வெள்ளி, 31 டிசம்பர், 2010

இலவச மருத்துவம் பாத்தா கைது ஆயிரகணக்குல வாங்கி மருத்துவம் பாத்தா பத்மபூஷன்

ஆம் இதான் இந்த சனநாயகம் என்று "பெயரளவில்" சொல்லப்படும் இந்தியாவில் நடக்கிறது.பினாயக் சென் என்கிற வேலூர் சி.எம்.சி இல் குழந்தை வைத்தியம்(Paediatrics) படித்து விட்டு சட்டிஸ்கரில் வசிக்கும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தார்.அந்த மலைவாழ மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருந்துக்கு(இந்த மருந்து வேற!!) கூட மருத்துவர்கள் கிடையாது.அதேபோல்தான் மருந்துகளும். எனவே இந்த மக்களுக்கு தான் படித்த மருத்துவம் பயனுற வேண்டும் என நினைத்த பினாயக் சென் அங்கு சென்று மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த செலவிலும் மருத்துவம் பார்த்து வந்தார்.

        இது பொறுக்குமா கார்பரேட் கைகூலியாய் மாறிவிட்ட அரசுக்கு?இதில் காங்கிரஸ் பா.ஜா.க. வேறுபாடு ஒரு மண்ணும் கிடையாது(கம்யூனிஸ்டும் அப்படி ஆகிவிட்டது வேறு கதை).சத்திஸ்கர் மாநில பா.ஜா.க மட்டும் இதற்கு விதிவிலக்கு ஆகிவிடுமா என்ன?கண்ணுக்கு தெரியாத ராமருக்கு கோவில்கட்ட காடும் அக்கறையை இவர்கள் கண்ணுக்கு தெரியும் மக்களின் மேல் என்றாவது காட்டியிருக்கின்றனரா  ?இதில் காங்கிரஸ் பா ஜ க வேறுபாடில்லை.இது நாட்டின் சாபக்கேடு.
        ஏற்கெனவே பினாயக் சென் 2008 ஆம் ஆண்டு இதே போல் போலி ஆவணங்கள்  மூலம் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்டார்.அதன் பின் அவரின் கூட படித்தவர்களும் வேலைபார்த்த மருத்துவர்களும் வேலூர் சி.எம் சி கல்லூரியும் போராடியதால் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் இப்போது அதே கேப்மாரிதனத்தை அரசு மீண்டும் செய்திருக்கிறது.
         இவர் மாவோயிஸ்டுகளுக்கு தூதுவராக இருந்தாராம்.அதற்காக "புனையப்பட்ட" சில கடிதங்களை  அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.
         சூப்பரப்பு  .அப்படியே நாடு பூரா ஏழை மக்கள், பழகுடியினருக்கு இலவச மருத்துவம் செய்யும் மருத்துவர்களை பிடித்து உள்ளே போடுங்கடா.அப்போதானே அப்போலோ போர்டிஸ் etc..etc.. போன்ற தனியார் கார்பரேட் கழிசடைகள் கொள்ளையடிக்க முடியும்.
         அரசு என்பது மக்களுக்கு என்பது மாறி அரசு என்பது முதலாளிகளுக்கும்  கார்பரேட்டுகளுக்கும் என எப்போதோ மாறிவிட்டது.
         இலவச மருத்துவம் பார்த்தால் கைது.ஆனால் ஆயிரக்கணக்கில் "பிடுங்கி" வைத்தியம் பார்த்தால் அவர்களுக்கு பத்மபூஷன் விருது.சூப்பர்.
          அப்போலோ  மருத்துவமனை ரெட்டிக்கு  பத்மபூஷன்.எதுக்கு?ஒரு சின்ன தலைவலிக்கு போனா கூட அந்த ஸ்கேன் இந்த எக்ஸ் ரென்னு மக்களை ஓட்டாண்டி ஆக்குனதுக்கா?என்னாங்கடா இது?
          அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதை பார்க்க வக்கில்லாத மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் ஒரு கக்கூஸ் கட்டினாலும் கூட  "ஆஹா ஓஹோ" என புகன்ழ்து போஸ் கொடுப்பது கூட்டி கொடுப்பதை விட கேவலமானது.வாழ்க சன நாயகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக