வியாழன், 13 ஜனவரி, 2011

ஆ.ராசாவின் வக்கீலா கபில் சிபல்?

சாதரணமாக எந்த ஒரு காட்சியும் தனது கட்சிக்காரன் ஊழலில் மாட்டிகொண்டால் அந்த நேரத்தில்  அந்த கட்சி தலைவர் அதற்கு பதிலளிக்கும்போது "இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ஆதலால் நான் கருத்து கூற விரும்பவில்லை  " ன்னு தான் சொல்வார்.ஆனா நம்ம கபில் சிபல் கூவுன கூவல் இருக்கே(வடிவேலு ஒரு படத்தில் "வாங்குன காசுக்கு மீறி கூவுராண்டா கொயாலே"ன்னு சொல்வார்)அந்த மாதிரி இவர் கூவுனது.
            முதலில் இந்த கபில் சிபல் யாரென்று பலருக்கு தெரியாது.உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சராக இருக்கும் இவுரு ஒரு வழக்கில் வாதாட ஒரு மணிநேரத்திற்கு வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா?ஒரு கோடி.!!!!!மயக்கம் வந்தால் சோடா குடிக்கவும்.
           இப்படியாக கேபினட் அமைச்சராவதற்கு முன் இவர் கேப்மாரி  மொள்ளமாரிகளிடம் ஒரு மணிக்கு ஒரு கோடி வாங்கி அவர்களுக்கு ஆதரவாக வாதாடி அந்த "த்யாகிகளுக்கு  " விடுதலை வாங்கியும் கொடுத்திருக்கிறார்  .
          இப்போது ஸ்பெக்ட்ரம் வழக்கை சி பீ ஐ    நீதிமன்ற கண்காணிப்பில்(சி பீ ஐ மீது அவ்வளவு நம்பிக்கை நீதிமன்றத்துக்கு!!!!) விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் ஒய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டில் தலைமையில் ஒரு நபர் விசாரண கமிஷன்(ஒப்புக்கு!!) அமைத்த பின்னர் கபில் சிபல் திருவாய் மலர்ந்துள்ளார்.
            அவர் சொல்வது ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு பைசா கூட அரசுக்கு நட்டம் இல்லையாம்.CAG(Comptroller and Auditor General) இந்த ஒரு லட்சத்தி எழுபத்தாராரியறம் கொடி ஊழல் என்பது வெறும் அவரது யூகமாம்.!!!!அடங்கப்ப இது அந்தர் பல்டிடா சாமி!!!இத கணக்கு தணிக்கை துறை அறிக்கை வந்த உடனேயே சொல்ல வேண்டியதுதானே!!நீரா ராடிய டேப் அது இதுன்னு எல்லா ஆதாரமும் இருக்கும்போதே இவர் மக்களை இழிச்சவாயனாக்கபார்ரிகிறார்.ஒரு ஆதாரமும் இல்லையெனில்?ச்பெக்டரமே இல்லையென இந்த மரமண்டை சொன்னாலும் ஆச்சரியமில்லை.இந்த லட்சணத்தில் இவர்தான் ராசாவிற்கு பதில் தொலை தட்ர்பு அமைச்சர்.இவர் ஆதாரங்களை களைக்கா மாட்டாரென்பது என்ன நிச்சயம்?எனவே இவர் பதவி நீக்கப்படவேண்டும்.
            அப்புறம் எதுக்கு விசாரணை கமிஷன் அமைத்தது காங்கிரஸ்?கிளுகிளுப்ப காட்டவா?அப்படியே ஆதர்ஷ் ஊழல் காமன்வேல்த் ஊழல் ஐபிஎல் ஊழல்னு எல்லாத்துலையும் ஒரு பைசா ஊழல் நடக்கலைன்னு சொல்லிடுங்க.
           விலைவாசி விண்ணை கிழித்துக்கொண்டு அண்ட வெளிக்கே சென்று  விட்டது.அதற்கும் "விலைவாசி மிக மிக குறைவாக உள்ளது.உயர்வு என்பது எதிர்கட்சிகளின் ஊகமென ஒரு அறிக்கை கொடுத்துடுங்க.குடுத்துட்டு போர்வைய பொத்திகினு தூங்கு.நாடு வெளங்கும்.
           சி பீ ஐ நீதிமன்ற கண்காணிப்போடு விசாரணை செய்துகொண்டிருக்கிறது.இந்த நேரத்தில் சரக்கடிச்சவன் ஓலருவதுபோல்  இந்த பஞ்சுமிட்டாய் தலையன் கபில் சிபல் பெனாத்தியிருப்பது  கேவலத்திலும் கேவலம்.இந்த கேவல செயலை செய்தமைக்கு நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியுள்ளார்.இவ்வாறு இடையில் குலைத்து வழக்கை திசை திருப்ப முயன்றாரென இவர் உள்ளே தள்ளப்பட வேண்டும்.

திங்கள், 10 ஜனவரி, 2011

கேட்க கூடாத கேள்விகள்!!!!

இவர்களிடம் கேட்க கூடாத கேள்விகள்!!!! சும்மா...சீரியஸா எடுத்துகாதீங்க!!! ;)
********************************************
@கருணாநிதியிடம்:வர தேர்தல் பிரசாரத்துல ஸ்டாலின்தான் அடுத்த முத்லவர்னு அறிவிக்க முடியுமா?"தெற்க"  பாக்காம!!!
@ஜெயாவிடம்:வைகோ சீமானின் எல்லா கொள்கையையும் நீங்க ஆதரிக்கிரீங்களா?
@ராமதாசிடம்:ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து?
@விஜயகாந்திடம்:காங்கிரஸ்,அதிமுகவ தாக்கி பேசுவீங்களா?
@சரத்குமார்:இன்னும் ஒங்க கட்சி இருக்கா?
@(பழைய)கார்த்திக்:ரூம வுட்டு எப்போ வெளிய வருவீங்க?
@டி ஆரிடம்:தேர்தல்ல வழக்கம்போல தனியா நின்னு சொத்த இழக்க போறீங்களா?
@அழகிரியிடம்:ஸ்டாலின் அடுத்த முதல்வராவரா?
@கனிமொழி:நீரா ராடிஆவோடு செல்பேசியில்  "என் நண்பன்" திட்டத்துல இலவசமா பேசுனீங்களா?
@சு சாமி:அடுத்த பல்டி  எப்போ?
@சோ ராமசாமி:இன்னும் ராஜபக்சேவ நல்லவன்னு  நம்புறீங்களா?

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

காலம் மாறலாம் ஆனால் கோலம் மாறலை

இது 2009 ஆம் வருடம் நான் போட்ட கேலி சித்திரம்.காலம்  மாறலாம் ஆனால் கோலம் மாறலை.எனவே மீண்டும்.....
http://writerviki.blogspot.com/2009/05/blog-post_23.html

புதன், 5 ஜனவரி, 2011

நாய் பெற்ற தெங்கம்பழம்

நாய் பெற்ற தெங்கம்பழம் -இது பதினெண் கீழ்கனக்கில் வருகிறது என நினைக்கிறேன்(அவ்வளவு  புலமை எனக்கு இல்லை,ஒப்புகொள்கிறேன்.)
இதன் அர்த்தம் நாயிடம் ஒரு தேங்காய் கிடைத்தால் அதை வைத்துகொண்டு என்ன செய்வதென அதற்கு தெரியாது.உருட்டி விளையாடும்.தனக்கும் பயன்படுத்தாது மற்றவர்களையும் அண்ட விடாது இவாறு உருட்டிகொண்டிருக்கும்.அதே போலதான் இந்தியா அரசின் நடவடிக்கையும்.வெங்காய விலையை குறைக்கிறேன் பார் என கோதாவில் இறங்கிய மத்திய அரசு பாகிஸ்தானில் இருந்து 200 டன் வெங்காயம் இருக்குமதி செய்தது.அதாவது கப்பல் வழியாகவாம்.இப்போது அந்த வெங்காய கன்டைனர்கள்  மும்பை துறைமுகத்தில் அழுகி கொண்டிருக்கிறதாம் .என்ன காரணமெனில் இதற்கு தடையில்லா ஒப்புதல் (Clearance) கொடுப்பதில் இரு அதிகாரிகளிடையே மோதல் மற்றும் கருத்து வேறுபாடு நிலவுகிறதாம்.அதனால் தானும் வெங்காயத்தை பயன்படுத்தாமல் பாகிஸ்தானையும் பயன்படுத்த  விடாமல் செய்த இந்தியா அரசு நாய் பெற்ற தங்கம் பழத்திற்கு சிறந்த உதாரணம்.இப்போ மீண்டும் வெங்காய விளை விர்ர்ர்...இவர்களுக்கென்ன வந்தது.ஆதர்ஷ் ஸ்பெக்ட்ரம் காமன்வெல்த்   ஐ பி எல் என பல லட்சம் கோடிகள் சுருட்டி வைத்திருக்கின்றனர்.என்ன விலைவாசி ஏறினால் ஆட்சியாளர்களுக்கென்ன  வந்தது.
      மக்களின் கதிஎன்னவென  சிலர் வினவலாம்.அதெல்லாம் கேக்க கூடாது.இது சன நாயகமாயிருந்தாலும் மறைமுக மன்னராட்சிதான்  நடைபெறுகிறது.மக்கள் எக்கேடு கேட்டால் இவர்களுக்கென்ன?சரத் பவாருக்கு BCCI இல் வரும் கோடிகளும் மகாராஷ்ட்ராவில் முக்கியமான இடங்களின் பிளாட்டுக்களும்தான் தெரியும்.மக்களின் கஷ்டம் அல்ல.