பீப்ளி லைவ் என்ற படத்தை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.விவசாயிகளின் அவல நிலையை பகடி செய்து கார்பரேட்டு மரமண்டையில் ஏறும் அளவில் சொன்ன ஒரு அருமையான படம்.இந்திய விவசாயிகளின் அவல நிலை அவர்களை அரசியல்வாதிகள்+அதிகாரிகள் நடத்தும் அவலமான இழிவான விதம்,பொனத்தின் வாயில் கூட அரிசியை புடுங்கி தின்பதுபோல இந்த விவசாயிகளின் அவல நிலையை நேரலை செய்து டி ஆர் பி ரேட்டிங் பெறலாம் என அலையும் தனியார் செய்தி தொ(ல்லை)லைகாட்சிகளின் பண வெறி என எல்லாவற்றையும் பொட்டில் அடித்தாற்போல சொன்ன அருமையான படம்.இதுவும் 2010 இல்தான் வெளிவந்தது.ஆனால் இந்த படத்திற்கு ஒரு தேசிய விருதும் கொடுக்கப்படவில்லை.!!மாறாக 2011 இல் வெளியான ஆடுகளம் என்ற சன் பிக்சர்சின் டுபாகூர் படத்துக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டது இந்த ஆண்டின் சிறந்த முரண் நகை!!இது கே டி பிரதர்ஸின்(அதான் கலாநிதி தயாநிதி!!)வியாபார மற்றுமதிகார வர்கத்தின் மீதான கில்லாடித்தனமான ஒரு கட்டுப்பாட்டையே காட்டுகிறதே ஒழிய சிறந்த படத்தை அடையாளம் காட்டவில்லை!அரசாங்கம் என்பது(கம்யூனிஸ்டு வலது இடது பேதம் இல்லை) கார்பரேட்டுகளின் பிடியில்தான் நடக்கிறது என்பதை நான் ஏற்கெனவே கோரியுள்ளேன்!!அப்படி பட்ட கார்பரேட்டுகளை,முதலாளிகளை பகடி செய்த பீப்ளி லைவ் விருதுக்கு தேர்ந்தேடுக்கபடாதது ஒன்னும் ஆச்சர்யம் அளிக்கவில்லை.
*******************************************************************
இது குறித்த தீக்கதிர் கட்டுரை கீழே!!
http://www.theekkathir.in/index.asp
*******************************************************************
இது குறித்த தீக்கதிர் கட்டுரை கீழே!!
http://www.theekkathir.in/index.asp