுடியாது.
அதன் பின் சற்று நவீன முறையாக Radio tagging முறை வந்தது.அதாவது காட்டிலோ அல்லது வன காப்பகத்திலோ விலங்குகள் எங்கு செல்கின்றன அவை வேட்டையாடபடுகின்றனவா என கண்காணிக்க அதன் காதுகளில் ஸ்டேப்ளர் போல் ஒரு சிப் அடிக்கப்படும்.பின்னர் GPS மூலம் அவைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.
அதே நடைமுறையை அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது!!இம்முறை விளன்குகளுக்கல்ல.இந்தியர்களுக்கு!!அவர்களை கண்காணிக்க செய்யப்பட்ட நடவடிக்கையாம் இது.அவர்களின் காலில் கட்டி விட்டிருக்கிறது .சபாஷ்.
ஆ தீவிரவாதி! ஆ வெடிகுண்டென! இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் எதை கண்டாலும் மிரளும் பயந்தான்கொள்ளி அமெரிக்கா இம்முறை தெரியாமல் மாட்டிக்கொண்டுவிட்ட இந்தியா மாணவர்களையும் பயங்கரவாதியாக பார்க்கிறது.அது சரி இந்தியா பெண் தூதர் சேலை கட்டி வந்தாரென்ற ஒரே காரணத்திற்காக அவரை தொட்டு துழாவி சோதனையிட்ட "நாகரிக" மனிதர்களல்லவா அமெரிக்கர்கள்.
இனியும் இந்த அமெரிக்கா பித்து தேவையா?அமெரிக்கா என்ற நாடு உருவானதே பூர்வகுடி இந்தியர்களின் ரத்ததில்தான்.இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.முன்பு அங்கு செல்லும் இஸ்லாமியர்கள் தீவிரவாதியென சந்தேகப்பட்டு கொடுமைபடுத்தியது அமெரிக்கா.இப்போது இந்தியா மாணவர்கள் .அப்படிதான் மானம்கெட்டுபோய் அங்கு இருக்க வேண்டுமா?அவர்கள் உடனே நாடு திரும்பட்டும் மானமுள்ளவரெனில்.!!!
அமெரிக்காவின் கீழ்த்தனமான நடவடிக்கையை திருத்த நினைப்பது மடத்தனம்.அது அவர்கள் ரத்தத்தில் ஊறி போனது.இனியாவது இந்தியா இளைஞ்சர்கள் அமெரிக்கா பித்தை விட்டு நம் நாடு முன்னேற உழைக்கட்டும்.
இறுதியாக வள்ளுவரின் குறள்.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
அர்த்தம்: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக