புதன், 30 மார்ச், 2011

உலககோப்பை இறுதிபோட்டியை புறக்கணிப்போம்

கார்பரேட்டுகளின் விளையாட்டாகிப்போன கிரிக்கட்டை  போட்டியை பரிட்சையை கூட நினைக்காமல் பார்க்கும் அறிவிலி மாணவர்கள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு பார்க்கும் "தேச பக்தர்கள்" (அப்படியா?அப்போ காந்தி யாரு?),இருநூறு ரூபாய் டிக்காட்டை இருபதாயிரம் முதல் பத்துலட்சம்  வரை கொடுத்து பார்க்கும் கார்பரேட்டுகளால் பெண்டு கழட்டப்பட்ட ஞாயிற்றுகிழமை புல்லடிசிட்டு குப்புற கிடக்கும் மென்பொருள் துறை அடிமைகள் (அதான் அங்க வேலை செய்யிறவங்க ),அப்புறம் ஷூட்டிங்கில் கதாநாயகியுடன்  மரத்தை சுத்தி டூயட் பாடிய களைப்பை(!!?) போக்க பால்கனியில் குந்திகினு பாக்கும் சினிமா பிரபலங்கள்,இந்தியா பாக் கிரிக்கட்டு மூலம்  ஏதோ ஒரே நாளில் காஷ்மீர் பிரச்னையை தீர்த்து விட்டோமென்ற களிப்பில்(!) பார்க்கும் பிரதமர் முதல் அல்லகைகள் வரை என இந்த அறிவிலிகளின் பட்டியல் நீள்கிறது.ஆனால் போட்டியின் இடையில் வரும் விளம்பரத்தின் கட்டணத்தை இந்தியா பாக் போட்டியின் பொது ஆறு மடங்கு உயர்த்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் மற்றும் வீரர்கள்(அப்படியா?இவர்கள் வீரர்கள்னா  பகத் சிங்க் யாரு?) தலை முதல் கால் வரை சோப்பு முதல் பூச்சி கொல்லி மருது(அதான் பெப்சி கோக்கு) பெயர் வரை தங்கள் நிறுவன லோகோக்களை ஒட்டி அதன் மூலம் காசு பார்க்கும் கார்பரேட்டுகள் இவர்கள்தான் புத்திசாலிகள்.முட்டாள்கள் இருக்கும் வரை புத்திசாலிகள் இருப்பார்கள்.
                இந்த போட்டிகளின் மூலம் ஆயிரம் கோடிகள் கணக்கில் கொள்ளையடிக்கும் கார்பரேட்டுகள் புத்திசாலியா ?அல்லது படிப்பை, வேலையை விட்டுவிட்டு வாய்பிளந்து பார்க்கும் பொதுமக்கள் புத்திசாலியா?அட போங்கய்யா போய் பொழப்ப பாருங்க.இந்தியா ஜெயிச்சா நம்ம நாட்டு வறுமை ஒழிஞ்சிடுமா?கடன் போய்டுமா?ஊழல் ஒழியுமா?இல்லை.அப்புறம் இன்னாத்துக்கு டைம் வேஸ்டு?
       
பி.கு:அப்புறம் இறுதி  போட்டியில் இந்தியா இலங்கை மோதுதாம்.அட ரெண்டும் ஒரே நாடுதானே?தமிழினித்தை வேரறுத்ததில்!!உண்மை தமிழனாயிருந்தா இந்த போட்டியை புறக்கணிங்க.ஒங்க பொழப்ப பாருங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக