கருணாநிதியிடம்: 1 .ஒரு சில பார்ப்பன ஊடகங்களால்தான் நீங்க தோற்கடிக்கப்பட்டதா சொல்றீங்க.ஒரு சில பார்ப்பனர்கள் சொல்வதை கேக்கும் அளவுக்கா திராவிடர்கள்(உங்கள் மொழியில்) இருக்கிறார்கள்?அப்போ அறுபது வருட திராவிட இயக்கம் கிழித்தது என்ன?
, 2 .உங்கள் பெண்ணை விடுவிக்க எதுக்கு டில்லி போகணும்?உங்களோட "சர்வரோக நிவாரணி" அதான் அண்ணா சமாதி முன் இரண்டு மணி நேர உண்ணாநிலை இருக்கலாமே!!அதன் மூலம் நீங்க போரையே நிறுத்திய சாதனையாளர் அல்லவே!!
*
ஜெயலலிதாவிடம்:சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில் பகல் கொள்ளையர்களையும் தமிழே தெரியாதவர்களையும் நியமித்ததன் நோக்கமென்ன?
*
ராமதாசிடம்:சமச்சீர் கல்வி பாமாக ஆட்சி வந்தாதான் கொண்டு வரப்ப்படும்னு சொல்றீங்க.சரி.ஓங்க பேரப்பசங்க டில்லியில் தமிழை ஒரு பாடமாக கூட கொண்டிராத பள்ளியில் படிக்கிரான்களே.அதை பத்தி?
*
சிபிஐ யிடம்: 1 :சாதிக் பாட்சா பிரேத பரிசோதனை அறிக்கையை ஏன் வெளிய விடவில்லை?
2 .கனிமொழி டாடா மற்றும் நீரா ராடியாவுடன் பேசிய பேரத்தை ஏன் நீங்கள் அவருக்கெதிரான வழக்கில் சேர்க்கவில்லை?
*
தனுசிடம்: எதுக்கு ஒனக்கு தேசிய விருதுன்னு இப்போவாவது காரணம் தெரிந்ததா?ஏன்னா எங்களுக்கும் தெரியலை.அதான்
*
அழகிரியிடம்: காங்கிரசுடன் உறவு முரியாதமைக்கு உங்களுக்கு "புழல் பயம்" இருப்பதுதான் காரணம்னு சொல்லப்படுது.அதை பற்றி?
*
ஸ்டாலினிடம்: சிவகங்கை பார்முலா படி ஜெயிச்சதா சொல்றாங்களே.அது பற்றி:
*
திக்விஜய் சிங் : நீங்க இன்னும் "பழைய நெனப்புடா பேராண்டி" கணக்கா மத்திய பிரதேச முதல்வர் கனவிலேயே வாய்க்கு வந்த படி அள்ளி தெளிப்பதாக சொல்லப்படுவது பற்றி?
*
ராகுல் காந்தி: போஸ்கோ ஆலையை எதிர்த்து நீங்களும் சீன் போட்டீங்க.ஆனா இப்போ மீண்டும் பழங்குடி நிலங்கள் பிடுங்கப்பட்டு தொழிற்சாலை ஆரம்பிக்கபோறான்களே!!அப்போ ஓங்க போராட்டம் நாடகம்னு ஒப்புகிரீங்களா?
*
தயாநிதி மாறன்: நீங்க கனிமொழியை சிறையில் சந்திக்கவில்லை.ஏன் எப்படியும் கூடிய சீக்கிரம் அங்க போகத்தானே போறோம்குறதனாலையா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக