இது இரண்டு படங்களின் தொழில்நுட்ப அம்சங்களையோ அல்லது நடிகர்களின் நடிப்பையோஒப்பிடும் முயற்சி அல்ல.இது வெறும் கதாபாத்திரங்களின் தன்மை வேறுபடுதலை ஒப்பிடும் ஒரு முயற்சியே!
மேலும் உலக சினிமா பத்தி எழுத கருந்தேள்,கொழந்த,உலக சினிமா ரசிகன் போன்றோர் ஓவர் டைம் போட்டுகினு எழுதுவதால் அதை எதிர்பார்த்து இங்கே வந்தால் ஏமாற்றமே என முன்பே சொல்லிகொள்கிறேன்.
கேப் பியரின் கதை சுருக்கம் ஒரு குற்றவாளிக்கு(மாக்ஸ் கேடி) தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர்(சாம் பவ்டன்).அவரின் குடும்பத்தை பழி வாங்க முயலும் அந்த குற்றவாளி.
கேப் பியர் 1962 படத்தில் நடித்த க்ரிகரி பெக் மற்றும் ராபர்ட் மிட்சம் ரீமேக்கிலும் சிறிய கதாபாத்திரங்களில் வந்து போகின்றனர்.
இதில் குற்றவாளியாக வரும் மாக்ஸ் கேடி விடுதலைபெற்றபின் நேரடியாக வழக்கறிஞர் சாம் பவ்டனை சந்திப்பதே முதல் காட்சியாக வருகிறது.அவர் அந்த சம்பவத்தை அவருக்கு நினைவு படுத்துகிறார்.பின்னர் அவர் செய்யும் டெர்ரரான விஷயங்களே மிச்ச படம்.
எனக்குபடம் பார்க்கும்போது தோன்றியது மேக்ஸ் தன்னை தானே சேமுக்கு நினைவூட்டாமல் சில்மிஷங்களை செய்திருந்தால் இவர்தான் செய்தார் என்பதை கண்டுபிடிக்கவே திணறி இருப்பார்கள்.இவர் தன்னை தானே முதலில் காட்டி கொண்டதே இவர்தான் அனைத்து காரியங்களையும் செய்கிறார் என்பதை சேமுக்கு ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது(ஹீ ஹீ கேடியை விட கேடித்தனமாக யோசித்து விட்டோமோ என்று பின்னால் தோன்றியது).
1962 இல் வந்த படத்தில் கதாபாத்திரங்களின் தன்மை எப்படி?கேடியை தவிர அனைவரும் அக்மார்க் ஒழுக்க சீலர்கள்.எனக்கு பொதுவாகவே ஒரு கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என வகைபடுத்துவதே பிடிக்காது(இப்படி வகைப்படுத்தாத காரணத்தாலேயே ஓடிய படங்கள் ப்ள.Dabangg ஒரு உதாரணம்).நிஜ வாழ்க்கையில் இவன் அக்மார்க் நல்லவன் இவன் ரொம்ப கெட்டவன் என சொல்லும் வண்ணம் யாரும் இருப்பதாக எனக்கு தெரிந்தவரையில் இல்லை.
ஒவ்வொருவரும் blend of bad and good.இதுதான் என் கருத்து.
இவன் நல்லவன் இவன் கெட்டவன் என வகைப்படுத்துவது படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் என நினைக்கிறேன்.
1962 இல் வரும் படத்தில் சேமின் மகள்(சிறுமியும் அல்லாமல் குமரியும் அல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் வயதுதான் இரண்டு படங்களிலும்) ரொம்ம்ம்ப நல்லவள்.சிறுமிக்கே உரிய குனங்களுடனேயே அவர் படைக்கபட்டுளார்.அவருக்கு மன சலனங்கள் எதுவும் இல்லை.டீன் ஏஜுக்கே உரிய ரெண்டுங்கெட்டான் தன்மை எதுவும் படத்தில் இல்லை.ஒருவேளை இது இறுக்கமாக அப்போது அமலில் இருந்த production code (1967 இல் இருந்து தளர்த்தப்பட்டு வேறு முறை அமல்படுத்தப்பட்டது) காரணமாக அவரை ஒரு சலனமற்ற சிறுமியாக படைத்திருக்கலாம் என்பது என் எண்ணம.
ஆனால் 1992 இல் வரும் அதே சிறுமி cum குமரி கதாபாத்திரம் மிக மிக இயல்பாக உள்ளதாகவே தோன்றுகிறது.அந்த டீன் ஏஜ் வயதிற்கே உரிய ஆர்வம(வேறு எது மீது?செக்ஸ் மீதுதான்) மாற்று பாலின ஈர்ப்பு போன்றவை மிக இயல்பாக கையாளப்பட்டது என்றே கூறுவேன்.Danielle (அதான் சேமின் மகள்) மாக்ஸ் கேடியுடன் பேசும் காட்சிகளே அதற்கு உதாரணம்.அவள் கேடியுடன் பேசும்போது அவள் கண்களில் தெரியும் ஒருவித ஈர்ப்பு புதிதாக தெரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வம என பலவும் காணலாம்.
குற்றம் என்பதே ஒரு சாரார் மட்டுமே செய்வதல்ல.எதிராளியும் சிறிது ஒத்துழைப்பு தராமல் குற்றம் நிகழ்வது சற்றே கடினம் என கொள்ளலாம்.இந்த சிறுமி அவளாக ஆர்வபட்டு கேடி கூப்பிட்டவுடன் அவனிடம் சென்று பேசுவது இதற்கு ஒரு சிறு உதாரணம்.ஆனால் 1962 இல்வரும் படத்தில் அப்படிப்பட்ட ஒரு காட்சி இல்லை.அவள் கேடியை கண்டவுடன் மிரண்டு ஓடுகிறாள்.அவ்வளவு நல்லவளாக காட்டபடுகிறாள்.
நான் சொல்வதில் ஏனோ ஆணாதிக்கம் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உளறப்படுவது அது இது என அளக்க வேண்டாம்.இது இரண்டு பாலினத்தாருக்கும் பொருந்தும்.
1962 இல் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் குடும்பம் கேடியை கொன்றாவது வாழ்வை நடத்த எத்தனிக்கும் ஒரு போக்கு தென்படும்.1992 இல் வந்த படத்தில் அந்த வழக்கறிஞரின் குடும்பத்தாரும் சற்று சலனப்படவர்கலாகவே சித்தரிக்க படுகின்றனர்.Production code தொல்லை இல்லாமல் இருந்தது ஒரு காரணமாக கூட இருக்கலாம்.யாரும் அக்மார்க் நல்லவனும் இல்லை அக்மார்க் கெட்டவனும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.எல்லாவற்றையும் சந்தேகி என்பது மார்க்ஸ் வாக்கு.எது எப்படி இருந்தாலும் இரண்டுமே க்ளாசிக்காகி விட்டது என்பதை மறுக்க இயலாது.

production code...எனக்கு இது புதிய செய்தி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...