சனி, 27 நவம்பர், 2010

வெளுத்து போன சாத்தான் டாடாவின் சாயம்

 இந்தியாவே மாமனிதன் இந்தியாவின் புகழை உயர்த்தியவர் அது இது என மக்கள் ரத்தன் டாடாவின் போலி  மாயையில் சிக்கவைக்கப்பட்டிருன்தனர்(பல வருடங்களாக..கிட்டத்தட்ட நூறு வருடங்களாக நம்ப வைக்கபட்டிருன்தனர்).சென்ற வாரம் கூட சத்தீஸ்கர்  மாநிலம் துவக்கப்பட்ட ஏழாவது ஆண்டு விழாவில் பேசிய(அதற்கு இவரை எதற்கு அழைத்தனர்?ஒன்னும் வெலங்கள்) டாடா தொன்னூறுகளில் தான் விமான சேவை துவங்க விரும்பயதாகவும் ஆனால் அப்போது விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த ஒருவர்(பெயரை டாடா சொல்லவில்லை) 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் இவர் ஏதோ இந்தியன் பட தாத்தா போல் "லஞ்சம் கொடுக்க மாட்டேன்" என கூறியதால் விமான சேவை துவங்கும் தந்து கனவு தவிடு போடியானதாகவும் கூறினார்.இது பற்றி சென்ற வாரமே எழுதிய நான்(டாடா என்னும் சாத்தான் ஓதிய வேதம்) இவர் பெரிய ஒழுங்கா?தனது இத்தனை வருட வியாபார வாழ்கையில் இவர் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லையா?என வினா எழுப்பியிருந்தேன்.


அதற்கு சிகரம் வைத்தாற்போல் சென்ற வாரம் ஊரே நாறிய நீரா ராடியா  என்ற பெண்மணி விவகாரமும் அதில் டாடாவின் "நேர்மையும்" விளங்கியது.
அதில் நீரா ராடியா  என்கிற அரசியல் மா..(சீ கொஞ்சம் நாகரீகமாக தரகர் என கூறுகிறேன்)வேலை பார்க்கும் பெண்ணிடம் கனிமொழி ராசா  உட்பட "கழக கண்மணிகள் " ஆற்றிய தமிழர் சேவை கண்டு அனைவருக்கும் புல்லரித்திருக்கும்  .
        அந்த கருமாந்திர உரையாடலை கேட்க கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்
.
http://www.filefactory.com/file/b473bd9/n/IMP-Ratan-Spectrumissue-20090611-155759.mp3


அந்த உரையாடல்களில் வந்த ஒன்றுதான் டாடா-நீரா ராடியா  உரையாடல்.
அதில் இந்த "உத்தமன்" "வெள்ளை மனசுக்காரன்" டாடா நீரா ராடியாவிடம்  பேசுகையில் தயாநிதி மாறன் தொலை தொடர்பு மந்திரியாக வந்துவிடக்கூடாது என்பதிலும் யார் வர வேண்டும்(அவர் பெயரை சொல்லவும் வேண்டுமா?) என்பதிலும் டாடா காட்டிய அக்கறை புல்லரித்தது.அப்படி இவர் நினைத்த ஆள் மந்திரியாகவில்லைஎனில் எப்படி ஜப்பான் கம்பெனியான NTT Docomo என்ற நிறுவனத்துடன் இணைந்து GSM சேவையான (ஏற்கெனவே  டாடா  CDMA சேவை பல ஆண்டுகளாக வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்)Tata-Docomo என்ற சேவையை இவரால் தொடங்கி கொள்ளை.. சாரி சம்பாதித்திருக்க முடியும்?
இவரின் சாயம் வெளுத்த நிலையில் இதே போல்தான் அம்பானி உள்ளிட்ட "மக்கள் சேவகர்களின்" உண்மை முகம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அப்புறம் இந்த டாடாவின் நானோ தொழிற்சாலையை  மேற்குவங்க மாநில சிங்கூரில் அமைக்க டாடாவிற்கு  கைக்கூலியாக செயல்பட்ட(மேலும் அங்கிருந்த விவசாயிகளிடம் இருந்து காவல் துறை மூலம் விளை நிலங்களை பிடுங்கிய) இடதுசாரி அரசாங்கம் இப்போது இந்த டாடாவை கண்டித்து தனது கட்சி பத்திரிகையில் எழுதுவது கேலிக்கூத்து.இப்போது டாடா கெட்டவர் என்றால் அப்போது  இடதுசாரி அரசுக்கு இவர் நல்லவராக தெரிந்தாரா?

செவ்வாய், 23 நவம்பர், 2010

பறி சுத்தம் -பார்த்ததில் பிடித்தது

 நன்றி தினமணி

http://www.dinamani.com/edition/photoonStory.aspx?&SectionName=Cartoon&artid=336333&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%27%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%27%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!

திங்கள், 22 நவம்பர், 2010

என் சிண்ட நீ புடி உன் சிண்ட நான் புடிக்கிறேன்

 கடந்த ஒரு வாரமாக இந்தியாவே நாரி கொண்டிருக்கும் இரு விவகாரங்கள்.முதலில் ஊழலில் வெள்ளைகாரனை விட அதிகம் சுரண்டி சாதனை படைத்த அலைகற்றை ஊழல் இரண்டு எடயூரப்பா 6000 கோடி நிலா மோசடி .கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வந்த பாஜகவிற்கு செக் வைக்கும் வகையில் எட்யூர்ப்பாவின் ஊழல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது.இது காங்கிரசின் களவானித்தனத்தில் ஒரு வண்ணம்.அதற்காக எடயூரப்பா அப்பாவி என்று நான் சொல்லவில்லை.எல்லாரும் கேப்மாரிங்கதான்.
ஆனால் தனது அமைச்சரவையில் இருந்த ஊழல் மன்னன் ராசாவை நீக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடித்த  காங்கிரஸ் இப்போது பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கூறுவது கேலிக்கூத்து  .


இப்போது  நடக்கபோவது என்ன?அதான் எல்லாருக்கும் தெரியுமே..இப்படியே கொஞ்ச நாள் ஆர்பாட்டம் செய்துவிட்டு சிறிது காலம் ஆனவுடன் இரண்டு கேபமாரிதனங்களும் மூடி மறைக்கப்படும்.
ஊழல் பணத்தை மீட்கவோ அல்லது அலைகற்றை பெற்ற நிறுவங்களை தடை செய்வதோ இந்தியா சனநாயகத்தில் நடக்கும் என எதிர்பார்ப்பவன் அடிமுட்டாள்.
ஏற்கெனவே இந்த ஊழல் பணத்தை கொண்டு சிலர் அமேசான் காட்டில் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி போட்டுள்ளதாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.இது வெறும் சாம்பிள்தான்.நிலம் வாங்குவது தீவு வாங்குவது சொத்து வாங்குவது என ஊழல் பணம் அனைத்தும் கரைக்கப்படும்.மீதம் இருக்கும் பணம் ஸ்விஸ் பாங்கில் பத்திரமாக போடப்படும்.அதை இங்க கொண்டுவர நாதியற்ற ஒரு அரசுதான் இங்கு நடந்து வருகிறது என அனைவருக்கும் தெரியும்.
அப்புறம் வழக்கம் போல் அம்பானி போன்ற இந்த ஊழலால் லாபமடைந்தவர்களின் துணையுடன் மீண்டும் இவர்களே ஆட்சி பிடிப்பார்கள்..the cycle goes on....வாழ்க சன நாயகம்

திங்கள், 15 நவம்பர், 2010

டாட்டா என்கிற சாத்தான் ஓதிய வேதம்!

இப்போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என பத்திரிகை மற்றும் பிற ஊடகங்களில் இதே தினசரி பேச்சாகிப்போன நிலையில் ரத்தன் டாட்டா நேற்று திருவாய் மலர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்  தான் விமான சேவை தொடங்க தொன்னூறுகளில் விரும்பியதாகவும் அதற்கு அனுமதி பெற மூன்று பிரதம மந்திரிகளை சந்தித்ததாகவும்  கூறினார்.மேலும் அவர் கூறுகையில் இந்த பிரதம மந்திரிகள் போடாத முட்டுக்கட்டையை ஒரு விமான போக்குவரத்து அமைச்சரால் (யார் என இவர் பெயர் சொல்லவில்லை) தடைபட்டது என்றார்.
அந்த பெயரிடப்படாத விமான போக்குவரத்து அமைச்சர் இதன் டாடாவிடம் 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு இவர் இசைந்து கொடுக்காததால் விமான சேவை தொடங்கும் தனது கனவு தரைமட்டமாகிவிட்டதாம்!
இவர் இத்தனை வருடங்களாக இதுபற்றி வாயை திறக்காமல் இப்போது திறந்தது ஏன் என பல கேள்விகள் எழுந்தாலும் இவர் அந்த மந்திரி லஞ்சம் கேட்டவுடன் அப்போதே ஊழல் ஒழிப்பு துறைக்கோ அல்லது பிரதமருக்கோ(இவர் பிரதமரை சந்திப்பது சாமான்ய மக்களை போல் அவ்வளவு கடினம் இல்லை) புகார் தெரிவித்திருக்கலாம்.அல்லது ஊடகங்களுக்கு சொல்லியிருக்கலாம்.
அப்போதெல்லாம் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்போது "ஹோ!  அவர் லஞ்சம் கேட்டார் நான் கொடுக்கவில்லை!" என்பதுபோல் கூறி தன்னை ஒழுக்க சீலர்  போல் காட்டிகொள்வது வெறும் விளம்பரத்துக்காக அன்றி வேறெதற்கு?
அப்போது இவர் கூற வருவது இத்தனை வருட வியாபார வாழ்க்கையில் ஒருமுறை கூட கம்பெனி தொடங்குவதற்கோ அல்லது விரிவாக்கதிற்கோ  இவர் லஞ்சம் கொடுக்கவில்லை என கூற தயாரா?
 மேற்கு வாங்க மாநில சிங்கூரில் தனது நானோ சார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கு இவர் செய்த தகிடுதத்தங்கள் யாருக்கும் தெரியாது அல்லது மறந்திருப்பார் என நினைத்தாரா?
சிங்கூரில் விவசாய விளைநிலங்களை விவசாயகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டு "நிலத்தை கொடுக்க முடியாது" என போராடியவர்களை அங்கிருந்த டாடாவின் ஏவல் அரசாய் மாறிப்போன இடதுசாரி அரசின் காவல் துறையை விட்டு தடியடி ,கைது போன்ற அராஜகங்களை அரங்கேற்றியத்தை யாரும் மறந்திருக்க முடியாது.இந்த சிங்கூர் சம்பவம்  வெறும் ஒரே ஒரு உதாரணம் மட்டுமே.
இவர் நிலம் பறித்து அதில் கட்டிய தொழிற்சாலைகள் பலப்பல.
இப்போது அவர்கள் லஞ்சம் கேட்டார்கள் .நான் கொடுக்கவில்லை என கூறுவது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது.அடங்கப்பா இது அந்தர்பல்டிடா சாமி!

ஞாயிறு, 14 நவம்பர், 2010

எடையில ஒரு சின்ன தமாசு

அரசியல் பற்றியே எழுதி வரும் நேரத்தில் தமாசுக்கு இடையில் சரத்குமாரின் பேட்டி.கொஞ்சம் பழசுதான்!பாருங்கள் மனுஷனின் தன்னம்பிக்கையை!!!!
***************


விடியல் படத்தின் பிரஸ் மீட்டில்  சரத் பேசியவயே    பின்வருவன! 
விடியல் படத்தைவிட வேறு விவகாரங்கள் பற்றியே அவர் பேச்சு அதிகமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் ஆஸ்கர் விருது பற்றி அவர் பேச்சு திரும்பியது. அப்போது அவர் இப்படிச் சொன்னார்:
நான் சினிமாவில் 27 வருஷமா இருக்கேன். சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய வெற்றிப் படங்களில் நடித்தவன் நான்.

நடிக்க வந்ததிலிருந்தே ஆஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது.
எப்படியாவது ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று.

நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.

இப்போது நான் நிறைய மலையாளப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒரு கன்னடப் படம் பண்ணுகிறேன். பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் பண்ணுவேன். நிச்சயம் ஆஸ்கர் வெல்வேன்.

ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஆஸ்கர் வெல்லலாம். {விட்டு கொடுக்கும் மனப்பான்மை? }

எப்படியும் 90 வயது வரை நான் இருப்பேன். அதற்கான உடல் மன பலம் எனக்கு இருக்கிறது. 85 வயதில் கூட டூயட் பாட முடியும். டூயட் பாட கால்கள் நன்றாக இருந்தால் போதும். மற்றபடி வயது ஒரு தடையில்லை.

**************************************************************************
.

                                                       (ஒரு சின்ன கற்பனை..ஹீ ஹீ மட்டமான Graphics-க்கு மன்னிக்கவும்! ;))


அடங்கப்பா!தன்னம்பிக்கையின் அளவுகோல் உடைந்தது!
மனுஷன் இன்னா  மாதிரி கனவு காணுறார்!முதல்ல இவுரு கட்சியே பூட்ட கேசு.முதல்ல திமுகவுல இருந்து விலகி அப்புறம் அதிமுகவுல ஒரு வாரம் அடுத்த வாரம் சொந்த கட்சி.....அப்புறம் மறுபடியும் கலிஞ்சருக்கு ஜால்ரா!!!!
இப்போ ஆஸ்கார் விருது வாங்க போறாராம்!
ரசூல் பூக்குட்டி மற்றும் ரெஹ்மான் வாங்கும்போது நான் வாங்க கூடாதா என கேட்கிறார்.
அது சரி அந்த இருவருக்கும் அவார்டு கொடுத்ததின் காரணமே டன்னி பாயில் என்ற வெள்ளைகார இயக்குனர் ச்லம்டாக் படத்த எடுத்ததால்தான்(அதே 2008 வருடத்தில் வெளியான ரீடர் படத்த விட இது சிறந்த படமாம் ..தமாசு!)
இது பற்றி ஷாஜி ஏற்கெனவே எழுதியிருக்கிறார்.(Curious case of Benjamin button படத்தின் பின்னணி இசை பற்றி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.)
சரி இப்போ சரத்துக்கு இன்னா ஆச்சி ஒன்னியும் வெளங்கல!ஓவரா வெயில்ல சூட்டிங் போனதால ஏற்பட்ட பக்கவிளைவா இருக்கலாம்! ராதிகா சித்தி எதுக்கும் ஒருதபா சரத்த  டாக்டராண்ட கூட்டிகினு போறது நல்லது.
இப்படிதான் கடந்த இருபது ஆண்டா ஒரு ஒலக நாயகன் சொல்லிகினு இருந்தார்.அப்பால "சீ! இந்த பழம் புளிக்கும்!" கதையா "நான் அவர்களுக்கு கமல்ஹாசன் விருது கொடுக்கத்தான் ஆசை" என்று அந்தர் பல்டி அடித்தார்.
நீங்களும் "நான் அவர்களுக்கு சரத் விருது கொடுக்கத்தான் ஆசை" என பல்டி அடிக்கலாம்!
அப்புறம் நீங்க "நான் நூறு வயசு வாழ்வேன் தொண்ணூறு வயசு வரை டூயட் பாடுவேன்" என்பதெல்லாம் என் கவலை  இல்லை நீங்கள் SN.லக்ஷ்மி கூட வேணும்னா டூயட் பாடுங்கள்.நான் உங்கள் படம் பார்ப்பதில்லை(ரிஸ்க் எடுக்க முடியல சார்!!.அதான்!) 
எடையில அந்த ரஜினிய ஏன் இழுத்தார்னு பிரியல..அவுரே "நான் நேத்து வருவேன்! நாளைக்கு வருவேன் அவன் சொன்னா வருவேன் இவன் சொன்னா வருவேன்" என அரசியில்ல கொரலி வித்த காட்டிகினு இருந்தார்.இப்போதான் கொஞ்சம் தெளிஞ்சிருக்கார் .இமயமலை அதிகமா போறதுக்கெல்லாம் ஆஸ்கார் குடுப்பாங்களான்னு தெரியலேயே ராசா!

