வெள்ளி, 4 மே, 2012

Cape Fear 1962 Vs Cape Fear 1991

               இது இரண்டு படங்களின் தொழில்நுட்ப அம்சங்களையோ அல்லது நடிகர்களின் நடிப்பையோஒப்பிடும் முயற்சி அல்ல.இது வெறும் கதாபாத்திரங்களின் தன்மை வேறுபடுதலை ஒப்பிடும் ஒரு முயற்சியே!
              மேலும் உலக சினிமா பத்தி எழுத கருந்தேள்,கொழந்த,உலக சினிமா ரசிகன் போன்றோர் ஓவர் டைம் போட்டுகினு எழுதுவதால் அதை எதிர்பார்த்து இங்கே வந்தால் ஏமாற்றமே என முன்பே சொல்லிகொள்கிறேன்.

கேப்  பியரின் கதை சுருக்கம் ஒரு குற்றவாளிக்கு(மாக்ஸ் கேடி) தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர்(சாம் பவ்டன்).அவரின் குடும்பத்தை பழி வாங்க முயலும் அந்த குற்றவாளி.
கேப் பியர் 1962 படத்தில் நடித்த க்ரிகரி பெக் மற்றும் ராபர்ட் மிட்சம் ரீமேக்கிலும் சிறிய கதாபாத்திரங்களில் வந்து போகின்றனர்.


இதில் குற்றவாளியாக வரும் மாக்ஸ் கேடி விடுதலைபெற்றபின் நேரடியாக வழக்கறிஞர் சாம் பவ்டனை சந்திப்பதே முதல் காட்சியாக வருகிறது.அவர் அந்த சம்பவத்தை அவருக்கு நினைவு படுத்துகிறார்.பின்னர் அவர் செய்யும் டெர்ரரான  விஷயங்களே மிச்ச படம்.
             எனக்குபடம் பார்க்கும்போது தோன்றியது மேக்ஸ் தன்னை தானே சேமுக்கு நினைவூட்டாமல் சில்மிஷங்களை செய்திருந்தால் இவர்தான் செய்தார் என்பதை கண்டுபிடிக்கவே திணறி இருப்பார்கள்.இவர் தன்னை தானே முதலில் காட்டி கொண்டதே இவர்தான் அனைத்து காரியங்களையும் செய்கிறார் என்பதை சேமுக்கு ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது(ஹீ ஹீ கேடியை விட கேடித்தனமாக யோசித்து விட்டோமோ என்று பின்னால் தோன்றியது).
1962 இல் வந்த படத்தில் கதாபாத்திரங்களின் தன்மை எப்படி?கேடியை தவிர அனைவரும் அக்மார்க் ஒழுக்க சீலர்கள்.எனக்கு பொதுவாகவே ஒரு கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என வகைபடுத்துவதே பிடிக்காது(இப்படி வகைப்படுத்தாத காரணத்தாலேயே ஓடிய படங்கள் ப்ள.Dabangg ஒரு உதாரணம்).நிஜ வாழ்க்கையில் இவன் அக்மார்க் நல்லவன் இவன் ரொம்ப கெட்டவன் என சொல்லும் வண்ணம் யாரும் இருப்பதாக எனக்கு தெரிந்தவரையில் இல்லை.
ஒவ்வொருவரும் blend of bad and good.இதுதான் என் கருத்து.
       இவன் நல்லவன் இவன் கெட்டவன் என வகைப்படுத்துவது படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் என நினைக்கிறேன்.
      1962 இல் வரும் படத்தில் சேமின் மகள்(சிறுமியும் அல்லாமல் குமரியும் அல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் வயதுதான் இரண்டு படங்களிலும்) ரொம்ம்ம்ப நல்லவள்.சிறுமிக்கே உரிய குனங்களுடனேயே அவர் படைக்கபட்டுளார்.அவருக்கு மன சலனங்கள் எதுவும் இல்லை.டீன் ஏஜுக்கே உரிய ரெண்டுங்கெட்டான் தன்மை  எதுவும் படத்தில் இல்லை.ஒருவேளை இது இறுக்கமாக அப்போது அமலில் இருந்த production code (1967 இல் இருந்து தளர்த்தப்பட்டு வேறு முறை அமல்படுத்தப்பட்டது) காரணமாக அவரை ஒரு சலனமற்ற சிறுமியாக படைத்திருக்கலாம்  என்பது என் எண்ணம.

