சனி, 25 ஜூன், 2011

புத்தகப்பரிந்துரை

அமெரிக்கா என்னும் தேசம் உருவாக்கி 250 ஆண்டுகள் ஏறக்குறைய ஆகியிருக்கலாம்.ஆனால் அந்த தேசம் விழுகிய இயற்கை வளங்கள்,எரிபொருட்கள், சுரண்டிய தேசங்கள்,கண்டங்கள் என இதன் "சிறப்பு" பட்டியல் நீளுகிறது.இதை பற்றிய விவரங்கள் மேலும் அறிய ஏதேனும் புத்தகம் உதவும்.இடதுசாரி எழுத்தாளர்களின் புத்தகமெனில் "ஆமா!இவுகளுக்கு வேறன்ன வேலை " என சட்டென முடிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இந்த அமெரிக்க பகாசுரன்களை பற்றி எழுதிய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அமெரிக்க நிறுவனத்தில் பொருளாதார அடியாளாக பணியாற்றிய ஒருவர் சொன்னால்?அதான் இந்த இரண்டு புத்தகங்களான "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" மற்றும் "அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு" சொல்கிறது.எழுதியவர் மெய்ன் என்னும் பொருளாதார அடியாட்களை பயன்படுத்தி மிகைப்படுத்திய பொருளாதார மதிப்பெடுகளை அளித்து மூன்றாம் நாடுகளை சுரண்டுவதுதான் வேலை.
  இதில் வேலை பார்த்த ஜான் பெர்கின்ஸ் மனசாட்சி உறுத்தலால் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலபடுத்தியிருக்கிறார்.அமெரிக்காவின் பகாசுரன்களை தெரிந்து கொள்ள தவறாமல் படிக்கவும்.முதலில் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் அதன் பின் அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு வெளியானது.அந்த வரிசையிலேயே படிப்பது நல்லது.இந்த புத்தகங்களை வாங்க கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கவும்
http://www.udumalai.com/?prd=&page=products&id=4809

http://www.udumalai.com/index.php?prd=&page=products&id=6767





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக