இரண்டு பேருக்கும் என்ன ஒற்றுமைன்னா கேக்குறீங்க!!ரெண்டு பேருமே போலியான மக்கள் அக்கறையை காட்டியும் மக்களை கவரமுடியாமல் தோற்றவர்கள்.ராகுல் உத்தர பிரதேசத்துக்கு தனது படைபலம் வண்டியில் சூழ விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு (ஆம் அந்த நிலப்பறிப்பதை அவுரு எதிர்க்கலை.இதை கவனிக்கவும் !!) அரசு பிடுங்குவதை கண்டித்து அந்த விவசாயிகளை சந்திக்க மேற்சொன்னவாறு போனார்.ஆனா பொடரீல அடிச்சி போலீசு கைது பண்ணதும் "அய்யா சாயங்காலம் வரைக்கும் வெச்சி உட்ருங்கைய்யா" என கெஞ்சி ரிலீசு ஆயிட்டார்.அப்புறம் அவுரு அந்த பக்கம் தலை வெச்சும் படுக்கல.இன்னொரு நாடகம் மாதா மாதம் ஏதாவது ஒரு தலித்தின் குடிசைக்கு சென்று அவுங்க தனக்குன்னு வச்சிருக்கும் கொஞ்ச உணவையும் இவுரு புடிங்கி சாப்பிட்டிட்டு அவுங்க கட்டிலை பிடுங்கி இவுரு படுத்துக்குவார்.இதனால் இவுரு தலித்துகளின் தோழர் எனகாட்டுராராம்!!அடங்கப்ப eththana கிராமத்துல இன்னும் ரெட்டை குவளை முறை இருக்கு!!தலித்துகளின் வாயில் மலம் கரைத்து ஊற்றும் அவலம் இன்னும்தானே நடக்குது.பல ஆயிரம் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பரணில் இருக்கு!!அதெலாம் நீங்க கேக்க மாட்டீங்க !!ஏன்னா ஒங்களுக்கு வேண்டியது அமேதி தொகுதி ஒட்டு மட்டுமே!!இதே ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்காக பழங்குடி இன மக்களின் நிலங்களை பிடுங்கும் ஒரிசா அரசை கண்டிச்சீங்களா?தமிழ்நாட்டுளையும் சென்ற ஆட்சியில் விலை நிலங்கள் ஓட்ட பிடுங்கப்பட்டது.நீங்கதான் பிசி போல!!நீங்க பிரசாரம் போனாலே காங்கிரசு அந்த மாநிலத்துல அவுட்டு.தொடர்ந்து பிரசாரம் வாங்க அதான் நல்லது மக்களுக்கு!!
******************************************************************************அப்புறம் இந்த ராம்தேவ்.அதான் மூஞ்சி பூரா தாடி.காலை கையை வளைத்து மேடையை தூக்குவது(!!?) போன்ற (சர்க்கஸ் சிறுமிகூட செய்யும்) வித்தைகளை காட்டி ஆயிரம் கோடி சொத்து சேத்தவர்தான்.கருப்பு பணத்துக்கேதிரா உண்ணாவிரதம் இருந்தாரு(எலுமிச்சை சாறு குடிச்சிகிட்டே).சரி இவுரு யோகா குரு பல மாதங்கள் சாப்பிடாம இருப்பாருன்னு சிலர் சொல்ல பத்து நாலு கூட தாங்காம "இப்பவே கண்ணா கட்டுதேன்னு" மருத்துவமனைல சாஞ்சிடாரு !!அப்புறம் கருப்பு பணத்த இனி யாரு சுவிஸ் வங்கியில் இருந்து கொண்டு வரப்போராங்கலோன்னு மெழுகுவத்தி நடுத்தர வர்க்கம் கன்னத்தில் கைவைத்து காத்திருக்கு.!!நித்தி நீங்க ட்ரை பண்ணலியா?ஆக ரெண்டு பேரும் மக்களை ஏமாத்த முடியாம தோத்தவங்க!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக