இன்று அட்சய திரிதையாம்!!!இன்று நகை வாங்குவோர் மேலும் செல்வம் பெற்று பணக்காரர்களாவராம்!!!இது உண்மையெனில் வருடாவருடம் நகை கடையில் கூட்டத்தில் நசுங்கி நகை வாங்கும் ஒவ்வொரு குடும்பமும் இந்நேரம் போன வருடத்தை விட பணக்காரனாகியிருக்க வேண்டும்.ஆனால் உண்மை நிலை என்ன?இந்தியாவில் 60 % மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான் நாள்கூலியாக பெறுகின்றனர்.பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிவருகிறான் ஏழை மேலும் ஓட்டாண்டி ஆகி வருகிறான்.இந்த நிலையில் நகை வியாபாரிகள் மேலும் கொழுத்த பண்ணக்காரன் ஆக உண்டாக்கிய இந்த அட்சய திரிதை எனும் வியாபார புழுகுமூட்டையை நம்பி நகை கடையில் அலை மோதும் அறிவிலிகளை என்னவென்று சொல்ல?கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டீங்களா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக