வெள்ளி, 20 மே, 2011

பல கேள்விகள் ஒரே பதில்

*பல தேசிய விருதுகள் "வாங்கப்பட்ட"(வழங்கப்பட்டதில்லை.கவனிக்க!!)ஆடுகளம் படம் அங்காடி தெருவை விட சிறந்த படமா?
* கனிமொழி,சரத் குமார்(இவுரு வேற),ராசா,கல்மாடி  இவர்கள் மட்டுமே கைது ஏன்?டாடா நீரா ராடியா  உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படாததேன்?
* அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்  தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஒரு வார்த்தை சொல்லாததேன்?
******************************************************************
எல்லாத்துக்கும் ஒரே பதில்:கார்பரேட் களவாணித்தனம் அல்லது முதலாளித்துவ சக்தி.
.
அங்காடி தெரு படம் முதலாளித்துவத்தின் கொடூர முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய படம்.அதனால் அந்த படம் ஓரங்கட்டப்பட்டுள்ளது.ஏனெனில் எல்லா அரசும் (மத்திய மாநில,கம்யூனிஸ்ட்,வலது) கார்பரேட்டுகளை நம்பியே நடக்குது.அவர்களை தோலுரித்து காட்டிய படத்தை எப்படி முதலாளித்துவ அரசு ஒப்பு கொள்ளும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக