வியாழன், 10 பிப்ரவரி, 2011

மீனவர்களே ஒன்றுபடுங்கள்

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க போவதும் அவர்கள் தாக்கபடுவதோ கொல்லபடுவதோ சித்ரவதை செய்யபடுவதோ நாள்தோறும் வழக்கமாகிவிட்டது.இதை கண்டித்து எதிர்கட்சிகள் (ஜெயலலிதா பாணியில் "மைனாரிட்டி திமுக அரசை கண்டித்து மைலாப்பூரில் ஆர்பாட்டம்"..blah blah...)ஆர்ப்பாட்டம் நடத்துவதும் முதல்வரோ "வழக்கம் போல்" தில்லிக்கு  கடிதம் எழுதுவதுதான் அந்த ஒரு தாக்குதல் விவகாரம் முடிவுக்கு வரும்.அப்புறம் மீண்டும் தாக்குதல் மீண்டும் ஆர்பாட்டம் ,கடிதம், கண்டனம்..மீண்டும் தாக்குதல்.
          இப்படியே ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 1983 இல் நடக்கிறது.இது வரை அதிகாரப்பூர்வமாக 538 (புஷ்பவனம் மீனவர் ஜெயகுமார் கழுத்தில் சுருக்கால் இறுக்கப்பட்டு கொள்ளப்பட்டது வரை) மீனவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.ஆனால் மீனவர்கள் சொல்வது இது நிச்சயம் 1500 முதல் 2000 வரை இருக்கும் என்பதே.இது தவிர காயம்பட்டவர்கள் மண்டையில் குண்டு பாய்ந்து படுத்த படுக்கையாக இருப்பவர்கள் வேறு.ஆக ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதே உண்மை.
        இரு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் மீனவர்களுக்கு ஒரு விடிவும் கிடைத்தபாடில்லை.இருவரும் மாறி மாறி குற்றம் சுமத்தி கொண்டதுதான் மிச்சம்.
        மத்திய அரசை பற்றி சொல்ல தேவையில்லை.தமிழன் என்றாலே இளிச்சவாயன்.தமிழன் செத்தால் என்ன! என்ற போக்கு என்றும் மாறியதில்லை.இன்னும் சொல்லபோனால் இலங்கையில் நடந்த இனபடுகொலைக்கு ஆயுதம் ரேடார் உதவி செய்தது மத்திய அரசு.ஆக தமிழனை அழிக்க மத்திய காங்கரஸ் ஆற்றிய பங்கு இன்றியமையாதது  .இங்கு சிங்கள கடற்படையின் தாக்குதல்களை கண்டித்து அறிக்கை போராட்டம் நடத்தும் திருமாவளவன் தனது எம்பி பதவியை கூட த்யாகம் செய்யமனமில்லாமல் காங்கரஸ் கூட்டணியில் விடாமல் ஒட்டிகொண்டிருக்கிறார்.இவர் தமிழனின் உரிமைக்கு போரிடுகிராராம்.அடபோங்கையா!
          கருணாநிதி தனது வாரிசுகளின் பதவி விவகாரமோ அல்லது தொகுதி பங்கீடு விவகாரமாக இருந்தால் உடனே டில்லிக்கு விமாத்தில் தனது படை பரிவாரங்களோடு போய் விடுவார்.ஆனால் தமிழக மீனவன் செத்தால் வெறும் கடிதம் மட்டுமே.இவர் தமிழின தலைவராம்!
          ஜெயலலிதா ஏதோ இப்போது தேர்தல் வரவிருப்பதால் சென்னையில் இருக்கிறார்.இல்லையேல் கொடநாட்டில் ஓய்வெடுத்து கொண்டு நாளொரு அறிக்கை விடுவார்.மீனவன் செத்தால் அவருக்கென்ன!வைகோவோ பிரபாகரன் உயிரோடு இருப்பதில் இருக்கும் கவலை மீனவன் விவகாரத்தில் இல்லை.இவரது கருத்துகளோடு இவரின் கூட்டணி கட்சி தலைவர் ஜெயாவே ஒத்துபோகமாட்டார் என்பது சொல்லி விளங்கவேண்டியதில்லை.
         ஆக கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து கட்சிகளும் ஏதோ மேம்போக்காகத்தான் இந்த மீனவர் தாக்குதல் மற்றும் கொலை விஷயத்தில் இருந்து வந்துள்ளது.
        கிட்டத்தட்ட 124 மீனவர் சங்கங்கள் தமிழகத்தில் உள்ளனவாம்.ஆனால் அனைத்து சங்கங்களுக்கும் ஒரே ஒற்றுமை இல்லை.ஒரு குழு இலங்கைக்கு சொம்படிக்கும் குழு மற்றொர்ன்று புலிகள் ஆதரவென சிதறி கிடக்கின்றன.
       அது மட்டுமன்றி நாகபட்டினத்தில் மீனவன் கொல்லபட்டால் அந்த மாவட்ட  மீனவன் மட்டும்தான் ஆர்பாட்டம் நடத்துகிறான்.ஆனால் மற்ற மாவ்வட்ட மீனவர் சங்கங்கள் வெறும் கண்டனம் கொடுப்பதோடு தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி கொள்வது  மாபெரும் தவறு.
        வெறும் சங்கங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீரவில்லை.மீனவர்கள் ஒன்றுபட வேண்டும்.சங்கங்கள் மாவட்டங்கள் தாண்டி ஒன்றுபட வேண்டும்.ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில்  ஆர்பாட்டம் செய்ய வேண்டும்.
        மத்திய அரசு கடலோர மேலாண்மை சட்டம் மூலம் கடலோர மீனவர்களை அடித்து விரட்டிவிட்டு அந்த கடலோர பகுதிகளை கார்பரேட் நிறுவங்களுக்கு தாரை வாக்கும் திட்டம் வெகு நாட்களாகவே திட்டமிடப்பட்டு வருகிறது.ஆகவே இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க மீனவர்கள் ஒன்று பட வேண்டும்.சங்கங்கள் தாண்டி.
       இதில் இந்தியா இலங்கை கடற்படை கூட்டு ரோந்து என்ற யோசனை முன்வைக்கபடுவது இன்னும் அதிக ஆபத்திற்கே மீனவர்களை கொண்டு செல்லும்.மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கலாம்.பின்னே சிங்கள கடற்படை சுட்டு கொல்லுவான் நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?
       இந்தியா கடற்படையின் லட்சணம் ஊருக்கே தெரியும்.எங்கேயோ இருக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்களை பிடிக்கும் இந்த "தெறமசாலிகள் " இங்கு தமிழக மீனவன் சிங்கள கடற்படையால் அடித்து துன்புறுத்தி வலை அறுத்து படகுகளை கவிழ்த்து மீன்களை பிடுங்கி ஐஸ் கட்டியில் படுக்க வைத்து அடிப்பது போன்று நாகரீகமில்லாத காட்டுமிராண்டிக்கு பிறந்த சிங்களவனின் அநியாயங்களை வாயில் விரல் வைத்து சூப்பிக்கொண்டு வேடிக்கை பார்த்ததை தவிர வேறென்ன கிழித்து விட்டது?அப்புறமெதற்கு கடற்படை?கடலை வேடிக்கை பார்கவா?ஹோவேர்க்ராப்ட்  எதுக்கு?கடலில் விளையாடவா?அட போங்கைய்யா!
        இனி மீனவர்கள் மத்திய மாநில மானம்கெட்ட அரசுகளையோ அல்லது மீன்வர்கள உயிர்களை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளையோ(சமீபத்தில் சுஷ்மா சுவராஜின் விஜயம்.இத்தன வருஷமா தாக்கப்பட்டபோதும் கொல்லப்பட்டபோதும் நீ எங்கே போன?ஒன்கட்சி எங்க போச்சு?) நம்பாமல் தாங்களே சங்கம் மாவட்டமா பாராமல் ஒன்றுபட்டு மத்திய அரசு அலுவகங்களை முற்றுகையிடுவதும் ரயில் மறியல் போன்ற வற்றை செய்தால் மட்டுமே இந்த விவகாரத்திற்கு விடிவு கிடைக்க வாய்ப்பு.ஆனால் மத்தியில் காங்கிரஸ் உள்ளவரை எதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமென்றே  தோன்றுகிறது.இவர்களை காக்க யாருமில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக