தமிழ் சினிமா விமர்சனங்களை பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும்.முதல் ரிவ்யூவை பொறுத்தே பின்னர் வரும் அனைத்து விமர்சனங்களும் அமைகிறது(அப் கோர்ஸ் மாறுபட்டவிமர்சனங்களும் உண்டு).ஹிந்தி சினிமாவில் விமர்சனத்துக்கும் படத்தை மக்கள் ரசிப்பதற்குமான இடைவெளி முன்பெதுமில்லாது இப்போது மிக அதிகமாகிவிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகளிலும் விவாதிக்க பட்டது!!அதில் விமர்சனம் எழுதும் அறிவு ஜீவிகளின் ரசனை மக்களின் ரசனையை கருத்தில் கொள்ளாது இருப்பதாக சொல்லப்பட்டது!இன்ன பல காரணங்களும் உண்டு!
ஆனால் அதே விவாதங்கள் தமிழ் சினிமாவுக்கும் பாந்தமாக பொருந்துகிறது என்பதை உணர்த்திய படம் ஆரண்ய காண்டம்!ப்ளாகரில் எல்லாரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளப்பட்ட படம்!சிலர் தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு என ஓவராக விளித்தனர் !!!ஏய்யா பருத்தி வீரன் சுப்ரமணியபுரம் எல்லாம் வந்தபோதும் இதே தான சொன்னீங்க?எம்புட்டு தபா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர்?ஒருவேளை ovulation problem ஆ?எதுக்கும் ஒரு நல்ல Gynecologist கிட்ட தமிழ் சினிமாவ காட்டுங்க!!
படம் மொக்கையோ மொக்கை!!ஒவ்வொரு கதாபாத்திரமும் சாதாரண மனிதன் போல பேசுவதில்லைன்னு சபதம் செய்துதான் அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் பேசியிருப்பாங்க போல!!சம்பத் மட்டுமே தனது அக்மார்க் குரலில் பேசுகிறார்(ரவி கிஷ்ணா கொரல பத்தி தனியா சொல்லனுமா?ஐயோ சாமி!!) மற்ற எல்லாரும் ஒன்னு அடி தொண்டையில் உறுமுகின்றனர் இல்லைன்னா கீச்சுன்னு கத்துறாங்க!
மற்ற நாட்டு படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வியாதி என்னவெனில் ஒரு படம் பேரு வாங்குனா அதே போல அம்பது படம் வரும்!பருத்தி வீரன்(ஒரு சேவிங் பண்ண காசில்லாத குளிக்காத பன்னாடை அப்புறம் ஒரு தாவணி போட்ட பொண்ணு), சுப்ரமணியபுரம்(நாலு ஓதவாக்கரைகள் ஒரு தாவணி போட்ட பொண்ணு) இப்படி எல்லா கருமாந்திரத்தையும் பாத்து சலிச்சு போச்சு!!இப்போ இதே ஆரண்ய காண்டத்தை போல அம்பது படம் எடுக்கப்படும்!!அப்போ இதே அறிவு ஜீவிகள் ஐயோ அம்மா ன்னு கூச்சல் போடுவார்(ஆமா நீங்க தூக்கி உடுறீங்க!!அனுபவிங்க!)
படத்தின் முதல் காட்சியே மேட்டர் செய்வது.நான் என்னமோ அது கோஹினூர் காண்டம் விளம்பரம்னு நெனச்சுட்டேன்!!சிறு நீர் கழிப்பதையும்(இதற்கு முன்பே பல படங்களில்) காட்டி விட்டனர்!!அடுத்து மலம் போவதோ?சென்சார் அப்படின்னு ஒன்னு இருக்கா?இப்படி அருவருப்பான விஷயங்களை காட்டினாலே உடனே சில அறிவு கொழுந்துகள் ஆஹா ஓஹோ!!ன்னு சொல்வது இவர்கள் எத்தகைய அருவருப்பான மனதை உடையவர்கள் என்பது விளங்கும்!!இந்த அறிவு ஜீவிகளின் கக்கூசிலும் கேமரா வச்சி படமேடுக்கலாமே?!!
மற்ற படி ஆரண்ய காண்டம் சரியான மொக்கை!!கெட்டவார்த்தை கேக்க நான் ஏன் படத்துக்கு போகணும்?கொழாயடிக்கு போனாலே போதுமே!!இப்படிதான் பொல்லாதவன் அப்படின்னு கொசு தனுசு நடிச்ச படம் Bicycle Thieves படத்தின் அருவருப்பான பிரதி!ஏய்யா இந்த கொலை வெறி?வெற்றிமாறன் டுபுக்கு படத்தையும் எதிர்ப்பார்க்கும் சூடோ இண்டலெக்சுவல்கள் இங்கு உள்ளனர்!!ஐயோ ஐயோ!!
