வியாழன், 9 டிசம்பர், 2010

வழக்கம் போல் விசாரணை கமிஷன்-எதற்கு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்?

ஸ்பெக்ட்ரம்  பிரச்சனையை இந்தியாவையும் தாண்டி உலகமே காரி முழிந்த விவகாரமாகிவிட்டது.இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் கூட நடை பெற விடாமல் எதிர்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.எதிர்கட்சிகள் வலியுறுத்துவது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்பதை.ஆனால் காங்கிரஸ் அரசோ பொது கணக்கு குழு விசாரணையே போதும் என எதிர் கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து மறுத்து வருவதால் ஒரு முட்டுக்கட்டை ஏற்ப்பட்டது.
    எதிர் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்பதற்கு காரணம் இந்த அலைகற்றை ஊழலில் ராசா மாட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், டாடா அம்பானி போன்ற கார்பரேட்டுகளும் ஈடுப்பட்டிருப்பதால் முழுமையான சுதந்திரமான ஞாயமான    விசாரணை வேண்டும் என்பதே.
   ஆனால் காங்கிரஸ் பொது கணக்கு குழு விசாரணையே போதும் என கூறி அதற்கு வலுசேர்க்கும் விதமாக பொது கணக்கு குழு தலைவர் பா.ஜா.க  கட்சியை சேந்தவர் என்பதால் அதுவே போதும் என்கிறது.
    இருபது நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டதால் பல கோடி இழப்பு ஏற்ப்பட்டதாகவும் இதற்கு எதிர் கட்சிகள் காரணம் என காங்கிரஸ் பழி சுமத்தியது.
       இப்போது திடீரென ராசா வீட்டில் சி பீ ஐ ரெய்டு(அடங்கப்பா ஊழல் நடந்து மூணு வருடம் கழிச்சி போனா பைத்தியகாரன் கூட  எல்லா ஆதரங்களையும் அழித்து முடித்திருப்பான்!!!).அதோடு மட்டுமலாமல் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற  நீதிபதி சிவ​ராஜ் பாட்​டீல் தலைமையில்(!!) ஒரு நபர்  விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.

        மேலும் இந்த விசாரணை 2001 ஆண்டில் இருந்து நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.!!(பா கா சாவிற்கு செக் வைக்கும் விதமாக)அப்போ நிச்சயமாக யாரும் மாட்டபோவதில்லை. ஏனெனில் 2001-2004 ஆண்டுவரை ஆட்சியில் இருந்த பா ஜா க மட்டும் தாக சீலர்களாய் நிச்சயமாய் இருந்திருக்கமாட்டார்கள்.இப்போ இவர்கள் காங்கிரசுடன் ரகசிய பேச்சில் ஈடுபடுவார்கள்.நீயும் திருடன் நானும் திருடன்.எதுக்கு சண்டை?சேர்ந்து மக்களை தொடர்ந்து மேலும் திருடுவோம் வா!!!
        "வழக்கம் போல்" மற்றொரு விசாரணை கமிஷன்.வழக்கம் போல் பல மாதங்களுக்கு விசாரணை இழுத்தடிக்கப்படும்.அப்புறம் இந்த ஊழலில் ராசா மற்றும் பிறரின் தொடர்பிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறப்படும்.மேலும் ஒரு சம்பிரதாயத்திற்காக  சில கண்டன்களும் சில அறிவுரைகளும் வழங்கப்படும்.அதுதான் விசாரணை கமிஷன் பனி.இதற்கு பல கோடிகள் செலவழிக்கப்படும்.
         இந்த விசாரணை  கமிஷன் அமைக்கப்பட்ட காரணம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும்  என தொடர்ந்து கூறிவரும் எதிர்கத்சிகளின் வாயை மூடுவது.
        இரண்டாவதாக "இதோ பார்  ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்துவிட்டேன்" என்று காங்கிரஸ் தனது காலரை தூக்கி விட்டு கொள்ள.மேலும் இப்போது பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால் அவை முடியும் வரை விசாரணை கமிஷன் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்காமல் பார்த்துகொள்ளபடும்.
       மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் ஊழலுக்கு  எதிரானவர்கள் என்ற  ஒரு போலி மாயையை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்படுத்தி ஒட்டு பொறுக்க முயலும்.
       இது வரை ஏதாவது ஒரு விசாரணை கமிஷனால் தண்டிக்கப்பட்ட அல்லது பொதுவாக ஊழால் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியையும் நாம் காட்ட முடியாது.ஒன்று பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு பின்னர் "சரியான ஆதாரம் இல்லை" என கூறி விடுவிக்கப்பட்டனர்.இல்லையேல் நான் முன்பே கூறியதுபோல் விசாரணை கமிஷன்.
     இந்த விசாரணை கமிஷன் என்பது குறிப்பிட்ட ஆயுட்காலம் கொண்டது.உம்.இரண்டு ஆண்டுகள்.இரண்டு ஆண்டுகள் முடிந்தபின் அதன் ஆயுளை நீட்டிப்பதா வேண்டாமா என்பதை அப்போது ஆட்சியில் இருக்கும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
    இதனால் என்ன ஆனது என்றால் ஆளும்கட்சி எதிர்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக விசாரணை கமிஷன் அமைக்கும்.அதன் ஆயுள் அந்த குறிப்பிட்ட ஆளும் கட்சி இருக்கும்வரை.பின்னர் ஒரு வேலை எதிர்கட்சி ஆட்சிக்கு வருமெனில் அது இந்த கமிஷனின் ஆயுளை முடித்து வைக்கும்.இதுதான் விசாரணை கமிஷன் வரலாறு.
    இப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்ச்சிக்கெதிராக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.,இதன் ஆயுட்காலம் சில ஆண்டுகள்.உதாரணமாக இரண்டு ஆண்டுகள் என்றால் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஊழல் விவகாரம் அதே சூட்டோடு இருந்தால்(சத்தியமாக இருக்க வாய்ப்பில்லை.இந்த இடத்தை வேறு ஊழல்கள் ஆக்கிரமிக்க வருகின்றன!!!இதுதான் இந்தியா ஊழல் வரலாறு ).காங்கிரஸ் இந்த கமிஷனின் ஆயுட்காலத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கும்.அப்புறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிச்சயமாக இதன் ஆயுள் முடிக்கப்படும்.ஏனெனில் ஒருவேளை எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டால்?(அப்படியே அவர்கள் ஆயுட்காலத்தை நீட்டித்தாலும் யாரும் தண்டிக்கபடபோவதில்லை.ஏனெனில் அவர்களும் பல ஊழல்கள்முன்பு செய்திருப்பார்.)
      ஆக இந்த விசாரணை கமிஷன் என்னும் போலி மாயையே ஒரு கண்துடைப்புதான்.எதற்கு மக்கள் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்?எப்படி இருந்தாலும் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கபடபோவதில்லை.ஆதலால் நான் இவ்வளவு ஊழல் பண்ணியிருக்கிறேன்.நீ ஆட்சிக்கு வந்தால் நீயும் பண்ணிக்கொள்.ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை ஓட்டாண்டி ஆக்குவோம் என கூறி எல்லா எழவு கமிஷனையும் ஒழித்து காட்டுங்கள்.வாழ்க சன நாயகம்!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக