வியாழன், 3 மார்ச், 2011

49-ஒ ஒரு வேண்டுகோள்

தமிழக மற்றும் புதுவை மற்றும் இன்ன பிற மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.ஓட்டுபதிவு நாள் குறித்து ஆளாளுக்கு கூப்பாடு போட்டு கொண்டிருக்க இன்னும் சிலர் ஓட்டுபதிவு நாளுக்கும் ஒட்டு எண்ணிக்கை  நாளுக்கும் ஒரு மாத இடைவெளியை சந்தேகபட்டுகொண்டிருக்கின்றனர்  .
ஆனால் அதை பற்றி நான் சொல்லவரவில்லை.
       யாருக்கும் ஒட்டாளிக்க விருப்பமில்லை என்ற ஒரு தேர்வை (49 -ஒ Option) இப்போது ஓட்டுபதிவு எந்திரத்தில்  வைக்கப்படவில்லை.அதை பயன்படுத்த விரும்புகிறவர்கள் தனியாக விண்ணப்ப படிவம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
        இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.ஏனெனில் இந்திய குடிமகன் தான் யாருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியம் காக்கப்பட  வேண்டுமென சட்டம் சொல்கிறது  .ஆனால் இப்படி ஒட்டுசாவடியில்  தனியாக விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் அதில் என்ன ரகசியம் காக்க படுகிறதென தெரியவில்லை.மேலும் இதை கட்சிகார கூட்டம் பார்த்தல் அந்த வாக்களர் "கவனிக்கப்படும்" அபாயமும் இருக்கிறது.எனவே 49 -ஒ என்ற விருபத்தை பொத்தானாக  மின்னணு வாக்கு பதிவு எந்திரத்திலேயே வைத்து விடுவதே சால சிறந்தது.இதனால் வாக்களரின் ஒட்டு ரகசியம் காக்க படுவதோடு கட்சிக்காரர்களின் "கவனிப்பிலிருந்து" காக்கும்.
            இதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.


1 கருத்து:

  1. Few years back, the case was filed in supreme court. As you know how our system works :(.

    courtesy: gnani

    49.ஓ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நீங்கள், வாக்கு இயந்திரத்திலேயே அதற்கான வழிமுறை கொண்டுவர முயற்சிக்கலாமே?

    மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர் பல வருடங்கள் முன்பே இதற்காக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். மின்னணு இயந்திரத்தில் 49 ஓவுக்கு தனி பட்டன் வைக்கத் தயார் என்று தேர்தல் ஆணையமும் நீதி மன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இந்திய அரசு அதை எதிர்க்கிறது. வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு