புதன், 5 ஜனவரி, 2011

நாய் பெற்ற தெங்கம்பழம்

நாய் பெற்ற தெங்கம்பழம் -இது பதினெண் கீழ்கனக்கில் வருகிறது என நினைக்கிறேன்(அவ்வளவு  புலமை எனக்கு இல்லை,ஒப்புகொள்கிறேன்.)
இதன் அர்த்தம் நாயிடம் ஒரு தேங்காய் கிடைத்தால் அதை வைத்துகொண்டு என்ன செய்வதென அதற்கு தெரியாது.உருட்டி விளையாடும்.தனக்கும் பயன்படுத்தாது மற்றவர்களையும் அண்ட விடாது இவாறு உருட்டிகொண்டிருக்கும்.அதே போலதான் இந்தியா அரசின் நடவடிக்கையும்.வெங்காய விலையை குறைக்கிறேன் பார் என கோதாவில் இறங்கிய மத்திய அரசு பாகிஸ்தானில் இருந்து 200 டன் வெங்காயம் இருக்குமதி செய்தது.அதாவது கப்பல் வழியாகவாம்.இப்போது அந்த வெங்காய கன்டைனர்கள்  மும்பை துறைமுகத்தில் அழுகி கொண்டிருக்கிறதாம் .என்ன காரணமெனில் இதற்கு தடையில்லா ஒப்புதல் (Clearance) கொடுப்பதில் இரு அதிகாரிகளிடையே மோதல் மற்றும் கருத்து வேறுபாடு நிலவுகிறதாம்.அதனால் தானும் வெங்காயத்தை பயன்படுத்தாமல் பாகிஸ்தானையும் பயன்படுத்த  விடாமல் செய்த இந்தியா அரசு நாய் பெற்ற தங்கம் பழத்திற்கு சிறந்த உதாரணம்.இப்போ மீண்டும் வெங்காய விளை விர்ர்ர்...இவர்களுக்கென்ன வந்தது.ஆதர்ஷ் ஸ்பெக்ட்ரம் காமன்வெல்த்   ஐ பி எல் என பல லட்சம் கோடிகள் சுருட்டி வைத்திருக்கின்றனர்.என்ன விலைவாசி ஏறினால் ஆட்சியாளர்களுக்கென்ன  வந்தது.
      மக்களின் கதிஎன்னவென  சிலர் வினவலாம்.அதெல்லாம் கேக்க கூடாது.இது சன நாயகமாயிருந்தாலும் மறைமுக மன்னராட்சிதான்  நடைபெறுகிறது.மக்கள் எக்கேடு கேட்டால் இவர்களுக்கென்ன?சரத் பவாருக்கு BCCI இல் வரும் கோடிகளும் மகாராஷ்ட்ராவில் முக்கியமான இடங்களின் பிளாட்டுக்களும்தான் தெரியும்.மக்களின் கஷ்டம் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக