முதல் பாகத்தில் போட்டிருந்த படமே முழு சாரம்சத்தையும் சொல்லிவிட்டாலும் இன்னும் சிலவற்றை சேர்க்க வேண்டியுள்ளது.
இவுரு முகநூலில் (அதான் Facebook) கணக்கு வைத்துள்ளார்.அதில் தினம் குறைந்தது மூன்று ஸ்டேடஸ் என்கிற பதிவை போடுவதுண்டு!அதில் என்ன சொல்வார் என்றால் திமுககாரர்கள் எல்லாரும் நாட்டுக்காக உழைத்து களைத்து உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிகாலையில் கைது என்பது ஒரு சித்ரவதை என திருவாய் மலர்ந்துள்ளார் கவிஞர்!
இவருடைய பழக்கம் என்னவெனில் மேலே சொன்னதுபோல ஏதாவது திமுக ஜால்ரா பதிவை போட்டுவிடுவார்.அதற்கு வரும் பின்னூட்டங்களை பார்த்துகொண்டே வருவார்.யாரவது எதிர்ப்பாக (அதாவது உண்மையை) கருத்து சொல்லிவிட்டால் இவர் என்ன செய்ய வேண்டும்?அதற்கு மாற்று கருத்து இருந்தால் அதை சொல்லி தனது நிலையை விளக்க வேண்டும்.இதுதான் பதிவுக்கான நியாயமாக இருக்க முடியும்.ஆனால் கவிஞர் என்ன செய்வார் என்றால் "நான் போட்ட ஸ்டேடஸ் வெறும் Parody தான்.இதற்கு இவ்வளவு சீரியஸாக பின்னூட்டம் போடுபவர்களை பாத்தால் எனக்கு பயமாக உள்ளது(ஆமாய்யா உண்மைய சொன்னா பயமாத்தான் இருக்கும் பொய்யர்களுக்கு).இப்படி நீங்கள் செய்தால் நான் நிஜமகவுமே படு தீவிரமான பதிவுகளாக போட வேண்டி வரும் என மிரட்டும் பாணியில் சொல்லி பின்னூட்டத்திற்கு பதில் போடும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவார்!!(ஒ அப்போ நீங்க உயிர்மையில் எழுதும் தலையங்கங்களும் அதே போல சும்மானச்சிக்கா?சரி இது தெரியாம பல பேரு உங்க சும்மானச்சிக்கி புத்தகத்த வாங்கி வேறு படித்து கொண்டிருக்கின்றனர்!!ஐயோ ஐயோ!!பேசாம முரசொலிமை அப்படின்னு மாத்திடுங்க சஞ்சிகையின் பேர!!)
இது எப்படி இருக்குதுன்னா வடிவேல் ஒரு நகைச்சுவையில் சொல்வது போல "நான் சொன்னது பூரா உண்மைன்னு நீங்க நம்பிட்டீங்க!ஐயோ ஐயோ".இதுபோல உள்ளது கவிஞரின் நிலை.அது சரி வடிவேலுவும் திமுகதானே!!
இம்மாத காலச்சுவடில் கண்ணன் கவிஞரின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுள்ளார்(கண்டிப்பாக படிங்க).அதில் சில:
-கனிமொழியின் கணவர் அரவிந்தனின் முதலீட்டில்தான் கவிஞரின் அந்த பதிப்பகம் தொடங்கப்பட்டது(ஒ இப்போ புரியுது விசுவாசத்துக்கு காரணம என்னான்னு!!)
-காலச்சுவடு கூட்டம் நடக்கும்போது அது நேரத்தில் நடக்கிறது என்பதை சில புல்லுருவிகள் மூலம் தெரிந்து கொண்டு அப்போது அந்த குழுவில் இருந்த கனிமொழிக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருப்பாராம்!!ஆஹா என்னே கிறுக்கு புத்தி!!இன்னும் பல விஷயங்கள் ஆழமாக இம்மாத காலச்சுவடில் உள்ளது!
Last but not least: அப்புறம் இவருக்கு வேண்டியவர்களுக்கு விருது கொடுக்க அவர்களை தொடர்ந்து இவரின் அல்லக்கையாக தக்கவைத்துக்கொள்ள இவர் கையாளும் முறை வெக்ககேடானது!சுஜாதா விருதாம்.உங்களுக்கு வேண்டியவர்களை கவுரவிக்க ஏய்யா ஆண்டுதோறும் சுஜாதாவை சாகடிக்கிரீர்கள்?சுஜாதா இருந்திருந்தால் "உனக்கு வேண்டியவர்களை தக்க வைத்துகொள்ள என்னை ஏன் வருடா வருடம் எக்ஸ்யூம் செய்கிறீர்கள்?" என கேட்டிருப்பார்!ஐயோ இதெல்லாம் ஒரு பொழப்பா?
இந்த அவதூறுக்கான பதிலை நான் சொன்னால், பல பேர் டைவர்ஸ் செய்து, பொண்டாட்டிகளை என்னிடம் அனுப்ப நேரிடும். அது ஓக்கேவா என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஐயோ வேனாங்கன்னா(ஏற்கெனவே அல்லக்கை கவிஞரால் குடும்ப நல நீதிமன்றங்கள் கூட்டம் குவியுதாம்!!வக்கீலுங்க கமிஷன் கொடுப்பதாக கேள்வி!!) ஹீ ஹீ பேஸ்புக்கில் மொக்க ஸ்டேடஸ் போட்டு சாகடிப்பதை தடுக்க சட்டமுள்ளதான்னு தெரியல!!அப்படி இருந்தா இந்த ஆசாமிதான் மோதல் கெடா வெட்டு!!
பதிலளிநீக்கு