வெள்ளி, 12 நவம்பர், 2010

படித்ததில் பிடித்தது

உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள்..!


http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_09.html
*
எல்லாம் காக்க காக்க போன்ற என்கௌன்டருக்கு  ஜால்ரா போடும் படங்கள் மற்றும் ஊடகங்களால் வந்த வினை போல!!!ஹ்ம்ம் என்னத்த சொல்ல!

சந்துல சிந்து பாடும் ஜெ!!!

ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல திசைகளிலிருந்தும் குரல் எழும்பி வரும் நிலையில்(சட்டசபை பக்கம் தலைவைத்தும் படுக்காத!!!) எதிர்கட்சி தலைவி இது குறித்து குடியரசு தலைவருக்கு தந்தி அனுப்புங்கள் என கூக்குரலிட்டார்  .அவ்வாரே  அம்மாவின் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று Times Now தொலைகாட்சிக்கு ஜெ    அளித்த பெட்டியில் ராசாவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் தயங்குவது ஏன் என தனது யூகத்தை கூறினார்.அதில் காங்கிரஸ் தனது கட்சியில் ஊழல் குற்றசாட்டில் ஈடுபட்ட கல்மாடி மற்றும் சவானை நீக்கி விட்டதாகவும் ராசாவை நீக்கினால் எங்கே திமுக மத்தியில் ஆதரவை வாபஸ் வாங்கிவிடும் என்ற அச்சத்தினால்தான் என ஜெ கூறினார்.
மேலும் அவர் கூறும்போது ராசா மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் திமுக ஆதரவை விளக்கி கொண்டாலும் தனது கட்சி மற்றும் தனது கூட்டணி கட்சிகள் மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் எனவும் சந்துல சிந்து பாடினார்.
அதாவது காங்கிரசிற்கு திமுக கூட்டணியை சேர்ந்த  18 எம்.பிக்கள்  தற்போது ஆதரவளிப்பதாகவும் ஒரு வேலை ராசா மீது எடுக்கும் நடவடிக்கையால் அவர்கள் வாபஸ் வாங்கினால் தனது அதிமுக -வை சேர்ந்த ஒன்பது எம்பிக்களும் மேலும் கூட்டணி கட்சி எம்பிக்களும் சேந்து அதே பதினெட்டு எம்பிக்கள் ஆதரவை எந்த முன் நிபந்தனை இன்றியும் ஆதரவளிக்க தயார் என அறிவித்துள்ளார்.
ஆகா! இதுவல்லவோ அரசியலுக்கு அழகு!
கடந்த ஆண்டு இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர் கொன்று குவிக்க ராஜபக்சே அரசுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய தமிழர் விரோத காங்கிரசு அரசுக்கு அம்மையார் ஆதரவளிக்க தயாராம்!
ஏற்கெனவே இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் புதைமணலில் சிக்கி கொண்டிருப்பதாகவும்  தன பக்கம் வருமாறும் தூது விட்டார் அம்மையார்.ஆனால் பலிக்கவில்லை!
அப்போ விடுதலைப்புலி கோஷம் விடாமல் தூக்கத்திலும் எழுப்பும் வைகோவின் கதி?
ஒரு பிரச்னையும் அவருக்கு இல்லை.இப்போ நம்ம திருமா ஒரு பக்கம் காங்கிரசு கூட்டணி அரசில் அங்கம் வகித்து கொண்டே மறு பக்கம் தினமும் தமிழக மீனவர் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையா? தமிழன் செத்தால் எவனுக்கென்ன?
அப்போ இந்த அம்மையார் கடந்த ஆண்டு இலகையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் தினமும் தமிழக மீனவர் கொல்லப்படுவதை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நடத்திய ஆர்பாட்டங்கள்,மற்றும் பெட்ரோல் விலையேற்றம்,முன்பேர  வணிகம் ..etc..etc.. ஆகியவற்றை கண்டித்தும் நடத்திய ஆர்பாட்டங்கள்   வெறும் வெற்று கூச்சல் என இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது!
 இருக்கவே இருக்கு பன்ச்    டயலாகு :"அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை"   
வாழ்க  சன நாயகம்!

வியாழன், 11 நவம்பர், 2010

சுனாமியான அலைகற்றை விவகாரம்(ஊழல் பாகம் இரண்டு!)

என்னடா இவன் ஊழல் பாகம் ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி  சொல்கிறான் என நினைக்க வேண்டாம்.நம்ம "சனநாயக" இந்தியாவில் முடியாத பாகங்கள் பல உண்டு.
அவற்றை தொகுத்தால் இந்த வலைப்பூவே  இடம் காணாது போல!!!
சரி இப்போ அந்த அலைகற்றை ஊழல் விவகாரத்திற்கு வருவோம்.
எதிர்கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக காட்டுக்கத்தல்    நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  , மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும் இந்த அலைகற்றை ஊழல் பற்றியும் அதில் ராசாவின் பங்கு பற்றியும் பத்தி பதியாக பேசியும் எழுதியும் வந்த போதும் காங்கிரஸ் அரசு அதை கண்டுகொள்ளவில்லை.(மக்களும் தான்!.பின்ன  2009 இல் இவர்கள் மீண்டும் மத்தியில் ஆட்சி பிடித்திருக்க முடியாது)
இப்போ ஊழல் சீசன் போல!!!
ஐ பி எல் ஊழல் காமன்வெல்த்  மற்றும் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டம் என வரும் செய்திகள் அனைத்தும் ஊழல் மயமான இத்தகைய நேரத்தில் இந்த அலைகற்றை ஊழல் மீண்டும் சுனாமியாகி ஆட்சியாளர்களை தாக்கியிருக்கிறது.
இந்த அலைகற்றை ஊழல் விவகாரத்தை பெரும்பாலான  தமிழ் பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் மழுங்கடித்து(பிரபுதேவா நயன்தாராவுடன் ஓடிப்போன விஷயத்தை பெரிதாக போடுவர் .ஆனால் இத்தகைய ஊழல் விஷயங்களை மறைத்து அல்லது ஆட்சியாளர்களால் மறைக்கப்பட வைக்கப்பட்டன) விட்டன.

அலைகற்றை என்பது நாட்டின் சொத்து.அதை ஏல முறையில் நிறுவனங்களுக்கு விற்காமல் முதலில் வந்தோருக்கு முன்னிரிமை என விற்கப்பட்டது.இதனால் அதுவரை செல்பேசி வியாபாரத்திலேயே ஈடுபடாத unitech , swan போன்ற நிறுவனங்கள் இந்த அலைகற்றையை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று விட்டன.
  இப்படி செய்ததால் அரசுக்கு இழப்பு 1,76,379 கோடியாம்.மத்திய தணிக்கைதுறையின் (Comptroller and Auditor General)அறிக்கையிலேயே இது குறிப்பிடபட்டிருக்கிறது.


எதிர்கட்சி   தலைவி  வெளியிட்ட  ஒரு  அறிக்கையில்  வெள்ளைக்காரன்  நம்மை  ஆண்ட  பொது  கொள்ளையடித்தது  வெறும்  தொள்ளாயிரம்  கோடிதானாம்!  இதை படிக்கும் பொது பெரியார் கூறியது நினைவுக்கு வந்தது "இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை நாம் துக்க தினமாக கடைபிடிக்க வேண்டும்".

எதிர் கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்கள்  கூறுவது இந்த அலைகற்றையை குறைந்த நிலைக்கு ஏன் விற்க வேண்டும்?
மேலும் அரசிடம் அலைகற்றை வாங்கிய நிறுவனங்கள் வேறு யாருக்கும் விற்க கூடாது என அரசு தடை போடாதது ஏன்?
ஏன் ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வந்தோருக்கு  முன்னுரிமை என வழங்க வேண்டும்?
ஏன் செல்பேசி தொழிலில் ஈடுபடாத  நிறுவனங்களுக்கும் அலைகற்றை வழங்கப்பட்டது?
..........

இப்படி பல கேள்விகளுக்கு அரசு தரும் பதில்கள் வெறும் வெற்று மழுப்பல்களே."கூட்டணி தர்மமா?ஆல்லது கூட்டு கொள்ளை தர்மமா?" என தெரியவில்லை.
காங்கிரஸ் கூறுவது எங்கள் கட்சியில் யாராவது ஊழல் செய்தால் நாங்கள் நடவடிக்கை  எடுப்பது(போல் ) எடுப்போம்.ஆனால் ராசா தி மு க என்பதால் நடவடிக்கையை திமுக தலைமைதான் எடுக்க வேண்டுமாம்.(அது சரி நம்ம  "நிதி" அய்யாகிட்ட நீதி எதிர்பார்க்கலாமோ?)
மேலும் உச்ச நீதி மன்றமே(தேதி அக். 29 2010) இந்த ஊழல் விசாரணை எம்புட்டு காலம்தான்  நடக்கும் என கடுப்படித்தது. சிபிஐ தொலை தொடர்பு அலுவலங்களை ரெய்டு செய்தது .ஆனால் அத்தகைய நேரங்களில் நம்ம திமுக மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது  சொல்லி தெரிய வேண்டியதில்லை.

சமீப  செய்தி: கனிமொழி டில்லி சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து ராசா எந்த ஊழலும் செய்யவில்லை என கூறியிருக்கிறார்!அடங்கப்பா உங்களுக்கு பதவி வேனும்னாலோ அல்லது பதவி தக்க வைக்கவோ நீங்க டில்லி உடனே போவீங்க. ஆனால் இலங்கை தமிழர் விவகாரத்திலோ அல்லது தினம் தினம் செத்து கொண்டிருக்கும் தமிழக மீனவர் பற்றியோ வெறும் கடிதம் மட்டுமே எழுதுவீங்க.புல்லரிக்குது உங்க மக்கள் சேவை!
அதாவது நம்ம "உலகம் சுற்றும் முதியவர்", "எப்போவாவது இந்தியாவிற்கு வரும்" மன்மோகன்  சிங்  இன்று இந்தியா திரும்பிய உடன் ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட உடன் மகளை டில்லி அனுப்பிவிட்டார் நம்ம தலிவர்!ஆஹா இதுவல்லவோ தமிழனுக்கு ஆற்றும் தொண்டு!
எவனாவது நூறு ஆயிரம் லஞ்சம் வாங்குவதை மட்டும் பிடிக்கும் நம்ம லஞ்ச  ஒழிப்பு துறை(அட நம்புங்க! அப்படி ஒரு துறை இருக்காமே!!) பெரிய ஊழல்வாதிகளையும் லஞ்சம் பெரும் பெரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுத்ததாக சரித்திரம் இல்லை.
இப்போது காட்டு கத்தல் கத்தும் ஊடகங்கள் அடுத்த வாரத்தில் வேறு செய்தியை (உம். நடிகை குலுக்குஸ்ரீ வீட்டு நாய் நான்கு குட்டிகளை ஈன்றது!!!..இது பற்றி எமது அம்பத்தூர் செய்தியாளர் கூறும்போது....Blah blah) பிரதானமாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை

ஊழல் பாகம் ஒன்று

ஒபாமா இந்தியாவிலிருந்து புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் காமன் வெல்த் ஊழல் புகழ் கல்மாடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் இருவரும் நீக்கப்பட்டனர்.
  

(பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் காங்கிரசில்  வேறு சில பதவிகள் வழங்கப்படும்.அது வேறு விஷயம்!காங்கிரசின் பல ஆண்டு உக்தி அது .)
இது பிள்ளையாரை பிடிக்க எதுவோ ஆன கதையாய் ஆனது!.காங்கிரஸ் இவ்விருவரையும் நீக்கிய நோக்கம் ஏதோ ஊழலுக்கு எதிரான போர்! ஆஹா! ஓஹோ! என ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயன்றது.
                                                        (நன்றி:தினமணி)

விசாரணை கமிஷன் வைப்பது எதற்கு என சின்ன குழந்தைக்கும் தெரியும்!பல ஆண்டுகள் ஊழல் விசாரணை ஒய்வு பெற்ற நீதியரசர் குழுவால் நடத்தப்படும்.பின்னர் "இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை" என கூறி அனைவரும் விடுதலை செய்யப்படுவர்.அல்லது ஒரு சில கீழ் மட்ட தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவர்(அவர்களைத்தானே இவர்களால் தண்டிக்க முடிகிறது!!!).அப்புறம் அந்த கமிஷனின் ஆயுட்காலம் முடிக்கப்படும்.அம்புட்டுதேன்.
காங்கிரஸ் இவ்வுருவரையும் நீக்கிய காரணம் மற்றொன்று இருக்கிறது.அது தலையை காப்பாற்ற வாலை வெட்டிவிடும் தந்திரம்.ஊழலில் "பெரிய தலைகள்" பல ஈடுபட்டதால் அவர்களை காப்பாற்ற இவ்விருவரும் நீக்கப்பட்டனர்(அதற்காக கல்மாடி மற்றும் சவானிர்காக  நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்க கூடாது).அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அதே நேரம் இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், கார்பரடே நிறுவனங்கள் (இந்த கார்பரடே நிறுவனங்கள் மட்டும் ஒவ்வொரு ஊழல் விவகாரத்திலும் சம்பந்தம் இருந்தாலும் அவர்கள் தப்பிவிடுகின்றனர்!!)
வெறும் ராஜினாமா நாடகங்கள் ஊழலை ஒழித்து விடாது!விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக(முக்கியமாக வாய்தா கொடுக்காமல்) விசாரணை  நடத்தி ஊழலில் ஈடுபட்ட அனைவரும் (கார்பரடே நிறுவனங்கள் உட்பட) தண்டிக்கப்பட வேண்டும்.அப்போதுதான் காங்கிரஸ் Clean image மாயை கொஞ்சமாவது நிசமாகும்.இல்லையேல் வழக்கம் போல் மக்கள் மறந்து, பத்திரிகைகள் மறந்து, ஊழல் செய்தவரே அந்த ஊழலை மறக்கும் (வழக்கமான!) நிலைமை மாறும்.

செவ்வாய், 9 நவம்பர், 2010

எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கத் தயார்: மன்மோகன் சிங்!!!!

அனைத்து பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.!!!! -செய்தி
.
செம்பட்ட சேகர்: அது சரி நீங்க எப்பனாசும்தான் இந்தியாவுக்கு வரீங்க. எப்போ இந்தியாவுல இருப்பீங்கன்னு  சொன்னா அவுகளுக்கு(எதிர்கட்சிகளுக்கு)  சுளுவா இருக்குமில்ல!

ஒபாமா வருகை சில காட்சிகள்!!!!










சும்மா தமாசுக்குதான் !!சீரியசா எடுத்துகாதீங்க!!! ;)

வியாழன், 4 நவம்பர், 2010

ஒபாமா விஜயம்!!


ஒபாமா இந்தியாவிற்கு வருகிறாராம்!அதுவும் தீபாவளி நேரத்தில் தனது இந்திய பயணம் அமையுமாறு பார்த்து கொண்டாராம்!
மும்பையில் ஒபாமா உருவம் பதித்த டி ஷர்டுகள் வியாபாரம் .அறிவிலிகள் அதை வாங்கி அணிந்து கொள்வதும் காண சகிக்காததாகிவிட்டது.ஏனென்றால் அமெரிக்காவிலேயே உள்ளாட்சி போன்ற தேர்தலில் ஒபாமாவின் சனநாயக கட்சி படு தோல்வி என தகவல் மேலும் அமெரிக்க மக்கள் மதியில் ஒபாமா மீது வெறுப்பு அதிகரிப்பதாவும் தகவல்.அப்படியிருக்க இங்கிருக்கும் அடிமைகள் சாரி இந்திய இளைஞ்சர்கள் ஒபமாவின் உருவம் படித்த டி ஷர்ட் அணிவது கேலிகூத்து.
அவரின் இந்திய வருகைக்காக தினமும் 900 கோடி பாதுகாப்புக்காக மட்டும் இந்திய அரசு செலவழிப்பதாக செய்தி.அருமை!இதுவல்லவோ சனநாயகத்திற்கு அழகு!எசமானிர்காக அடிமைகள் பல கோடி செலவழிப்பது.
மேலும் அவுட் சோர்சிங்கை தடையை ஞாயபடுத்தி பேசும் ஒபாமா (அதாவது தனது அமெரிக்க மக்களும் வேலை பார்க்க வேண்டுமாம்.ஆதலால் இந்த தடை அவசியமாம்!) அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இருக்கும் முட்டுகட்டைகளை இந்திய அரசு நீக்க வேண்டுமாம்.
அடங்கப்பா! புல்லரிக்குது.இதையும் இந்திய ஆட்சியிலிருக்கும் அடிமைகள் மண்டையை ஆட்டி "இந்தியாவில் உங்கள் நிறுவனங்கள் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என விரைவ்ல் ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம்.
ஏற்கெனவே போபால் விட வாயு விவகாரத்தில் லட்சகணக்கில் மக்கள் இறந்தும் நோய்வாய்ப்பட்டும் இப்போது பிறக்கும் குழந்தைகளும் ஊனத்தோடு பிறப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு வழக்கம் ஆகி விட்ட நிலையில் யூனியன் கார்பைட் தலைவர் வாரன் ஆண்டர்சன்னை கைது செய்து இந்திய அனுப்புமாறு ஒபாமாவிடம் கேட்க துணிவுண்டா?
அல்லது மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல ஆண்டுகள் முன்பே அது பற்றி தெரிந்தும் இந்திய அரசுக்கு தகவல் தராமலும், மேலும் தாக்குதல் நடந்த பின்பு ஹெட்லியை விசாரிக்க இந்திய அதிகாரிகளுக்கு லேசிலா அனுமதி கிடைத்தது?(ஆனால் அமெரிக்க அதிகாரிகள் ஏதோ திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் இந்திய வந்து அஜ்மல் கசாபை விசாரித்து சென்றனர்.என்ன இருந்தாலும் எசமான் இல்லையா?)
இப்போதும் ஒபாமா இங்கு வருவது அமெரிக்க அணு சக்தி உற்பத்தி நிறுவனகள் அங்கு காயிலாங்கடை போல் போட்டு வைத்திருக்கும் அணுசக்தி உபகரணங்களை இந்தியா தலையில் கட்டுவதற்கும்,விவசாயத்தை முழுமையாக அபகரிப்பதற்கும் மேலும் ஒரிசா,ஜார்கண்ட் போன்ற கனிமவளம் நிறைந்த மலைப்பகுதியை கைப்பற்றவும் ஒப்பந்தம் போடத்தான்.நம் இந்திய ஆட்சியலார்களும் இளித்து கொண்டே அடிமை சாசனத்தில் கையெழுத்து போடத்தான் போகின்றனர்.
வாழ்க சன நாயகம்!!!!!

கடல் அலை ஓயட்டும் மீன் பிடிக்க போகிறேன்!!-காங்கிரஸ் அடிக்கும் கூத்து!!!


கடந்த சில மாதங்களாக பத்திரிகைகளில் நாரிக்கொண்டிருக்கும் ஐ .மு.கு அரசின் ஊழல் விவகாரங்கள்தான்.
முதலில் ராசாவின் அலைக்கற்றை ஓதிக்கீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி(எத்தனை பூஜ்யம் என நாட்டில் பாதி பேருக்கு தெரியாதென்பது வேறு விடயம்).அது டெல்லி வரை சென்று நாறிய பொது(தமிழனின் பெயர் எங்கெல்லாம் புகழ பெறக்கூடதோ அங்கெல்லாம் பெயர் பெறுகிறது) இங்கிருக்கும் முதல்வர் "ஹா ராசா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் தாக்குகிறீர்கள் எனவும் ராசாவோ பிரதமரின் அனுமதி பெற்றுதான் அனுமதி(அதான் ஊழல்) வாங்கித்தான் "அனைத்தையும்" செய்ததாகவும் கூறினார்.பின்பு சி பீ ஐ ரெய்டு நடத்திய பொது ஹா..வட நாட்டவரின் கைப்பிடி இறுகுகிறது எனவும் தமிழன் மேல் தொடுக்கப்படும் போர் போலவும் "உண்மை தமிழர்கள்" சிலர் கூப்பாடு போட பின்பு அந்த ஊழல் அலை ஓய்ந்தது.(அதாவது பத்திரிக்கைகள் பொறுத்தவரையில் நயன்தாரா பிரபுதேவாவுடன் ஓடிப்போன விவகாரம் முக்கியமாக்கபட்டது!)
பின்பு லலித் மோடி ஐ பி எல் முறைகேடு மற்றும் சசி தரூர் சுனந்தா புஸ்கருக்கு பங்கு வாங்கி கொடுத்தது என அது ஒரு சீசனில் செய்திகளை வந்தது.இதை புலனாய்வு பத்திரிக்கைகளும் நன்கு பயன் படுத்தி கொண்டு கல்லா கட்டின.(பிரபாகரன் உசுரோட இருப்பதாக கிராபிக்ஸ் படம் வெளியிட்டதை மறக்க முடியுமா?)
அதுவும் மறைந்து அடுத்து காமன் வெல்த் முறைகேடுகள் தினசரி வழக்கமாயின(கக்கூஸ் சரியில்லை தொடங்கி பாலம் இடிந்து விழுந்தது வரை..)
அப்போது காங்கிரஸ் சொன்னது "காமன் வெல்த் முதலில் முடியட்டும்.பின்பு நிச்சயமாக விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கபடுவர்" என கூறி அப்போதைக்கு எதிர்கட்சிகள் மட்டும் ஊடகங்களின் வாயை அடைத்தது!
அப்புறம் காமன் வெல்த் முடிந்ததும் ஏதோ விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டி கொண்டிருந்த பொது (சுரேஷ் களமாடி ஜாலியாக கடலை சப்பிட்டுகொடிருக்க)திடீரென மற்றோர் புகார்.
ஆதர்ஷ் சொசைடி ஊழல்.அதாவது இந்த கார்கில் போரில் உயிர் நீத்த வீர்களின் மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தார்க்கு கவுரவிக்கும் வகையில் மும்பையின் மைய பகுதியில் பல மாடி அடுக்கு வீடு(பிளாட்) கட்டியதில் ஊழல் நடந்தது வெளிவந்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் ராஜினாமா வரை கொண்டுவிட்டது.மேலும் பெரிய தலைகள் உருளும் போல!இப்போது காங்கிரஸ் சொல்வது "ஒபாமா வந்து சென்றபின் இந்த ஊழலை பற்றி விசாரிப்போம்" யப்பா இவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால் கடலில் அலை ஓயட்டும் பின்பு நான் மீன் பிடித்துவருகிறேன் என்பதுபோல் உள்ளது.என்ன செய்து தொலைக்க!இதற்கு பெயர்தான் சனநாயகமாம்!நம்ப வேண்டுமாம்.எதிர்த்து பேசினால் நக்சல் அல்லது பிரிவினைவாதி முத்திரை இருக்கவே இருக்கிறது!
ஒபாமாவிற்கு இரத்தின கம்பள விரித்து அடிமைகள் வரவேற்க எசமான் ஒபாமாவிற்கு பல் இளித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பர்(மன்மோகன் சிங்க் பற்றி சொல்லவே தேவையில்லை.32 பல்லும் தெரியும் புகைபடத்தில்!!!)