அப்புறம் யுவன் சங்கர் ராஜா ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் ஹான்ஸ் சிம்மரின் இசையை வேறு சுட்டு ஆங்காங்கே பயன்படுத்துகிறார்!!இதான் உலக தரமோ?என்னவோ!!
ஆனால் ஒன்று முடிவு செய்துவிட்டேன்.பட விமர்சனங்களை படித்து அதில் நல்லா இல்லை ன்னு சொன்னா ரொம்ப வசதியா போச்சு பாக்குற வேலை மிச்சம்!ஆஹா ஓஹோன்னா இனி பார்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்!இந்த தெளிவை கொடுத்த விமர்சன அன்பர்களுக்கு நன்றியோ நன்றி!!உலக சினிமா உள்ளூர் சினிமா இந்த வேறுபாட்டை ஏற்று கொள்பவர்கள இலக்கியத்தில் மட்டும் தலித் இலக்கியம் பெண் இலக்கியம் ஆகிய வேறுபாட்டை நிராகரிப்பது ஏனோ?!!!என்னவோ பண்ணட்டும் ஆளை விடுங்க.தமிழ் சினிம்மான்னாலே கடும் அலர்ஜி இருந்தது .இப்போது அது இன்னும் அதிகரித்து விட்டது!!
அப்புறம் ஏதோ எல்லாரும் சொல்வதுக்கு மாற்று கருத்து சொல்வது நான் என்னமோ ஹிட்ஸ் வாங்க செய்ததாக நினைத்தால் எனக்கு கவலையில்லை!!இந்த ஹிட்ஸ்,இன்ட்லி,தமிழ்மணம்,பொறந்த நாளு நம்பர் ஒன ரேன்க் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை!!நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன்.அம்புட்டுதேன்!
ஆனால் அதே விவாதங்கள் தமிழ் சினிமாவுக்கும் பாந்தமாக பொருந்துகிறது என்பதை உணர்த்திய படம் ஆரண்ய காண்டம்!ப்ளாகரில் எல்லாரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளப்பட்ட படம்!சிலர் தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு என ஓவராக விளித்தனர் !!!ஏய்யா பருத்தி வீரன் சுப்ரமணியபுரம் எல்லாம் வந்தபோதும் இதே தான சொன்னீங்க?எம்புட்டு தபா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர்?ஒருவேளை ovulation problem ஆ?எதுக்கும் ஒரு நல்ல Gynecologist கிட்ட தமிழ் சினிமாவ காட்டுங்க!!
படம் மொக்கையோ மொக்கை!!ஒவ்வொரு கதாபாத்திரமும் சாதாரண மனிதன் போல பேசுவதில்லைன்னு சபதம் செய்துதான் அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் பேசியிருப்பாங்க போல!!சம்பத் மட்டுமே தனது அக்மார்க் குரலில் பேசுகிறார்(ரவி கிஷ்ணா கொரல பத்தி தனியா சொல்லனுமா?ஐயோ சாமி!!) மற்ற எல்லாரும் ஒன்னு அடி தொண்டையில் உறுமுகின்றனர் இல்லைன்னா கீச்சுன்னு கத்துறாங்க!
வழக்கமான விஷயங்களை மாற்றி செய்தால் அதை உலகத்தரம் என்று சொல்ல சில சூடோ இன்டலெக்சுவல்கள் (நன்றி ஆதவன்) வெறிகொண்டு அலைகிறார்கள்.அதென்ன உலகத்தரம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பண்பாடு கலாசாரம் மொழி இனம் அது இதுவென்று ஆயிரம் உள்ளது.இதில் எங்கு வருகிறது உலக தரம்?இதென்ன காரா?euro norm barath norm என்று சொல்ல?இசையை எடுத்து கொண்டால் அதென்ன உலக இசை?உலகத்தில் ஒவ்வொரு நாட்டின் இசை கருவியையும் ஒன்றாக இசைப்பதோ?இப்போது திரைப்படத்துக்கு வருவோம்!இதில் என்ன உலக தரம்?ஆஸ்கர் அமெரிக்காவின் அளவுகோல் கான்ஸ் ஐரோப்பிய நாடுகளின் சினிமாவை மையபடுத்தும் ஒன்று.உலக சினிமா எடுக்கிறேன் என்று ஏன் தமிழில் எடுத்து சாகடிக்கிரீர்கள்?சேகர் கபூர் போல ஆங்கிலத்தில் எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாமே?