வெள்ளி, 28 நவம்பர், 2008

அணு சக்தி உண்மை நிலை

30 வருடங்கள கழித்து 5% மின்சாரத்திற்காக பல லட்சம் கொடிகள் அமெரிக்க கம்பெனிகளுக்கு லாபம்.அவ்வளவுதான்.அங்கு அணு மின்சாரம் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டு வருகிறது.எனவே அங்கு இருக்கும் குப்பை அணு உலைகளை யார் தலையில் கட்டலாம் என யோசித்த போது மேதகு சிங்க் முன்னே பொய் நின்றார்
அங்கு அணு உலைகள் மூடப்படுவதற்கு காரணம் பாதுகாப்பின்மயே chernobyl சம்பவமும் three mile island சம்பவமும் அவர்களுக்கு தெரியும் .அதனால்.ஆனால் அச்சம்பவங்கள் நம் இந்திய பிரதமருக்கு தெரிய வாய்ப்பில்லை.மேலும் அணு உளைக்கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் மீன்கள் அழிந்து மீனவர்கள் நடுத்தெருவிற்கு வர வேண்டி இருக்கும்.ஏற்கெனவே கலபக்கத்தில் இந்த பாதிப்பு உணரப்படுகிறது.மீனவர்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.இது பலருக்கு தெரிவதில்லை.மேலும் அணு ஒப்பந்தத்தை எந்நேரமும் அவர்கள் விளக்கி கொள்ள உரிமை உண்டு
மேலும் கூடங்குளத்தில் அணு உலைகள் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் போராட்டங்கள் செய்தும் அங்கு உலைகள் அமைக்கப்படும் என தெரிகிறது.அப்பகுதி பூகம்ப வாய்ப்பு அதிகம் உள்ள இடம்.

வியாழன், 27 நவம்பர், 2008

மாணவர்கள்?

சமீபத்தில் மாணவர்கள் ஆங்காங்கே ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன .இதற்கு காரணம் யார்?
"நாளைய பாரதம் மாணவர் கையில் "என அனைவரும் மேடையில் கூறி வரிகின்றனரே தவிர இன்றைய பாரதம் யார் கையில் உள்ளது என யாரும் கூற முனிவதில்லை.மாணவர்களின் தேவையையோ விருப்பத்தையோ யாரும் கண்டு கொள்வதில்லை.
பெற்றோர் அவர்களை படி படி என கூறி கல்வி என்பது வெறும் ஏடுகளில் இருக்கும் மதிப்பெங்களுக்குதான் என ஒரு என்னத்தை உருவாக்கி விடுகின்றனர்."என் புள்ள 100 கு 100 வாங்கணுங்க .நீங்க என்ன வேணும்னா பண்ணுங்க"என ஆசிரியரிடம் கூறி விடுகின்றனர்.இது மாணவர்களக்கு கல்வியில் மேலும் வெறுப்பையே ஏற்படுத்துகிறது.வீட்டிலும் உதை வாங்கி பள்ளியிலும் உதை வாங்கி அவர்களுக்கு வன்முறை எண்ணமே மனதில் பதிகிறது.
மேலும் இது போதாதென்று சினிமா வேறு.தனது விருப்ப நாயகன் என்ன செய்தாலும் அதை செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணம் உருவாகிறது.சினிமாவிலும் 10 பேரை அடிப்பவன் ஹீரோ ,ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி காதலிப்பவன் ஹீரோ என தவறாக காட்டபடுகிறது.இடை பார்க்கும் மாணவர்களுக்கும் வன்முறை எண்ணம் மேலும் வளர்கிறது.எனவே அவர்கள் சக மாணவர்களை அடிப்பதால் ஹீரோவாகி விடலாம் என நினைக்கின்றனர். அதன் விளைவே இத்தகைய வன்முறை.
இந்நிலையில் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள்.அது அவர்களை மேலும் வன்முறை செய்ய தூண்டுகிறது.முதலில் அணைத்து மாணவர்களும் ஒன்றாக பார்க்கப்பட வேண்டும்.அவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை புரிந்து அன்புடன் நடத்த வேண்டும்.மதிப்பெண் மட்டும் வாழ்க்கையில்லை.ஒழுக்கமும் அவசியம் என உணர்த்த வேண்டும்.சாதிகள் application form இல் இருந்து மட்டுமல்ல அனைவரது மனதில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.

மும்பையில் மீண்டும் குண்டு வெடிப்பு

மும்பையில் மீண்டும் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது .ஏற்கெனவே நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களிலயே இன்னும் குற்றவாளிகள் பிடிபடவில்லை.பிடிபட்ட பிரக்ய சாமியாரையும் விசாரிக்க விடாமல் சில காவி சக்திகள் தடுத்து வருகின்றன.
காவியோ பச்சையோ இந்த மத வெறியர்கள் தண்டிக்க படவேண்டும்.
இந்த வெறியர்கள் சற்று காலம் பொறுக்கட்டும்.chandraayan-2 ரெடி ஆனதும் அணைத்து காவி,பச்சை மதவெறி காரர்களை நிலவுக்கு அனுப்பிவிடலாம்.அங்கு சென்று யார் கொடி பெரியது என hydrogen bomb வேடுமானாலும் வெடித்து சோதித்து கொள்ளட்டும்.அதை விடுத்தது அப்பாவி மக்களை கொல்ல எவனுக்கும் உரிமை இல்லை

திங்கள், 24 நவம்பர், 2008

என் சமூக பார்வை

1.

நிலவில் மூவர்ண கொடியாம்!!

அப்படியா!! இனி பெண்கள் சமமாக மதிக்கப்படுவார்கள்
மூணு வேலை சோறு அணைத்து மக்களுக்கும் கிடைக்கும்
24hrs மின்சாரம் கிடைக்கும்
ஜாதி மத பிரச்னைகள் இருக்காது
அப்பா எவ்வளவு லாபம் ?இல்லை!!!

2.

why marriage?

men with good&tender minds need not read this.some exceptions alos there
why men r marrying women?
-to quench their sexual thirst
-as a free servant maid
-"aaya" for his children
-as a cook
-as a money snatching tree
-ash tray(for some animals)

3.

எரிபொருள் விலை?

கச்சா எண்ணெய் 140$ இருந்த பொது கொஞ்சம் கூட யோசிக்காமல் எரிபொருள் விலையை ஏற்றிய மதிய அரசு இப்போது 50$ கும் குறைந்த போதும் எரிபொருள் விலையை குறைக்காமல் இருப்பது என்ன ஞாயம் என்று தெரியவில்லை.எப்போதாவது இந்திய விஜயம் செய்யும் நம் பிரதமர் இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.