   ஆனால் 1992 இல் வரும் அதே சிறுமி cum குமரி கதாபாத்திரம் மிக மிக இயல்பாக உள்ளதாகவே தோன்றுகிறது.அந்த டீன் ஏஜ் வயதிற்கே உரிய ஆர்வம(வேறு எது மீது?செக்ஸ் மீதுதான்) மாற்று பாலின ஈர்ப்பு போன்றவை மிக இயல்பாக கையாளப்பட்டது என்றே கூறுவேன்.Danielle (அதான் சேமின் மகள்) மாக்ஸ் கேடியுடன் பேசும் காட்சிகளே அதற்கு உதாரணம்.அவள் கேடியுடன் பேசும்போது அவள் கண்களில் தெரியும் ஒருவித ஈர்ப்பு புதிதாக தெரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வம என பலவும் காணலாம்.
      குற்றம் என்பதே ஒரு சாரார் மட்டுமே செய்வதல்ல.எதிராளியும் சிறிது ஒத்துழைப்பு தராமல் குற்றம் நிகழ்வது சற்றே கடினம் என கொள்ளலாம்.இந்த சிறுமி அவளாக ஆர்வபட்டு கேடி கூப்பிட்டவுடன் அவனிடம் சென்று பேசுவது இதற்கு ஒரு சிறு உதாரணம்.ஆனால் 1962 இல்வரும் படத்தில் அப்படிப்பட்ட ஒரு காட்சி இல்லை.அவள் கேடியை கண்டவுடன் மிரண்டு ஓடுகிறாள்.அவ்வளவு நல்லவளாக காட்டபடுகிறாள்.


        நான் சொல்வதில் ஏனோ ஆணாதிக்கம் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உளறப்படுவது அது இது என அளக்க வேண்டாம்.இது இரண்டு பாலினத்தாருக்கும் பொருந்தும்.

       1962 இல் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் குடும்பம் கேடியை கொன்றாவது வாழ்வை நடத்த எத்தனிக்கும் ஒரு போக்கு தென்படும்.1992 இல் வந்த படத்தில் அந்த வழக்கறிஞரின் குடும்பத்தாரும் சற்று சலனப்படவர்கலாகவே சித்தரிக்க படுகின்றனர்.Production code தொல்லை இல்லாமல் இருந்தது ஒரு காரணமாக கூட இருக்கலாம்.யாரும் அக்மார்க் நல்லவனும் இல்லை அக்மார்க் கெட்டவனும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.எல்லாவற்றையும் சந்தேகி என்பது மார்க்ஸ் வாக்கு.எது எப்படி இருந்தாலும் இரண்டுமே க்ளாசிக்காகி விட்டது என்பதை மறுக்க இயலாது.

புதன், 2 மே, 2012

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளவா

எப்படிஇருந்தாலும் ஓலக்க சாரி ஒலக நாயகன் படம் வந்தப்புறம் எல்லாரும் பிரிச்சி மேயத்தான் போகின்றனர்!ஆனால் இன்னும் படம் வருவதற்கு முன்பே இப்படி அண்ணாத்த மாட்டிகிட்டாரே?உச்...உச்...உச்...


புதன், 21 டிசம்பர், 2011

ஒலக சினிமா எடுக்க ஒன்று கூடிய தமிழ் இயக்குனர்கள்-பாகம் 2

சென்ற விவாதத்தின் தொடர்ச்சியாக இந்த பதிவு!தனிப்பட்ட முறையில் இதை எடுத்துகொண்டு டென்சன் ஆகிறவர்கள் ஒரு வேலியம் மாத்திரை போட்டுகொள்ளலாம்!இது ஜாலிக்கு!
************************************************************************************
இப்போது பங்கேற்பவர்கள் செல்வராகவன்,அமீர்,மணிரத்னம்,கமல் ...
*
முதலில் செல்வராகவன் வருகிறார்:
கவுண்டர்: யோவ் இது ராத்திரி நேரம் இப்போ என்னா கூலிங்க்ளாஸ்?
செல்வா:  அது வந்து....
செந்தில்: அண்ணே அவுரு கண்ணு ஏன்னே அப்படி இருக்கு?
கவுண்டர்: ஆமா தீபாவளி நேரத்துல சும்மா இருந்திருக்கணும்!எந்த பிகரு கிட்டையோ போய் ரூட்டு போட்டிருக்கார்!அவ பட்டாச கொளுத்தி கண்ணுல போட்டுட்டாளாம்!
செல்வா: பப்ளிக் பப்ளிக்!தொழில் ரகசியம் வெளியே சொல்லாதீங்க!
கவுண்டர்: சரிங்க்ணா நீ கண்டின்யூ
செல்வா: ஹீரோ தம்பி "பாடி பில்டர்" தனுசு!முப்பது நாள் சேவிங் பண்ணாம நடிக்கிறாரு!
கவுண்டர்: ஏன் ப்ளேடு வாங்க காசில்லையா?
செல்வா: இட்ஸ் பீலிங்க்ஸ் மேன்!"நான் சொன்னதும் வெயில் வந்துச்சா நான் சொல்லல மழை வந்துச்சா" அப்படின்னு பாடுறான்!
கவுண்டர் : ஏன் ஹீரோ வானிலை ஆய்வு மைய ப்யூனா?
செல்வா: எகதாளம் பேசாதீங்க சார்!
கவுண்டர்: நீ தப்புத்தாளம் போடாம இரு!கண்டின்யூ
செல்வா: ஹீரோயின் பச்சா பங்கொபாதயாய்!
கவுண்டர் : என்னா? பாத்தியா பாக்கலியா?
செல்வா: இது பேருய்யா!
கவுண்டர் : நா ஏதோ சரக்குன்னு நெனச்சேன்!சரி சொல்லு
செல்வா: ஹீரோ படுக்கையிலேயே உச்சா போகுறார் அப்புறம் he  farts!
கவுண்டர்: யப்பா கப்பு தாங்காம ஹீரோயின் ஓடி போயடுராளா?ஆஹா!நிச்சயமா ஆஸ்கர்  விருதே   கிடைக்கும்!ஓங்க தம்பி லுங்கிய தூக்கிக்கினு நடு ரோட்டில் ஆடியதுக்கே தேசிய விருது கெடச்சுதே!
கவுண்டர்: ஆஸ்கர் விருதுக்கு டயலாக் ரெடி பண்ணி வச்சிகுங்க!"எல்லா புகழும் இறைவனுக்கே !எல்லா ஏழு கோடி சம்பளமும் எனக்கே"
செல்வா: தமிழின் இரண்டாவது ஸ்பால்டன் படம் இது!
கவுண்டர்  :ஏன் மொத  படத்த தூக்கிட்டு ஓடிட்டாங்களா?
செல்வா: அப்படின்னு சொல்ல சொல்லி நாலு பேருக்கு துட்டு கொடுத்திருக்கேன்!
கவுண்டர் : அட்ரா அட்ரா!ஆமா உன்னோட எல்லா படத்துலயும் யாருன்னா ஒருத்தர் மென்டலா இருப்பாங்களே!இதுல யாரு?
செல்வா: ஹீரோ சுவத்த பாத்து டாய் டாய் டாய் நான்தான் ரிவிட்டு குமாரு! அப்படின்னு கத்துறாரு
கவுண்டர்: அப்புறமென்ன?சுவர் இடிஞ்சி உழுந்துடுதா?
செல்வா:  சும்மா இருங்க!தமிழில் இது ரெண்டாவது ஸ்பால்டன் பிலிம்!
கவுண்டர்: யோவ எத்தன தபா இதையே சொல்லுவா?அப்போ மொதல் பிலிம ஆயா தூக்கினு போயிடுச்சா?
செல்வா: வேறொரு கத இருக்கு!சோழ மன்னனை நர மாமிசம் தின்னும் ஜந்துவா காட்றோம்!
கவுண்டர்: ஏற்கெனவே தமிழனை எவனும் மதிக்க மாட்றான்!இதுல இப்படி நீ காட்டுனா எவண்டா மதிப்பான்?சரித்திரம் தெரியலைன்னா மூடிகிட்டு இருக்கணும்!
செல்வா: நீங்க மொதல்ல இருந்தே வெவகாரமா பேசிகினு இருக்கீங்க!டாய் கொக்கி குமாரு கவுண்டருக்கு ஒரு கொக்கிய போடறா!
கவுண்டர்: ஐயோ எஸ்கேப்!
*

அடுத்து கமல்

கமல்:அல்லா ஜானே அல்லா ...(பாடி கொண்டு வருகிறார்)
கவுண்டர்: என்ன மூக்கால பாடுறீங்க?மூக்கடைப்பா?
கமல்: மிஸ்டர் ஐ.ஜி.ஆர் மாறார் ஐ ஆம் சூர் யூ ஆர் அவேர் ஆப தி பவர் ஆப தி ஸ்டேட் ஒப் தி ......
கவுண்டர்: எங்கனா மனப்பாடம் பண்ணிட்டு வந்துட்டீங்களா?
கமல்: மறார் கமாண்டிங் ஏரியாவில் இருக்கும் கவுண்டரை மாத்துங்க!இல்லன்னா தேர் வில் பீ டூ மச் எக்ஸ்ப்ளோஷன்ஸ்  இன் த  சிட்டி!
கவுண்டர்: ஐயோ இதென்னடா வம்பா போச்சு!
கமல்: ஆர்னால்ட் ஸ்வாசனேகர் சொல்வதைத்தான் கவுதம புத்தரும் சொல்றார்!
கவுண்டர்: உங்க படம் பாக்க வேணாம்னா?
கமல்: வெல் ஆ என் அடுத்த படம் சாந்தரூபம்!படம் முழுக்க சாந்தமா இருப்பேன்!
கவுண்டர்: படம் முடியும்போது பாந்தமா எல்லாரும் வெளிய போகிடுவாங்க!
கமல்: இதைதான் ஆகாசம்பட்டு சேஷாசலம் சொன்னார்!தஸ்தயெவ்ஸ்கி சொல்வதும் இதைதான்!
கவுண்டர்: எதை?என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் வெளங்கல!
கமல்:(மைன்ட் வாய்சில்)புரியகூடாதுன்னுதானே இப்படி பேசுறேன்!..
வெல் எனக்கு இந்த "இஷ்" பெயர்களில் நம்பிக்கை இல்லை!அப்படி வைக்க கூடாது தமிழன்!
கவுண்டர்: நீங்க உங்க பெண்களுக்கு அக்ஷரா ஷ்ருதி அப்படின்னு வச்சிருக்கீங்களே?
கமல்:(மைன்ட் வாசியில்)எந்த பால் போட்டாலும் கோல்  போட்டுடுரானே!
வெல் உயிர் போகுற வேளையிலும் தமிழ்ல பேச மாட்டான் தமிழன்!
கவுண்டர்: உங்க பொண்ணே  இப்போதான் தமிழ் பேச கத்துகிட்டு இருக்காங்களாமே?
கவுண்டர்: சார் ஒரு சந்தேகம்!அன்பே சிவம் படத்துல உயிர் போற வேளையிலும் தமிழ் பேச மாட்டீங்களான்னு கேக்குறீங்க!ஆனா உன்னை போல் ஒருவன் படத்துல முக்கால்வாசி இன்குலீசுலதான் நீங்களும் மத்தவங்களும்  பேசிகிரீங்க!ஏன் இந்த சுயமுரண்?
கமல்: வெல் ஊருக்குதான் உபதேசம்!

கவுண்டர்: அது ஏன்  சார் எப்பவுமே இந்து மத கடவுள்களையும்  இந்துக்களின் நம்பிக்கையையுமே கலாசுரீங்க?ஒ உங்க தலிவர் பெரியார் வழி செலெக்டிவ் நாத்திகமா?
கமல்:(மைன்ட் வாய்சில்) மத்த மதங்களை விமர்சனம் பண்ணா டப்பா டான்ஸ் ஆடிடுமே!வெல் ஐ ஆம் கிரிடிசைசிங் ஒன்லி மெஜாரிட்டி ரிலிஜியன்!
கவுண்டர்: என்னய்யா சொல்லுற?எனக்கு துளு மொழி தெரியாது!
கமல்: பாம் வெச்சிருக்கேன்!ஒரு குப்பனோ சுப்பனோ இதை செய்ய முடியுமா மிஸ்டர்  மாரார்?
கவுண்டர்: ஆமா தமிழ் படத்துல மட்டும் மோகன்லாலே போலீசா வராரு(மலையாள படம் போல)ஆனால் தெலுங்கு படத்தில் ஏன் வெங்கடேஷ் வரார்?தமிழனுங்கதான் இளிச்சவாயன்னா?
கமல்: (மைன்ட் வாய்சில்) உஸ்ஸ்...இப்போ எப்படியாவது எஸ்கேப் ஆகிடனுமே!
திடீரென்று அபிராமி அபிராமி அபிராமி என கூரிகொண்டே சுத்ஹி சுத்தி வருகிறார்!
கவுண்டர்: ஐயோ ஆள உடுங்க!

*
அடுத்து மணிரத்னம்

மணிரத்னம்: வெல்...மை நெக்ஸ்ட் பிலிம் அபவுட்...
கவுண்டர்: என்னதான் சொல்ல வரீங்க?
மணிரத்னம்: நான்...அடுத்த...படம்...எடுக்குறேன்....
கவுண்டர்: அது ஏன் எப்போ பாத்தாலும் ஒத்த வார்த்தையில்  பதில் சொல்றீங்க?
மணிரத்னம்: ஏன்னா எனக்கு தெரிஞ்ச தமிழ் அவ்வளவுதான்!
கவுண்டர்: என்னென்னமோ உண்மையெல்லாம் இப்போ வெளிய வருதுடா சாமி!
மணிரத்னம்: பாகிஸ்தானில் ஹீரோ பனமரத்துபட்டியில் ஹீரோயின்!
கவுண்டர்: இவ கல்யாணம் ஆகி அங்க போறா!அதான?
மணிரத்னம்: வாவ் ஹவ் டூ யூ நோ?
கவுண்டர்: ஆமா இதே கதைதான் ரோஜா படத்துல!
மணிரத்னம்: சரிவேண்டாம் அடுத்த கதை...ஹீரோ... ஹீரோயின்... காதல்... கல்யாணம்... தாலி... ஆணியில் தொங்குது!
கவுண்டர்: ஹீரோயின் அடிபட்டு கோமா ஸ்டேஜில்!ஹீரோ வந்து உருகுறார்!
மணிரத்னம்: சரி..அடுத்த கதை புஷ்கர் ஈ பைபா தீவிரவாதம் பத்தி....
கவுண்டர்: ஒண்ணு காதல் இல்லன்னா தீவிரவாதம்!இது தவிர வேறு எதனா கதை எடுக்கமாட்டீங்களா?ஆள உடுங்க சாமி!
மணிரத்னம்: பொன்னியின் செல்வன் எடுக்கலாம்னு.......
கவுண்டர்: ஐயோ வேணவே  வேனாம்!இதுக்கு சுகாசினி வசனம் எழுத வச்சி கொல்லுரதுக்கு நீங்க படம் எடுக்காமலே இருப்பது பெட்டர்!ஒரு நல்ல காவியம் தப்பிச்சிது!கல்கியின் ஆத்மா வாழ்த்தும்!அப்புறம் என் உங்க படத்துல எல்லாரும் தண்ணியில் "ஏதோ" விட்டது போலவே பேசுபவன் காதிலேயே  விழாதபடி பேசுறாங்களோ?
மணிரத்னம்:(மைன்ட் வாய்சில்)ரொம்ப கேள்வி கேக்குறானே!இப்படி சமாளிப்போம்!மை வைப் சுகாசினி இஸ் கமிங் டு ஆன்சர் யூ!ப்ளீஸ் வெயிட்!
கவுண்டர்: அய்யய்யோ அவுங்களா?ஆள உடுங்க!
 
*
அடுத்து  அமீர் 

அமீர்: என்னா மாமா சவுக்கியமா?
கவுண்டர்: யோவ யாருடா மாமா?
அமீர்: என்னா மாமா இப்படி கோவிச்சிக்குற?
கவுண்டர்: நிறுத்து!டப்பா டான்ஸ் ஆடிடும்!
அமீர்: அடுத்த படம் பாலியஸ்டர் வீரன்!
கவுண்டர்: ஆமா பருத்தி வீரன் பெயர் காரணம் என்ன?பொட்ட காட்டுல நடக்கும் கதையில் எங்கயா  பருத்தி விளையுது?
அமீர்: அம்புட்டு புத்திசாலியா ரசிகன்?இல்ல சித்தப்பு!
கவுண்டர்: யோவ மொதல்ல மாமா இப்போ சித்தப்பாவா?இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா?
அமீர்: மொரடனா ஹீரோ திமிர் புடிச்ச தலைக்கு என்னையே வெக்காத ஹீரோயின்!க்ளைமாக்ஸ் வந்து நாளு பேரு சேர்ந்து....
கவுண்டர்: போதும் இதுக்கு மேல சென்சார் ஆகிடும்!
அமீர்:நடுவுல போட்ஸி  படத்த உல்டா பண்ணி போகி அப்படின்னு ஒரு படம் நான் ஹீரோ!
கவுண்டர்: க்ளைமாக்சுலஒன்னைய போகி நெருப்பில் போட்டு கொளுத்திடுரானுங்களா?
அமீர்: ஐயோ உட்டா நீங்க என்னைய கொளுத்திடுவீங்க போல!ஆள உடுங்க!


வெள்ளி, 18 நவம்பர், 2011

ஒலக சினிமா எடுக்க ஒன்றுகூடிய தமிழ் இயக்குனர்கள் (ஒரு கற்பனை)

ஒலக சினிமா ஒலக சினிமான்னு எங்கு திரும்பினும் இதே பேச்சு இதே விவாதம்!!வெயில் படம் வந்தப்போ அது ஒலக சினிமான்னாங்க!!பருத்தி வீரன் வர சொல்ல அதை ஒலக சினிமான்னாங்க!!ஒவ்வொரு முறை ஒரு படம் வரும்போதும் கொய்யால இதுக்கு மேல எவனும் படம் எடுக்க முடியாது!!ன்னு அளப்புறசத்தம் காதை கிழிக்குது!உண்மையாக ஒலக சினிமா எடுக்க தமிழ் இயக்குனர்கள் ஒன்று கூடினால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையின் விளைவே இந்த கட்டுரை!!யாரும் டன்சன் ஆக வேணாம்!!சும்மா ஜாலிக்கு!! ;)
************************************************************************************

இதில் பங்குபெறுவோர்:பாலா,மிஸ்கின்,தியாகராஜன் குமாரராஜா(யப்பா மூச்சு முட்டுது.இனி இவரை த்யாகு என அழைக்கிறேன்),அமீர்,கவுதம் மேனன்,பாலாஜி சக்திவேல்,விஜய்(இயக்குனர்),மணிரத்னம் ,முருகதாஸ் .அப்புறம் கொஞ்சம் கலகலப்புக்கு தலைவர் கவுண்டமணி ,எஸ் ஜே சூர்யா மற்றும் அப்பாவி ரசிகன் .யார் பெயராவது விட்டு போயிருந்தா தெய்வ குத்தம் ஆக கருதி நூறு தபா எஸ் ஜே சூர்யா சுறா படத்தை பார்ப்பார்! ;)


************************************************************************************
இடம்: ஏதோ ஒரு இடம்
எல்லா இயக்குனர்களும் ஆஜர்  கவுதம் மட்டும்  லேட்டாக வருகிறார்.
கவுதம்: சாரி ஐ ஆம் எ லிட்டில் லேட் ஐ வாஸ் பிசி
அப்பாவி ரசிகன்: இது ஓங்க பட வசனமோ?ஒன்னியும் புரியல சார்!!
கவுண்டமணி: உக்கும்...பர்மா பஜார்ல நாலு இன்குலீஸ் பட டி.வி.டி வாங்க போனதனால இவுரு லேட்டு!!எப்படி சமாளிக்குராறு..அடன்காப்பா!!
அப்பாவி: சரி வந்த வேலைய பாக்கலாமா?
(எல்லாரும் மண்டையை ஆட்டுகின்றனர்)

முதலில் மிஸ்கின்

மிஸ்கின்: இப்போ நாம எடுக்க போற படம் பகாஷி பகோடா இயக்கிய ஜப்பான் படம்!!முதல் காட்சியிலேயே நான் அம்மணமா ஒடுரேன்!!அப்புறம்....
கவுண்டமணி: அப்புறம் எண்ண எல்லாரும் தேட்டர உட்டு ஓடிடுராங்களா?
மிஸ்கின்: குறுக்க  பேசாதீங்க!!அப்படியே லாங் ஷாட்ல ஒரு மெண்டல் ஆஸ்பிடல் அதை விட்டுட்டு வெளிய ஓடி வரான் நம்ம ஹீரோ!!
கவுண்டர்: ஆமா நீயேஅப்படிதான் தப்பிச்சு வந்தா மாதிரி இருக்கு...யோவ இது நைட் டைம் இப்ப கூட கூலிங் கிளாஸ் தேவையா?
மிஸ்கின்: உச...ஒரு ப்லோவா சொல்லும்போது குறுக்க  பேசாதீங்க!!
கவுண்டர்: சரி நெடுக்க பேசவா?
மிஸ்கின்: நான் எழுந்து போய்டுவேன்!!கொஞ்சம் அமைதியா இருங்க!!அப்படியே லாங் ஷாட் க்லோசப்பாமாறுது! முகத்தில் வியர்வையுடன் அம்மணமாக ஓடும ஹீரோ!!தூரத்தில் சைரன் ஒலி!ஹாஸ்பிடல் வேன்  துரத்துது!
கவுண்டர்: அப்புறமென்ன அவன் வேன்ல ஏறி போய்டுரானா?
மிஸ்கின் : இந்த காட்சியில் நான் நடித்ததை பார்த்தி ரெண்டு பெண் உதவி இயக்குனர்கள் ஓடி வந்து கட்டி பிடித்துக்கொண்டனர்!!
கவுண்டர்: இது சென்சர்ல போய்டும்!!ஆள உடு!!

அடுத்து பாலா

பாலா: முதல் காட்சியில் செம்பட்டை தலையுடன் ஒரு காக்கா

கவுண்டர் :அடங்கப்பா மனுசனுக்குதான் பழுப்பு டை காக்காவுக்குமா?அட்ரா அட்ரா!!
பாலா: அப்படியே சூம் அவுட் பண்ணா பனை மாற உச்சியில் நமது கதை நாயகன்

கவுண்டர் : கள்ளு திருடுரானா?
பாலா: சும்மா இருங்க!!அப்படியே தலை கீழா பர பரன்னுஉடும்பு மாதிரி கீழ இறந்குரான்!அவனுக்கு ஒரு கண்ணு இல்லை!!ஒரு காது கேக்காது ஒரு...
கவுண்டர் : அடங்கப்பா இன்னும் என்னென்ன கோளாறோ!!அவன் ஹீரோ இல்ல சீரோ!!
பாலா: சும்மா கிண்டல் பண்ணாதீங்க!!அப்படியே இரங்கி வந்ததும் தூரத்தில் ஒரு குரல் பாத்தா ரெண்டாவது ஹீரோ மொட்டை தலையோட அண்டர்வேருடன் ஓடி வரான்!
கவுண்டர்: ஐயோ எனக்கு பயமா இருக்கு
பாலா: நடுவுல ஒரு செம அழகான ஐயர பொண்ணு ரெண்டு போரையும் மாறி மாறி லவ் பண்ணுது!!அவள்கல்லூரிக்கு கொண்டு போகும் தயிர் சாதத்தை யார் சாப்பிடுவதுன்னு ரெண்டு ஹீரோவுக்கும் செம போட்டி.அடிதடியா மாறுது!!இவன் கொரவலைய அவன் கடிக்க அவன் .......
கவுண்டர் : ஐயோ உடுங்க சாமி!!


அடுத்து தங்கர் பச்சான்
தங்கர்: கதை நாயகிங்க தனது பேருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை துறக்க வேண்டும்!!
கவுண்டர்: அப்போஉங்க பேர்ல உள்ள பச்சான் என்னாங்கோ?

தங்கர்: போயா...கூ...முட்ட!!தமிழனுக்கு சூடு சொரணை இல்லை!!எங்க அய்யா பெரியார் ஒரு கன்னடரு அவரை தமிழர் தலைவனா ஏத்துகிட்டான் முட்டாள் தமிழன்!
கவுண்டர்: இப்போ என்னதாய்யா வேணும் உமக்கு?
தங்கர்: எனது கதை நாயகன் அம்பது வயசுக்காரன்!!கோவணம் மட்டுமே கட்டுவான்!!மேக்கப் இல்லை .கதை நாயகி அதான் அவ பொஞ்சாதி கீச்சு கொரலில் பேசுவார்!!
கவுண்டர் :ஆக மொத்தம் யாரும் சரியில்ல!!சரி உடுங்க!!


அடுத்து வெற்றி மாறன

வெற்றி மாறன: திச இஸ் தி ஏன்டா ஆப சாலமன் கரண்டி
கவுண்டர்: சரி உடு..நீங ரெபிடக்ஸ் இன்குலீஸ் கோர்ஸ் போறன்னு தெரியுது!!
வெற்றி: அடுத்து ட்ரைசைக்கிள தீவ்ஸ் என்கிற படத்தை சுட்டு குளிக்காதவன் அப்படின்னு ஒரு படம் எடுக்குறேன்!!

கவுண்டர்: இப்பவே கப்பு  தாங்கள!!
வெற்றி: கொசு சாரி தனுசு தான் ஹீரோ.பல வருசமா குளிக்காமலே இருக்காரு  .அவனோட அப்பா ஏண்டா நாயே குளிடா அப்படின்னு சொல்லியும் "குளிச்சு பாத்தேன் குளிக்க முடியல:" ன்னு பாடுறான் ஹீரோ!!
கவுண்டர் :இதென்ன சோப்பு விளம்பரமா?
வெற்றி: டோன்ட்  இன்டர்பியர்

கவுண்டர்: ஆ ஊன்னா இத சொல்லிடு!!
வெற்றி: பழைய நடிகை பஞ்சு அண்ணி கேரக்டர் தன கைக்குழந்தைக்கு பீ தொடச்சி விடும்  காட்சி உண்டு 
கவுண்டர்: அடங்கப்பா ஆள உடுரா சாமி!!

அடுத்து  கவுதம் மேனன்!!

கவுண்டர் : வாங்க.ஒ உங்களுக்கு தமிழ் புடிக்காதில்லை!!ஓகே கம யா!!
கவுதம்: கமிங் யா!!மை பிலிம் இஸ் அபவுட் டூ லவர்ஸ்.துண்டை தாண்டி வருவாயா!!
கவுண்டர்: ஏன் ஹீரோ பஞ்சாயத்து தலைவரா?
கவுதம்: வாட்ஸ் பஞ்சோத் வாட்ஸ் தட்?
கவுண்டர்: உக்கும்...சென்னைய உட்டு வெளிய போனாதான அதெல்லாம் கண்ணுக்கு தெரியும்!!
கவுதம்: வாட் கம எகெய்ன்!!
கவுண்டர்: ஒண்ணுமில்ல!!நீ சொல்லு!!
கவுதம்: மை ஹீரோ மெகானிகல் கிராஜுவேட்!இயக்குனர் சான்சுக்கு அலையுறான்!!
கவுண்டர்: பர்மா பஜார் போன நெறைய வெளிநாட்டு படங்கள் கெடைக்குது அதை காப்பியடிச்சு எடுக்கலாமே?
கவுதம்:(மைன்ட் வாய்ஸ் )நாம காப்பியடிப்பது இவனுக்கு எப்படி தெரியும்?பீ கேர்புல் நா என்னை  சொன்னேன்!!

