ஞாயிறு, 26 ஜூன், 2011

ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது?!!!?!; அன்புமணியின் அந்தர்பல்டி

 அம்பேத்கர் சுடர் விருது இந்தாண்டு  ராமதாசுக்கு அளிக்கப்படுமென திருமாவளவன் அறிவித்துள்ளார்.என்ன கொடுமை இது?1987 இல் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு மரம்வெட்டி போராடிய ராமதாசுக்கா?இல்லை அதே போராட்டத்தில் தலித் மக்களின் குடிசைகளை தீவைத்து கொளுத்தியதற்கா?இல்லை இன்னும் பல இடங்களில் இவரது சாதியினர் தலித்துகளை அடித்து துன்புறுத்தி சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கி கொண்டிருப்பதற்கு அம்பேத்கர் விருதா?இரண்டு தலிவர்களான ராமதாசு மற்றும் திருமா ரெண்டு பேர் மட்டும் கட்டிக்குவாங்க.ஆனா தொண்டர்கள்?என்றுமே ஒற்றுமையாக இருந்ததில்லை.தலித் மக்களை அடிப்பது தீண்டாமை கொடுமை செய்வது குடிசைக்கு தீவைப்பது என மருத்துவர் அய்யா மொதல்ல ஓங்க கட்சியினருக்கு தீண்டாமை கொடுமை செய்யக்கூடாதுன்னு என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?இல்லையே!!தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு என்ற கேடயதிற்குள் நீங்க ரெண்டு பெரும் அடிக்கடி கூடிக்கிறீங்க ஆனால் ஓங்க தொண்டர்கள்?இன்னும் தீண்டாமையை,ஆதிக்க மனப்பான்மையை  விடவில்லையே!!தொண்டர்களாக தாங்கள் தலைவர்களால் அவர்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிரோம்னு அவர்களே உணர்ந்தாலே ஒழிய இந்த கொடுமைக்கு தீரவில்லை!
********************************************
இது தவிர இவுரு மகன் அன்புமணி(அதான் புகையிலை எதிர்ப்பு செய்தாலும் தான் சுகாதார அமைச்சராக இருந்தப்போ சிகரெட்டு தொழிற்சாலையை மூடி அதன் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாதவர்.கொல்லைபுறம் வழியே அமைச்சர் ஆனவர்) இப்போது தோல்விக்கான காரணத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டாராம்.அது திமுக எதிர்ப்பு அலையாம்.மேலும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளனவாம்! அப்போ இத்தனை பிரச்சனைக்கும் காரணமான திமுகவுடன் ஏன் கூட்டு வைத்தீர்கள்?வெளிப்படையா சொன்னா ஒங்களுக்கு ராஜசபா எம்பி பதவி தர அதிமுக மறுத்ததால்தானே மக்களை பல பிரச்சனைகளில்(உங்கள் கூற்றுப்படி.அது உண்மையும் கூட) வாடவிட்ட உங்களுக்கு எம்பி பதவி தர ஒப்புக்கொண்ட  திமுகவுடன் கூட்டு வைத்தீர்கள்.அப்போ மக்கள் நலன் உங்களுக்கு முக்கியம் இல்லை உங்கள் பதவி குடும்ப நலன்தான் முக்கியம்!ஒத்துக்குங்க.அப்போ நீங்க தேர்தல் பிரசாரத்தில் திமுக அமோக ஆட்சி செய்ததுன்னு ரீல் விட்டதெல்லாம் உங்கள் பதவிக்காகதானே?
     இப்போ கனிமொழிக்கான ராஜசபா எம்பி பதவிக்கே இருக்குற சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து வெற்றி பெற சிரமமாகிவிட்ட நிலையில் இருக்கிறது திமுக.அதனால் 2012 இல் ராஜசபா எம்பி பதவி அன்புமணிக்கு எட்டாகனியாகிவிட்ட நிலையில்தான் அந்த ஆதங்கத்தில்தான் இப்படி கூவுறார்.இவர்களின் நிஜ நிறத்தை மக்கள் இப்போது தெளிவாக பார்க்கலாம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக