இந்தியா அமெரிக்காவின் அடிமை அமெரிக்காவின் மற்றுமொரு காலனி என்று கூறியபோது என்ன இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டவர்களுக்கு இப்போது ஒரு கேள்வி.அமெரிக்கா திவால் ஆகும் தருணத்தில் (S&P இன் AAA லிருந்து AA+) சீனா சரியான கேள்வியை(டாலர் குறித்து) அல்லது வெகுநாளாக அடக்கி வைக்கப்பட்ட பிரச்னையை எழுப்பியுள்ளது(சிலர் சீனா அமெரிக்காவின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதால் இந்த பிரச்சனை எழுப்புகிறது எனலாம்.எப்படியும் இந்த பிரச்சனை எழுப்ப தைரியம் வேண்டுமே!!அது இந்தியாவுக்கு உள்ளதா?இது கவலை அளிக்கிறது என முதலை கண்ணீர் வடித்துள்ளார் அமெரிக்காவின் துணை அரசின் மந்திரி பிரணாப் முகர்ஜி!!(சரி அப்போ வூட்டுக்கு போய் அழு.விலைவாசியையும் குறைக்க வக்கில்லை.என்னத்துக்குதான் நீ இருக்க?ஒம்புல்லை வேற அரசியலுக்கு கொண்டு வந்துட்ட!!ஒனக்கே ஒன்னும் தெரியல!!இதுல அவன் வேறயா?).
ஏற்கெனவே இந்தியா இரான் எரிவாயு குழாய் அமைக்க முயற்சித்த அப்போதைய எரிவாயு மந்திரிகளான மணிசங்கர் ஐயர் மற்றும் நட்வர் சிங் ஆகியோர் "அமெரிக்க விருப்பங்களுக்கு" எதிராக செயல்பட முயற்சித்ததால் அமெரிக்காவின் அழுத்தத்தின் பெயரிலேயே அந்த இரண்டு மந்திரிகளும் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்(அதாவது ஓரம்கட்டப்பட்டனர்).இந்த ஒரு உதாரணமே இந்தியாவின் மந்திரிகளை தீர்மானிப்பது யார் இந்தியாவின் விருப்பங்களை முடிவு செய்வது யார் என விளங்கும்!
உலகத்தின் எல்லா வணிக பரிமாற்றங்களும் டாலர்களிலேயே நடப்பது இரண்டாம் உலக போருக்கு பின்னர் கட்டாயமாக்கப்பட்டது.அமெரிக்காதான் சுவர்க்கம்!!டாலர்தான் கடவுள் என்ற ஒரு மாயை அமெரிக்க ஆட்சியாளர்களால் உண்டாக்கப்பட்டது.பின்னர் பல பிரச்சனைகள் பொருளாதார வீழ்ச்சிகள் வந்தபோதும் இதே மாயை காப்பாற்றப்பட்டது!!ஆனால் இப்போ முகத்திரை கிழிந்து அமெரிக்கா மூழ்கும் நிலை!!என்ன செய்யபோகின்றனர் மன்மோகன் கோஷ்டி (மாண்டேக் சிங் உள்ளிட்டோர்)!!!அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி என்றாலே இந்தியாவிலும் வேலை இழப்புகள் இருக்கும்.இப்படி ஒருநிலைக்கு காரணம் 1991இல் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கை காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!!தெரியாத வரை ஆள்வோருக்கு நல்லது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக