திமுக காங்கரஸ் தொகுதி பங்கீடு அக்கப்போர் தேடலை விட பெரிய அக்காபோராக மாறிய நிலையில் காங்கிரஸ் 63 தொகுதி கேட்க கருணாநிதி "ஹா..நான் 52 லிருந்து 60 வரை கொடுக்க தயாராக இருந்த நிலையில் காங்கிரஸ் அதற்கு மேல் 63 கேட்பது ஞாயமா?" என கூப்பாடு போட்டார்.இந்த நாடகம் போதாதென்று "வழக்கம் போல்" ராசினாமா நாடகம்.மந்திரிகள் ராசினாமா செய்ய வேண்டுமெனில் ராசினாமா கடிதத்தை பிரதமரிடமோ அல்லது சோனியாவிடமோ கொடுக்காமல் சும்மா எல்லோரும் கிளம்பி சென்று குலாம் நபி ஆசாத் மற்றும் பிராணபை சந்தித்தனர்.
இந்த சைக்கிள் கேப்பில் கிடா வெட்டிய குஞ்சாமணி சாரி வீரமணி இது "திராவிட சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி என்றும் காங்கிரசுடனான உறவை முறித்து கொண்டதை உலக தமிழர்கள் அனைவரும்(!!?? இவரும் கருணாநிதியும்தான் இங்கே உலக தமிழர்கள் என்ற அர்த்தத்தில் வரும்.யாரும் டென்சனாக வேண்டாம்!!!) பாராட்டுகின்றனர்" என ஜால்ராவை சற்று சுருதி கூட்டி கூவவவும் குருமாவளவனும் இதே போல இந்த முடிவை வரவேற்பதாக கடிதம் எழுதினர்.இந்த குருமாவளவன் காங்கிரசுடன் கூட்டு வைத்து கொண்டே தமிழக மீனவர்கள் கொல்லபடுவதை கண்டித்து போராடும் "வீராதி வீரர்".
வட நாட்டு பத்திரிக்கையாளர்களோ சரி வேணாம் கேரளா பத்திரிக்கையாளர்கள் உட்பட(ஏன்னா இவுரு வழக்கம் போல திராவிட யுத்தம்னு சவுண்டு விடுவார்) "அட போங்கய்யா இவுருக்கு வேற வேலையில்ல!" அப்படின்னு அலுப்பில் இருந்தனர்.வட நாட்டு ஆங்கில ஊடகங்கள் இந்த நாடகத்தை காலை முதல் மாலை வரை ஒளிபரப்பினர்(ஆமா அவிங்களும் ஒரு நாளாவது சிரிக்க வேணாமா?).
இப்போ காங்கிரசிடம் சரணாகதியடைந்த திமுக பாமாக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றிடம் இருந்து தலா ஒரு சீட்டை பிடுங்கி காங்க்ரசிடம் குடுத்திருக்கிறது.(காங்கிரஸ் இல்லையேல் நான் கூட்டணியில் இருக்க மாட்டேன் என "கொய்யா" கூறியதாகவும் செய்தி உண்டு).
இவ்வளவு தூரம் திமுக சரணாகதி அடைய காரணம் ஒண்ணுமில்ல தன்னோட துணைவி ராசாத்தி மற்றும் கனிமொழியை சிபிஐ விசாரிக்க இருப்பதாக செய்தி உலாவுவதால் அவர்களை எதை அடமானம் வைத்தேனும் காக்க கருணாநிதியின் நடவடிக்கையே இந்த சரணாகதி.ஆக திமுக திராவிட முன்னேற்ற கழகம் அல்ல.திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி.குஞ்சாமணி அய்யா வேற ஏதாவது உருப்படியா வேலை வெட்டி இருந்தா பாருங்க!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக