செவ்வாய், 17 மே, 2011

மூடநம்பிக்கை பரப்புரை ஆரம்பம் !!!


ஜெயலலிதா  ஜெயித்தபின்தான் மூடநம்பிக்கை பரப்புரை ஆரம்பிக்கும் என்ற நினைப்பை பொய்க்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியாகும் அன்றே காலையில் நான்கு ஜோதிடர்களை ஜெயா டிவி   குந்த வைத்து ஜாதகப்படி ஜெயா முதல்வர் என சொல்லவைத்தனர்(அந்த நேரம் தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரம்.அந்த முடிவை கூட ஒத்திவைத்து இது போன்ற மூட நம்பிக்கை பரப்புரை செய்த ஜெயா டிவியை என்னவென்று சொல்ல?!).
இப்போது ஆட்சி பொறுப்பேற்றவுடன் தினமலர் மூடநம்பிக்கையை ஆரம்பித்துவைத்துள்ளது.அதாவது ஜெயாவுக்கு இப்போது எழுத்தான் ராசி என்னாம் அதான் மே 16 (கூட்டு என் ஏழாம்!!) அப்புறம் பதவி ஏற்றவுடன் ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார்!!இனி எல்லா நிகழ்சிகளும் ஏழு கூட்டு என் கொண்ட தேதியிலேயே அமைக்கப்படும்.அன்னதானம் இலவச திருமணம் இலவச சைக்கிள்  லொட்டு லொசுக்கு எல்லாம் கூட்டு என் ஏழில் அமைக்கப்படும்.
இது போக தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றதால்தான் கருணாநிதி ஆட்சி இழந்தார் எனவும் புழுகு  மூடைகளை அவிழ்த்துவிட்டுள்ளது தினமலர் நாளேடு!!இதை மற்ற ஹிந்துவெறி  ஊடகங்களும் இனி செய்யும்!!!ஆயிரம் பெரியார் வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக