குலைன்ஜர் குடும்ப உரையாடல் கற்பனை.
**********************************************************************************இடம்:குலைன்ஜர் வீடு
கூஜாத்தி அம்மாள்: என்னங்க முறுக்கு,சீடை,சுழியம் ,இட்லி,வடை எல்லாம் ரெடி.வாங்க தில்லிக்கி போய் மகள் பாத்துட்டு வரலாம்
குலைன்ஜர் : (மைன்ட் வாய்சில்)மறுபடியுமா?.....ரெண்டு நாளைக்கு முன்னதானே போனோம் ..ம்ம் ம்ம் பாக்கலாம்.
கூ.அ: என்ன பாக்கலாம் இதே அவுக வீட்டு பிள்ளைங்கன்னா உடனே கிளம்பியிருப்பீங்க.
குலைன்ஜர்: (மைன்ட் வாய்ஸ்)என்ன பால் போட்டாலும் கோல் போட்டுடுராளே!! .....சரி வா
(திடீரென்று பிறை முருகன் ஓடி வருகிறார்)
பிறை: தலைவரே திஹார்னா உதடுகள் ஒட்டாது புழல்னா ஓட்டும்...
குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஐயோ இருக்குற இம்சைல இவன் வேற நேரம் காலம் தெரியாம....யோவ் இப்போ டில்லிக்கு கெளம்புறேன் நாளைக்கு வா.
(பயாநிதியின் பரிதாப என்ட்ரி)
பயாநிதி: தாத்தா தூங்குனாலே ஒரே திஹார் கனவா வருது..ஒரே டர்ரா இருக்கு..
(அப்போது பயாநிதி செல்போன் அலறுகிறது.தெரியாத நம்பர்)
கர கர குரலில் பழகிரி போனில்: என்ன தயா நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோயிங்கா?
பயா: யோவ் யாருய்யா அது வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறது?
(லைன் கட் செய்யப்படுகிறது)
குலைன்ஜர்: என்ன பா நீயும் வாயேன் டில்லிக்கு நான் போறேன்.
பயா: எப்படியும் அங்கதானே போக போறேன்.அப்புறம் பாக்கலாம்
கூலின் என்ட்ரி
குலைன்ஜர்: குளபதி டில்லி போறேன் நீயும் வா
கூலின்: சரி தலிவரே.
********************************************************************************
திஹார் சிறை
பாசமலர் பாடல் பேக்க்ரவுண்டில் ஒலிக்கிறது.கூலின் குனிமொழி சந்திப்பு
குனிமொழி: அண்ணா ஆஆ ஆஅ ஆஅ ஆ
கூலின்: (மைன்ட் வாய்ஸ்)நம்ம குலைன்ஜர் டிவி சீரியல் மாதிரி இருக்கு.எதுக்கும் நாமும் அழுது வைப்போம்.....ஆ ஆ
கூதித்யா: அம்மா நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?
கூலின்:ஆமா இது வேறயா?பயபுள்ள கோத்து விடுது பாரு
குனி: கண்ணீருடன் தெரியலையேப்பா!!
கூலின்: மைன்ட் வாய்ஸ் (200 கோடி மட்டும் தெரிஞ்சிதோ?)
குலைன்ஜர்: கூம்ஜெத் மலானி பிச்சுவா பக்கிரிக்கு ஆஜராகுரராம்.அதனால் பிபில் சிபலை ட்ரை பண்ணேன்.போனியே எடுக்க மாற்றார்.
கூலின்:(மைன்ட் வாய்ஸ்) எப்படி எடுப்பார்?பங்கு கிடைக்கலைன்குற கோபமா இருக்கும்.
கூசா: தலைவா ஆரிய திராவிட யுத்தத்துல நாம்தான் ஜெயிப்போம்.
குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா நானே ஏதோ ஒட்டு வாங்க இந்த ரீல்தான் அம்பது வருஷமா ஓட்டிகினு இருக்கேன்.
கூலின்: ரீல் அந்து போச்சுடா சாமி!!!
குலைன்ஜர்:(கண்டிப்புடன்)என்ன சாமி?ஏது சாமி?
கூலின்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒட்டு வாங்கும்போது எடுக்குற ஆரத்திய ஏன் ஏத்துகுரீங்களோ !
கூஜாத்தி: என்ன பண்ணுவீங்களோ தெரியாது எம்மக வெளிய வரணும்.இந்தாம்மா முறுக்கு.
கூலின்: பேசாம நீங்க ரெண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கைல போர நிறுத்திய மாதிரி இப்பவும் செய்யலாமே?
குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா இவன் நம்மள ஒரேடியா முடிக்க வழி சொல்லுறான்.பீ கேர்புல்..நான் என்ன சொன்னேன்.
***********************
குலைன்ஜர் பக்கீரன் போபாலை செல்லில் அழைக்கிறார்.
(காலர் ட்யூனாக 2011 நம்ம கையில சந்திப்போன்டா தோழா நாம் சட்டசபையில பாடுகிறது)
குலைன்ஜர்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்களே!!பக்கீரன் போபால்: தலைவரே சொல்லுங்க என்ன செய்யணும்
குலைஞ்ச்ர்: இந்த திஹார் சந்திப்பை குலைன்ஜர் டிவி சீரியல் ரேஞ்சுக்கு கண்ணீரோடு விளக்கி ஒரு தலையங்கம் போடு.உடனே பக்கீரன் இதழ் வரணும்.என்ன?
போபால்: நீங்க சொன்னா மறுபேச்சு ஏது தலைவா!!செஞ்சிடுறேன்.சாமியார் பித்யானந்தா விவகாரம் போல சூம் கவரேஜ் பண்ணிடுறேன் .
*****************************************************************************
மீண்டும் குலைன்ஜர் வீடு
கூலினிடம் வேலையாள்:பைதை குரைசாமி ஓங்க வெற்றி செல்லாதுன்னு வழக்கு போட்ருகாராம் .
கூலின்:ஐயோ..முதல்வர் பதவிதான் பழகிரியால் கானல் நீரானது.எம் எல் ஏ பதவியும் காலியாகப்போகுதா?என்ன கொடுமை சார்!!