வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தமிழர்களின் முக்கிய கவலை: ஆரண்ய காண்டம் காப்பியாமே?

                  கடந்த சில மாதங்களாக ஆஹா ஆரண்ய காண்டம் போல ஒரு படம் ஒலக வரலாற்றிலேயே எடுக்கபட்டதில்லை!!ஒக்க மக்க எல்லார மூஞ்சியிலும் படத்தோட போஸ்டரை(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தமிழ் சினிமாவை வசை பாடுபவனின் முகத்தில் தேய்க்க!!என்று படு "சாத்வீகமாக" மொக்கை படத்தை ஒலக சினிமா என கொண்டாடுவோர் சங்கம் அறிவுறுத்தியது!அதன்படி பலர் எங்கே தன முகத்தில் அந்த "எக்கச்சக்க" போஸ்டர்(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தேய்க்கப்படும் என பயந்து ஆஹா அருமையான ஒலக சினிமா Eisenstein சமாதியில் இருந்து எழுந்து பாராட்டினார் என்கிறே ரேஞ்சுக்கு ஒரே அக்கப்போர்!இது நல்ல சினிமா இல்லைன்னு சொன்னா கொய்யால என்று அடிக்க வராத குறையாக எதிர்த்தோர் பலர்(ஆனாலும் இங்கு நான் படத்தை எதிர்த்து போட்டபோது அதை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி :) ).
                இப்போ தமிழனுக்கு என்ன கவலைன்னா சிலர் இந்த ஆரண்ய காண்டம் ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க சினிமாவின் உல்டா என கொளுத்திபோட ஐயோ வட போச்சே என வடிவேலு கணக்கா "வொய் ப்ளட்?சேம் ப்ளட்!!" என ஆறுதல் சொல்லிகினு திரியுறாங்க!!
               அதாவது இந்த படம் காப்பி அல்லது தழுவல்னா தமிழன் எல்லோரும் தலையை தொங்க போட்டுகனுமாம்!!ஆமா ஒன்றரை லட்சம் தமிழன் கொல்லப்பட்டான்!!ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவன் சாகடிக்கபட்டபோது, மூணு தமிழனை தூக்கு கயிற்றில் நிருத்தியுள்ளபோது தொங்காத  தமிழன் தலை இதுக்குதான் தொங்கனுமா?அட போங்கையா!!ஆரண்ய காண்டம் இல்லைன்னா அடுத்து ஒரு கிஷ்கிந்தா காண்டம் வராமலா போய்டும்?அப்போ அதை "இது வரை கண்டிராத ஒலக சினிமா" "தமிழ் சினிமாவை விமர்சிப்பவன் மூஞ்சியில பட போஸ்டர வச்சு தேய்!!" என்பது போன்ற ஆர்டர்களை அப்போ மீண்டும் கொடுக்கலாம்!!என்ன காதல்,வெயில்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் இதெல்லாம் வரும்போது எல்லாரும் "இதான் ஒலக சினிமா இதுக்கு மேல எடுக்க ஒன்னியும் இல்ல" அப்படின்னு குத்தாட்டம் போடலியா?மனதை தளர விடாதீங்க!!ஒலக சினிமா என்கிற ரப்பர் ஸ்டாம்பை பத்திரமா வச்சிருங்க .அப்பப்ப வர படங்களுக்கு குத்திடுவோம்!!ஒலக சினிமா என சாப்பா குத்த சில  தகுதிகள் :
  • குளிக்காத பன்னாடைகள் இருக்கணும் 
  • சேவிங்  தவிர் (ரீசன்ட் ஆத்திச்சூடி)
  • அடிங்கோ....தா என்பது போன்ற மங்கள சொற்கள் வசனமாக நொடிக்கொருமுறை எல்லாராலும் சொள்ளப்படனும்.
  • ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயசுக்கு மீறி பெனாத்தனும்(அவர்களும் கெட்ட  வார்த்தை பேசினால் ஒலக சினிமா முத்திரை இன்னும் அழுத்தமாக குத்தப்படும்!!).
  • தவிர கக்கூஸ் போவது யூரின் போவது விபச்சாரி ரெட லைட் இதெல்லாம் காட்டினால் கூடுதல் மதிப்பெண்!!
  •  20Hz-2000Hz வரை பல்வேறு அலைவரிசைகளில் (frequency ) பேச வேண்டும்."யப்பா செத்த அவுரு தொண்டையில நீலகிரி தைலம் தேச்சு விட்டா தேவல" என்று சொல்ல வைக்க வேண்டும்!!
  • யாராவது ஒரு காட்சியிலாவது அம்மணமா நிக்கணும்!!ஆண்கள் நிப்பது இப்போதைய Trend.(ஒரு வேலை Gay club இல உள்ளவர்கள் இத்தகைய காட்சிகளை வைத்து தங்களின் "தாகத்தை" தனித்து கொள்கின்றனரோ?
  • சமீபத்தில் அவன் இவன் அம்மண சீன,ஜாக்கி ஷ்ராப் அம்மண சீன.பாவம் ஜாக்கி ஷ்ராப்  ஊர்மிளாவ வெறும் பனியனோடு ஓடவிட்டு ஆங்கிள் பாத்து ரசித்தவரை  இங்க கொண்டு வந்து இப்படி அசிங்கபடுத்திபுட்டேங்கலேடா!!செயங்கடா செய்ங்க!!

    திங்கள், 22 ஆகஸ்ட், 2011

    தமிழின விரோத "தி ஹிந்து" பத்திரிக்கையை மானமுள்ள தமிழர்கள் புறக்கணிப்பர்!!

       தி ஹிந்து பத்திரிகை போல ஒரு தமிழ் விரோத பத்திரிக்கை  ஆங்கிலத்தில் இல்லை!!ஆனா நம்மாளுங்க(குறிப்பா சென்னையில் இருப்போர்) அதை படிச்சாதான் டாய்லெட்டே வருது!! ரிட்டையர் ஆகி வீட்டில் மஞ்ச  பெயின்ட் அடிச்சி ஈசி சேரில்(நன்றி சுஜாதா) சாய்ந்து கொண்டு ஹிந்து படிக்காவிட்டால் அடுத்த கணமே நரகம் என்பது போல சீனியர் சிட்டிசன்கள் ஒருபுறம், இன்னொரு புறம் தமிழே தெரியாமல், தெரிந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டு இன்குலீசில் பேசும் பெண்கள் ஒருபுறம், மென்பொருள் அடிமைகள் மற்றொருபுறமென  ஹிந்துவை படிக்காவிட்டால் நாம் ஏதோ முட்டாள் என்பது போன்ற ஒரு  மாயையை உண்டாக்கி வைத்திருப்பது மானங்கெட்ட பொழப்பன்றி வேறென்ன?
                       ராஜபக்சே கையால் சிங்கள ரத்னா வாங்கிய தியாகி ஹிந்து ராம்!!அதெல்லாம் ஒரு பத்திரிக்கையா?ராஜபக்சேவின் பேட்டியை அடிக்கடி எப்படியாவது போட்டுவிடுவர்!!இரண்டு  வருடங்களுக்கு  முன் இந்த பத்திரிக்கையை படித்து கொண்டிருந்த பொது ராஜபக்சேவின் பேட்டி ஒரு முழு பக்க நீளத்துக்கு வந்திருந்தது!!அப்போது கிழித்து போட்டவன்தான்.இன்றுவரை நான் அந்த பத்திரிக்கையை  தொடுவது கூட இல்லை!! ராஜபக்சே பேட்டி மட்டுமல்ல சிங்கள ராணுவத்திற்கு விசுவாசமாக செய்தி போடுவதிலும் மேலும் ஈழ தமிழர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் வாழ வைக்கப்பட்டுள்ளதாகவும் வாய் கூசாமல் பொய் சொல்லி கல்லா கட்டுவது இந்த பத்திரிக்கையின் பொழப்பு!!சுடுகாட்டில் அரசியல் செய்யும் பொழப்பு! மானமுள்ள சூடு சுரணையுள்ள தமிழர்கள் இதை செய்வார்கள் என்று நம்புகிறேன்!!

    திங்கள், 15 ஆகஸ்ட், 2011

    ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவுக்கு கட்டப்பட்ட பாடை!!

                 தமிழ் சினிமா விமர்சனங்களை பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும்.முதல் ரிவ்யூவை பொறுத்தே பின்னர் வரும் அனைத்து விமர்சனங்களும் அமைகிறது(அப்  கோர்ஸ் மாறுபட்டவிமர்சனங்களும் உண்டு).ஹிந்தி சினிமாவில் விமர்சனத்துக்கும் படத்தை மக்கள் ரசிப்பதற்குமான இடைவெளி முன்பெதுமில்லாது இப்போது மிக அதிகமாகிவிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகளிலும் விவாதிக்க பட்டது!!அதில் விமர்சனம் எழுதும் அறிவு ஜீவிகளின் ரசனை மக்களின் ரசனையை கருத்தில் கொள்ளாது இருப்பதாக சொல்லப்பட்டது!இன்ன பல காரணங்களும் உண்டு!
                 ஆனால் அதே விவாதங்கள் தமிழ் சினிமாவுக்கும் பாந்தமாக பொருந்துகிறது என்பதை உணர்த்திய படம் ஆரண்ய காண்டம்!ப்ளாகரில் எல்லாரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளப்பட்ட படம்!சிலர் தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு என ஓவராக விளித்தனர் !!!ஏய்யா பருத்தி வீரன் சுப்ரமணியபுரம் எல்லாம் வந்தபோதும் இதே தான சொன்னீங்க?எம்புட்டு தபா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர்?ஒருவேளை ovulation problem ஆ?எதுக்கும் ஒரு நல்ல Gynecologist கிட்ட தமிழ் சினிமாவ காட்டுங்க!!
                 படம் மொக்கையோ மொக்கை!!ஒவ்வொரு கதாபாத்திரமும் சாதாரண மனிதன் போல பேசுவதில்லைன்னு சபதம் செய்துதான் அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் பேசியிருப்பாங்க போல!!சம்பத் மட்டுமே தனது அக்மார்க் குரலில் பேசுகிறார்(ரவி கிஷ்ணா கொரல பத்தி தனியா சொல்லனுமா?ஐயோ சாமி!!) மற்ற எல்லாரும் ஒன்னு அடி தொண்டையில் உறுமுகின்றனர் இல்லைன்னா கீச்சுன்னு கத்துறாங்க!
                வழக்கமான விஷயங்களை மாற்றி செய்தால் அதை உலகத்தரம் என்று சொல்ல சில சூடோ இன்டலெக்சுவல்கள்  (நன்றி ஆதவன்) வெறிகொண்டு அலைகிறார்கள்.அதென்ன உலகத்தரம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பண்பாடு கலாசாரம் மொழி இனம் அது இதுவென்று ஆயிரம் உள்ளது.இதில் எங்கு வருகிறது உலக தரம்?இதென்ன காரா?euro norm   barath  norm என்று சொல்ல?இசையை எடுத்து கொண்டால் அதென்ன உலக இசை?உலகத்தில் ஒவ்வொரு நாட்டின் இசை கருவியையும் ஒன்றாக இசைப்பதோ?இப்போது திரைப்படத்துக்கு வருவோம்!இதில் என்ன உலக தரம்?ஆஸ்கர் அமெரிக்காவின் அளவுகோல் கான்ஸ் ஐரோப்பிய நாடுகளின் சினிமாவை மையபடுத்தும் ஒன்று.உலக சினிமா எடுக்கிறேன் என்று ஏன் தமிழில் எடுத்து சாகடிக்கிரீர்கள்?சேகர் கபூர் போல ஆங்கிலத்தில் எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாமே?
            
              மற்ற நாட்டு படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வியாதி என்னவெனில் ஒரு படம் பேரு வாங்குனா அதே போல அம்பது படம் வரும்!பருத்தி வீரன்(ஒரு சேவிங் பண்ண காசில்லாத குளிக்காத பன்னாடை அப்புறம் ஒரு தாவணி போட்ட பொண்ணு), சுப்ரமணியபுரம்(நாலு ஓதவாக்கரைகள் ஒரு தாவணி போட்ட பொண்ணு)   இப்படி எல்லா கருமாந்திரத்தையும் பாத்து சலிச்சு போச்சு!!இப்போ இதே ஆரண்ய காண்டத்தை போல அம்பது படம் எடுக்கப்படும்!!அப்போ இதே அறிவு ஜீவிகள் ஐயோ அம்மா ன்னு கூச்சல் போடுவார்(ஆமா நீங்க தூக்கி உடுறீங்க!!அனுபவிங்க!)
              படத்தின் முதல் காட்சியே மேட்டர் செய்வது.நான் என்னமோ அது கோஹினூர் காண்டம் விளம்பரம்னு நெனச்சுட்டேன்!!சிறு நீர் கழிப்பதையும்(இதற்கு முன்பே பல படங்களில்) காட்டி விட்டனர்!!அடுத்து மலம் போவதோ?சென்சார் அப்படின்னு ஒன்னு இருக்கா?இப்படி அருவருப்பான விஷயங்களை காட்டினாலே உடனே சில அறிவு கொழுந்துகள் ஆஹா ஓஹோ!!ன்னு சொல்வது இவர்கள் எத்தகைய அருவருப்பான மனதை உடையவர்கள் என்பது விளங்கும்!!இந்த அறிவு ஜீவிகளின் கக்கூசிலும் கேமரா வச்சி படமேடுக்கலாமே?!!
              மற்ற படி ஆரண்ய காண்டம் சரியான மொக்கை!!கெட்டவார்த்தை கேக்க நான் ஏன் படத்துக்கு போகணும்?கொழாயடிக்கு போனாலே போதுமே!!இப்படிதான் பொல்லாதவன் அப்படின்னு கொசு தனுசு நடிச்ச படம்  Bicycle Thieves படத்தின் அருவருப்பான பிரதி!ஏய்யா இந்த கொலை வெறி?வெற்றிமாறன் டுபுக்கு படத்தையும் எதிர்ப்பார்க்கும் சூடோ இண்டலெக்சுவல்கள் இங்கு உள்ளனர்!!ஐயோ ஐயோ!!
               அப்புறம் யுவன் சங்கர் ராஜா ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் ஹான்ஸ் சிம்மரின் இசையை வேறு சுட்டு ஆங்காங்கே பயன்படுத்துகிறார்!!இதான் உலக தரமோ?என்னவோ!!
               ஆனால் ஒன்று முடிவு செய்துவிட்டேன்.பட விமர்சனங்களை படித்து அதில் நல்லா இல்லை ன்னு சொன்னா ரொம்ப வசதியா போச்சு பாக்குற வேலை மிச்சம்!ஆஹா ஓஹோன்னா இனி பார்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்!இந்த தெளிவை கொடுத்த விமர்சன அன்பர்களுக்கு நன்றியோ நன்றி!!உலக சினிமா உள்ளூர் சினிமா இந்த வேறுபாட்டை ஏற்று கொள்பவர்கள இலக்கியத்தில் மட்டும் தலித் இலக்கியம் பெண் இலக்கியம் ஆகிய வேறுபாட்டை நிராகரிப்பது ஏனோ?!!!என்னவோ பண்ணட்டும்  ஆளை விடுங்க.தமிழ் சினிம்மான்னாலே கடும் அலர்ஜி இருந்தது .இப்போது அது இன்னும் அதிகரித்து விட்டது!!
              அப்புறம் ஏதோ எல்லாரும் சொல்வதுக்கு மாற்று கருத்து சொல்வது நான் என்னமோ ஹிட்ஸ் வாங்க செய்ததாக நினைத்தால் எனக்கு கவலையில்லை!!இந்த ஹிட்ஸ்,இன்ட்லி,தமிழ்மணம்,பொறந்த நாளு நம்பர் ஒன ரேன்க் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை!!நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன்.அம்புட்டுதேன்!


    வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

    கண்டிப்பாக படிக்க வேண்டியது!!

    http://allinall2010.blogspot.com/2011/08/blog-post_3567.html
    ************************************************

    திங்கள், 8 ஆகஸ்ட், 2011

    திமுக அல்லைகையான கவிஞர் -2

    முதல் பாகத்தில் போட்டிருந்த படமே முழு சாரம்சத்தையும் சொல்லிவிட்டாலும் இன்னும் சிலவற்றை சேர்க்க வேண்டியுள்ளது.
                        இவுரு முகநூலில் (அதான் Facebook) கணக்கு வைத்துள்ளார்.அதில் தினம் குறைந்தது மூன்று ஸ்டேடஸ் என்கிற பதிவை போடுவதுண்டு!அதில் என்ன சொல்வார் என்றால் திமுககாரர்கள் எல்லாரும் நாட்டுக்காக உழைத்து களைத்து உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிகாலையில் கைது என்பது ஒரு சித்ரவதை என திருவாய் மலர்ந்துள்ளார் கவிஞர்!
                                  இவருடைய பழக்கம் என்னவெனில் மேலே சொன்னதுபோல ஏதாவது திமுக ஜால்ரா பதிவை போட்டுவிடுவார்.அதற்கு வரும் பின்னூட்டங்களை பார்த்துகொண்டே வருவார்.யாரவது எதிர்ப்பாக (அதாவது உண்மையை) கருத்து சொல்லிவிட்டால் இவர் என்ன செய்ய வேண்டும்?அதற்கு மாற்று கருத்து இருந்தால் அதை சொல்லி தனது நிலையை விளக்க வேண்டும்.இதுதான் பதிவுக்கான நியாயமாக இருக்க முடியும்.ஆனால் கவிஞர் என்ன செய்வார் என்றால் "நான் போட்ட ஸ்டேடஸ் வெறும் Parody தான்.இதற்கு இவ்வளவு சீரியஸாக பின்னூட்டம் போடுபவர்களை பாத்தால் எனக்கு பயமாக உள்ளது(ஆமாய்யா உண்மைய சொன்னா பயமாத்தான் இருக்கும் பொய்யர்களுக்கு).இப்படி நீங்கள் செய்தால் நான் நிஜமகவுமே படு தீவிரமான பதிவுகளாக போட வேண்டி வரும் என மிரட்டும் பாணியில் சொல்லி பின்னூட்டத்திற்கு பதில் போடும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவார்!!(ஒ அப்போ நீங்க உயிர்மையில் எழுதும் தலையங்கங்களும் அதே போல சும்மானச்சிக்கா?சரி இது தெரியாம பல பேரு உங்க சும்மானச்சிக்கி புத்தகத்த வாங்கி வேறு படித்து கொண்டிருக்கின்றனர்!!ஐயோ ஐயோ!!பேசாம முரசொலிமை   அப்படின்னு மாத்திடுங்க சஞ்சிகையின்  பேர!!)
                இது எப்படி இருக்குதுன்னா வடிவேல் ஒரு நகைச்சுவையில் சொல்வது போல "நான் சொன்னது பூரா உண்மைன்னு நீங்க நம்பிட்டீங்க!ஐயோ ஐயோ".இதுபோல உள்ளது கவிஞரின் நிலை.அது சரி வடிவேலுவும் திமுகதானே!!
                 இம்மாத காலச்சுவடில் கண்ணன் கவிஞரின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுள்ளார்(கண்டிப்பாக படிங்க).அதில் சில:
      -கனிமொழியின் கணவர் அரவிந்தனின் முதலீட்டில்தான் கவிஞரின் அந்த பதிப்பகம் தொடங்கப்பட்டது(ஒ இப்போ புரியுது விசுவாசத்துக்கு காரணம என்னான்னு!!)
      -காலச்சுவடு கூட்டம் நடக்கும்போது அது நேரத்தில் நடக்கிறது என்பதை சில புல்லுருவிகள் மூலம் தெரிந்து கொண்டு அப்போது அந்த குழுவில் இருந்த கனிமொழிக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருப்பாராம்!!ஆஹா என்னே கிறுக்கு புத்தி!!இன்னும் பல விஷயங்கள் ஆழமாக இம்மாத காலச்சுவடில் உள்ளது!
                Last but not least: அப்புறம் இவருக்கு வேண்டியவர்களுக்கு விருது கொடுக்க அவர்களை தொடர்ந்து இவரின் அல்லக்கையாக தக்கவைத்துக்கொள்ள இவர் கையாளும் முறை வெக்ககேடானது!சுஜாதா விருதாம்.உங்களுக்கு  வேண்டியவர்களை கவுரவிக்க ஏய்யா ஆண்டுதோறும் சுஜாதாவை சாகடிக்கிரீர்கள்?சுஜாதா  இருந்திருந்தால் "உனக்கு வேண்டியவர்களை தக்க வைத்துகொள்ள என்னை ஏன் வருடா வருடம் எக்ஸ்யூம் செய்கிறீர்கள்?" என கேட்டிருப்பார்!ஐயோ இதெல்லாம் ஒரு பொழப்பா?

    ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

    இந்தியா அடிமை நாடில்லையா?

            இந்தியா அமெரிக்காவின் அடிமை அமெரிக்காவின் மற்றுமொரு காலனி என்று கூறியபோது என்ன இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டவர்களுக்கு இப்போது ஒரு கேள்வி.அமெரிக்கா திவால் ஆகும் தருணத்தில் (S&P இன் AAA லிருந்து AA+)   சீனா சரியான கேள்வியை(டாலர் குறித்து) அல்லது வெகுநாளாக அடக்கி வைக்கப்பட்ட பிரச்னையை எழுப்பியுள்ளது(சிலர் சீனா அமெரிக்காவின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதால் இந்த பிரச்சனை எழுப்புகிறது எனலாம்.எப்படியும் இந்த பிரச்சனை எழுப்ப தைரியம் வேண்டுமே!!அது இந்தியாவுக்கு உள்ளதா?இது கவலை அளிக்கிறது என முதலை கண்ணீர் வடித்துள்ளார் அமெரிக்காவின் துணை அரசின் மந்திரி பிரணாப் முகர்ஜி!!(சரி அப்போ வூட்டுக்கு போய் அழு.விலைவாசியையும் குறைக்க வக்கில்லை.என்னத்துக்குதான் நீ இருக்க?ஒம்புல்லை வேற அரசியலுக்கு கொண்டு வந்துட்ட!!ஒனக்கே ஒன்னும் தெரியல!!இதுல அவன் வேறயா?).
                    ஏற்கெனவே இந்தியா இரான் எரிவாயு குழாய் அமைக்க முயற்சித்த அப்போதைய எரிவாயு மந்திரிகளான மணிசங்கர் ஐயர் மற்றும் நட்வர் சிங் ஆகியோர் "அமெரிக்க விருப்பங்களுக்கு" எதிராக செயல்பட முயற்சித்ததால் அமெரிக்காவின் அழுத்தத்தின் பெயரிலேயே அந்த இரண்டு மந்திரிகளும் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்(அதாவது ஓரம்கட்டப்பட்டனர்).இந்த ஒரு உதாரணமே இந்தியாவின் மந்திரிகளை தீர்மானிப்பது யார் இந்தியாவின் விருப்பங்களை முடிவு செய்வது யார் என விளங்கும்!
                       உலகத்தின் எல்லா வணிக பரிமாற்றங்களும் டாலர்களிலேயே  நடப்பது இரண்டாம் உலக போருக்கு  பின்னர் கட்டாயமாக்கப்பட்டது.அமெரிக்காதான் சுவர்க்கம்!!டாலர்தான் கடவுள் என்ற ஒரு மாயை அமெரிக்க ஆட்சியாளர்களால் உண்டாக்கப்பட்டது.பின்னர் பல பிரச்சனைகள் பொருளாதார வீழ்ச்சிகள் வந்தபோதும் இதே மாயை காப்பாற்றப்பட்டது!!ஆனால் இப்போ முகத்திரை கிழிந்து அமெரிக்கா மூழ்கும் நிலை!!என்ன செய்யபோகின்றனர் மன்மோகன் கோஷ்டி (மாண்டேக் சிங் உள்ளிட்டோர்)!!!அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி என்றாலே இந்தியாவிலும் வேலை இழப்புகள் இருக்கும்.இப்படி ஒருநிலைக்கு காரணம் 1991இல் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கை காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!!தெரியாத வரை ஆள்வோருக்கு நல்லது!