 அடுத்து தியாகராஜன் குமாரராஜா அலையஸ் தியாகு 

 தியாகு: முதல் சீனே பாக்கி ஸ்ராப் அம்மணமா நிக்குறார்!அதை அப்படியே ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படத்தில் வரும் ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசையை யுஅவனை வைத்து சுட்டு போடுறோம்(மக்கள் அதையும் ஒலக இசைன்னு சொல்வாங்க)
கவுண்டர்: டேய் நாராயணா இந்த ப்ளூ பிலிம் எடுக்க வேண்டியவநேல்லாம் தமிழ் சினிமாவுக்கு வந்து கொல்றானுங்க!

அடுத்து முருகதாஸ்

முருகதாஸ்: மொதல்ல கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காதி தர்மனை காட்றோம்.காதியின் மகத்துவத்தை ஊரெல்லாம் போய் சொல்றார்!கடைசியில் சிலுக்கு துணி வியாபாரிகள் அவருக்கு விஷம் கலந்த கஞ்சியை கொடுத்து கொன்னுடுறாங்க!
கவுண்டர்: ஐயோ இப்பவே தல சுத்துது!
முருகதாஸ்: தமிழ் படத்துல காதி தர்மன் தமிழன்.தெலுங்கு படத்தில் தெலுங்கன்.ஹிந்தி படத்தில் ஹிந்திகாரன்!ஆனால் தமிழ் நாட்டுல தமிழர் வரலாறு பாரீர்னு பொய் சொல்லி வியாபாரம் பண்ணுவோம்!
கவுண்டர்: நல்ல வேலை நீ காமாராஜர் பத்தி படம் எடுக்கல!அதுலயும் தமிழ் படத்தில் காமராஜ் தமிழர் தெலுங்கு படத்தில் தெலுங்கர்னு ஊரை ஏமாத்தியிருப்ப!
முருகதாஸ்: சரி வேறு ஒரு கதை சொல்றேன்.ஹீரோ Anorexia  nervosa  வந்து பத்து வருசமா பெட்ல கிடக்கார்!திடீர்னு கொலை செய்யப்பட்ட கதாநாயகி நியாபகம் வந்து வில்லனை கொல்றார்!ஹீரோவுக்கு சிக்ஸ் பேக்ஸ் காட்றோம்!
கவுண்டர்: யோவ பத்து  வருசமா படுத்து கெடந்தவனுக்கு எப்படியா சிக்ஸ் பேக்ஸ் இருக்கும்?
முருகதாஸ்:: அட நம்ம சனங்க முட்டாள் சார்!கஜினியில் தன்னை மறந்து இருந்தாலும் அவனுக்கு சிக்ஸ் பேக்ஸ் காட்டுனோம்!எவனும் இது எப்படி சாத்தியம்னு கேக்கலையே!
கவுண்டர்: அட்ரா அட்ரா!

அடுத்து சசிகுமார்:

கவுண்டர்: ஐயோ கரடி!
சசி: படம் பண்றோம்!முதல் காட்சியே சேவிங்பண்ணாதபுறம் நாலு பரதேசி தாடி வச்சிகினு சுத்துறானுங்க!அவனுங்களா கரடின்னு நெனச்சி சர்கஸ்ல புடிச்சிகிட்டு போகுது சர்கஸ் வெண்!அவர்களை மீட்கும் கதாநாயகன்!அது நான்தான்!
கவுண்டர்:ஏன் ஒன்னைய புடிக்கலியா?
சசி: நான் அப்போ ஓல பாய்க்குள்ள ஒளிஞ்சிருந்தேன்!
கவுண்டர்: ஆளா உட்ரா சாமி!

கவுண்டர் தலை தெறிக்க ஓடுகிறார்.வழியில் எஸ் ஜே சூர்யா நிலாவுக்கு டிங்கரிங் பார்த்து கொண்டிருக்கிறார்!பீதியடைந்து தொடர்ந்து ஓடி மறைகிறார்!