வியாழன், 3 நவம்பர், 2011

இன்னும் என்னென்ன மாறப்போகுதோ?

சட்டமன்ற வளாகம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை என சென்ற ஆட்சியின் தடங்களை மாற்றுவதிலேயே அரசு தனது முழு சக்தியையும் விரையம் செய்கிறதோ என என்னும் அளவுக்கு தினம் ஒரு மாற்றம்.
சட்ட மன்ற வளாக மாற்றமாவது மக்களை அவ்வளவு பாதிக்காது.ஆனால் ஐந்து லட்சம் புத்தகங்கள்(அறிய பொக்கிஷம்னுதான் சொல்லணும்) கொண்ட ஆசியாவிலேயே ஒரு பெரிய நூலகத்தை மாற்றுவது என்பது மக்களுக்கு பெரும் இழப்புதான்.
இது குறித்து தனியார் தொலைகாட்சியில் விவாதம் நடந்தது.அதில் மக்கள் கருத்து தொளிபேசி மூலம் கேட்கப்பட்டது.பெரும்பாலான நேயர்கள் இதை எதிர்த்தனர்.இதை ஆதரித்தவர்கள் ஏன் அப்படி செய்தனர் என்றால் ஒரு செண்டிமெண்ட்!குழந்தைகள் நலம்!அவ்வளவுதான்!
தமிழ்நாட்டில் ஏற்கெனவே புத்தக வாசிப்பு ஊர் மெச்சும் அளவில்(!!!??) உள்ளது!இப்போது இது போன்ற நூலகங்கள் மக்களின் வாசிக்கும் பழக்கத்தை தூண்டக்கூடியவை.ஏற்கெனவே திராவிட அரசியலால் தமிழக மக்கள் சீரழிந்து புத்தக வாசிப்பே ஏதோ கிரிமினல் குத்தம் போலவும் தமிழ் எழுத்தாளர்கள் யார் என்றே தெரியாத நிலையிலும் தமிழே எழுத படிக்க வக்கில்லாதவர்கலாகவும்    உள்ளனர்!இப்போது இதையும் மாற்றி டி.பி.ஐ வளாகத்தில் இந்த ஐந்து லட்சம் புத்தகங்களை கொண்டு கொட்டி அடைப்பது(பின் வேறெப்படி இதை நான் சொல்ல?) கொஞ்ச நஞ்ச புத்தக வாசிப்பையும் இழுத்து மூடுவதுதான் அரசின் என்னமோ என ஐயமுற வைக்கிறது!
       நல்ல வேலை கருணாநிதி மழை நீர சேகரிப்பு திட்டம் கொண்டு வரவில்லை.அப்படி ஆகியிருந்தால் வீடு வீடாக ஜெ அனைத்து பைப்புகளையும் அறுக்கும் வேலையையும் செய்வாரோ என்ற பீதியை உண்டாக்குது!!என்னமோ நடக்குது!!மர்மமா இருக்குது!!நமக்கேன் வம்பு!

1 கருத்து:

  1. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு