ஆம்.தனக்கு சீட் கேட்டால் கண்டிப்பாக கிடைக்காதென்பதை உணர்ந்த தொங்கபாலு தனது மனைவிக்கு சீட் கேட்டு பெற்று அவரை வேட்புமனு தாக்கல் செய்ய செய்தார் .பின்னர் மாற்று வேட்பாளராக தானே வேட்புமனு தாக்கல் செய்து கொண்டார்(எப்படி தோணியிருக்கு பாருங்களேன்!!).இதில் அவரது மனைவி வேட்புமனுவில் "வேண்டுமென்றே" சில முக்கிய சொத்துகணக்கு(மெகா டிவி மொதலாளி இந்த ஜெயந்தி தங்கபாலு.அது மறைக்க பட்டிருக்கிறது) மற்றும் சில இடங்களில் கையெழுத்து போடாமல் "விடப்பட்டிருப்பதாகவும்" கூறி தேர்தல் ஆணையம் ஜெயந்தியின் மனுவை நிராகரித்து விட்டது.ஆக மாற்று வேட்பாளராக இருந்த தொங்கபாலு இப்போது மைலாப்பூர் காங்கிரசு வேட்பாளர்.இவ்வழியில் சீட் வாங்கி சோனியாவுக்கே அல்வா கொடுத்திருக்கிறார்!!! இவர்(மற்றும் தமிழின அழித்தொழிப்புக்கு உதவிய காங்கிரசின் 63 நாயன்மார்களுக்கும்) வாங்க வேண்டிய அல்வா ஒன்று பாக்கியுள்ளது.அது மே 13 அன்று மக்கள் வழங்கவிருப்பதாக மைலாப்பூர் மகேசன் கும்மாங்குத்து டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக