சனி, 11 ஜூன், 2011

காங்கிரசுடன் கூட்டு வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள்

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் திமுக காங்கிரசு உறவு அறுபடுமென  எல்லோரும்(புலி வருது கதையா) எதிர்ப்பார்த்த நிலையில் கனிமொழி மீதான பிணை விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வருகிறது  .அதன் முடிவை பொறுத்து இருப்பதா வெளியேறுவதா என முடிவெடுத்ததாக தெரிகிறது.கனிக்கு ஜாமீன் கொடுக்காத பட்சத்தில் அனைத்து திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வராம்(நம்புவோம்!!).
         அப்போ உச்சநீதிமன்றத்த நடத்துவது காங்கிரசா?என்ற கேள்வி எழும்புது.போபால் விஷவாயு வழக்கை ஊத்தி மூடியதிலயே உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை  கேள்விக்குறியானது.இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கை கண்காணிக்க வில்லையா என சிலர் கேள்விஎழுப்பலாம்!!ஆனால் எத்தனை வருடத்துக்கு?பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு இந்த வழக்கு ஊத்தி மூடப்படும்.அதற்குள் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் நேர்மையானோர் சிலர் ரிட்டையர் ஆகி விடுவர்.அந்த இடத்துக்கு காங்கிரசுக்கு ஜால்ரா போடும் ஆட்களை போட்டாலும் ஆச்சர்யமில்லை.
         இப்போ காங்கிரசின் திட்டம் ஜெவை வளைப்பது.இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்ச தீவை மீட்க வேண்டும் என்ற இரண்டு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய உடனே ஓடி வந்தார் மொட்டை பாஸ்!! சிவசங்கர மேனன்.ஏனெனில் ஒருவேளை நேர்மையாக போர்குற்ற விசாரணை நடக்கும் பட்சத்தில் பாதிக்கபடுவது அதிகம் இந்தியாவாகத்தான்(அதாவது காங்கிரஸ் & கோ) இருக்கும்.
        கடைசி கட்ட போரில் இலங்கை தயங்கி நின்ற பொது கடைசி வரை அழித்தொழி என ஆதரவு கொடுத்தது இந்தியாதான்.இதில் எம் கே நாராயணன் சிவசங்கர மேனன் விஜய் நம்பியார் எல்லாவற்றுக்கும் மேலே சோனியா காந்தி அப்புறம் தமிழ் துரோகி சிதம்பரம் எல்லோரும் மாட்டுவர்.எனவே ஜெவை தன்னை கட்டிகொண்டாள் தப்பிக்கலாம் என்ற நிலையில் 13 ஆ தேதி டில்லி செல்கிறார் ஜெ  .அப்போது சோனியா அவரை சந்திப்பார் என சொல்லபடுகிறது.
               முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இனத்த்ரோகி காங்கிரசை புறக்கன்க்கவும்.இப்போதுதான் தமிழர்கள் சிறு நம்பிக்கை ஒழி தோன்றுவதாக நம்ப ஆரம்பித்துள்ளனர்.இந்த நிலையில் காநிரசுடன் கூட்டு வேண்டாம்.அனைத்து தமிழக கட்சிகளும் காங்கிரசை புறக்கணிக்க வேண்டும் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும்  !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக