வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஒரு மோசமான முன்னுதாரணம்

இங்கு ஏற்கெனவே நான் 49 ஒ என்ற விருப்பத்தை பொத்தானாக ஓட்டுபதிவு எந்திரத்திலேயே வைக்காததால் வரும் விளைவுகள பற்றி சொல்லி முடிக்கவில்லை.தமிழ் நாடு முழுக்க கிட்டத்தட்ட 25 ,000 பேர் 49 ஒ பயன்படுத்தியுள்ளனர்.உளவுத்துறை இந்த 49 ஒ பயன்படுத்தியவர்கள நக்சலைட்டுகளா என விசாரணை செய்வதாக புகார் எழுத்துள்ளது.
         இதை தேர்தல் ஆணையம் முறையாக விசாரிக்க வேண்டும்.பிச்சைகாரன் சட்டைப்பையில் கூட கைவிட்டு சோதனை செய்த தேர்தல் ஆணையம்  இதை கண்டுக்காமல்  விடுவது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
         ஆளும்கட்சி மட்டுமல்ல எல்லா கட்சிகளும் இந்த 49 ஒ பயன்படுத்தியவர்கள மீது கடும் வெறுப்போடு இருப்பதை சொல்லி விளங்க வேண்டியதில்லை.இந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கடும் நெருக்கடி அவர்களுக்குதான்.அதனால் இப்போது க்யூ பிரிவு போலீசு  மூலம் நடக்கும் இத்தகைய சட்டவிரோத விசாரணை உடனே நிறுத்தப்பட வேண்டும்.இதனால் அரசு மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்தி அல்லது ஒரு மாயை என்னவெனில் "மவனே இனி எவனாவது 49 ஒ போட்டீங்கனா  அவுங்கள நக்சலைட்டுகள்னு உள்ள தள்ளிபுடுவேன்" ன்னு மிரட்டுவதுதான்.
        தான் யாருக்கு ஒட்டு போட்ட்ம்னு ரகசியம் காக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தால் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சோதனை சட்ட விரோதம் என்பதில் சந்தேகமில்லை.இதற்கு ஒரே தீர்வு ஒட்டு பதிவு எந்திரத்திலேயே தனி பொத்தானாக 49 ஒ இடம் பெற செய்ய வேண்டும்.இது குறித்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் இது பற்றி பேச வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நடுநிலைவாதிகள் தள்ளபட்டிருக்கிரன்றனர் என்பதே உண்மை.
        அப்புறம் 49 ஒ போட்டவர்கள் நக்சலைட்டுகள் என கூறுவது கேலிக்கூத்து.அவர்களின் முழக்கமே "ஒட்டு போடாதே புரட்சி செய்" என்பதுதான்.தேர்தலுக்கு முன்பு கூட   இதை தான் அவர்கள் துண்டு சீட்டு மூலமும்  போஸ்டர்கள் மூலமும் விளம்பரபடுத்தினர்.எங்குமே "49ஒ போடு" என்று அவர்கள சொல்லவில்லை.சொல்லவும் மாட்டார்கள் .ஏனெனில் அவர்களுக்கு இந்த இந்திய நாடாளுமன்ற அமைப்பிலேயே நம்பிக்கை  அற்றவர்கள்.எனவே இந்த மோசமான விசாரணையை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.அதோடு 49 ஒ குறித்த வழக்கு விசாரணையை தீவிரபடுத்தி அடுத்த நாடாளுமன்ற தேர்தல்(2014 க்கு முன்) முன்பாவது அதை ஒரு பொத்தானாக வாக்குபதிவு எந்திரத்தில் வைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

படித்ததில் பிடித்தது!

http://philosophyprabhakaran.blogspot.com/2011/04/18.html
***********************************************************
என்னிக்கித்தான் சினிமா பைத்தியமான தமிழனுக்கு அறிவு  வருமோ தெரியல!!!இப்படி ஆங்கில பட உட்டாலக்கடிகளை கலா சிருஷ்டி  என்று உளரும் ஊடகங்களுக்கு இது சவுக்கடி

புதன், 27 ஏப்ரல், 2011

என்டோசல்பான் மற்றும் பில விஷ பூச்சிகொல்லிகளை தடை செய்!

60-70 -களில்   பச்சை புரட்சி (Green Revolution ) என்ற பெயரில் விளைச்சலை அதிகபடுத்துறோம் பார் எனக்கூறி எம் எஸ் சுவாமிநாதன் உள்ளிட்ட அறிவுஜீவிகள்(அல்லது  அமெரிக்க  ஏஜண்டுகள்!!!) பூச்சிகொல்லி மருந்து மற்றும் செயற்கை உரங்களை பயன்படுத்தும் ஒரு கட்டாயத்திற்கு இந்திய விவசாயிகளை தள்ளினர்.இதனால் வந்த விளைவுகள் சொல்லி மாளாது.முன்பு அறுபது வயசில் வாக்கில்  வரும்  சக்கரை ரத்த கொதிப்பு போன்றவை இப்போது முப்பதுகளிளிருந்தே வருகிறது.(அதற்கு வேகமான வாழ்கை முறை சொல்லபட்டாலும் இது ஒரு முக்கிய காரணம்).இந்த பூச்சிகொல்லி மருந்து மற்றும் செயற்கை உரங்களை அறிமுகம் செய்ய அரசு சொன்ன காரணம் "இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்குநாள் பெருகி வருகிறது.அதற்கேற்ப உணவு உற்பத்தி இருக்க வேண்டும் ".இந்த ஒரு காரணத்தை சொல்லி அமெரிக்க மற்றும் பிற பன்னாட்டு உர மற்றும் பூச்சிகொல்லி மருந்து நிறுவனங்கள் பிழைக்க வழி செய்தனர்.
                இப்போது தொடர்ந்த பூச்சிகொல்லி மற்றும் ரசாயன உர பயன்பாட்டால் பல விளைநிலங்கள் மலடாகிவிட்டன.அந்த நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சாப்டுவேர் பூங்காக்கள் மற்றும் பிளாட்டு போட விவசாயிகளிடம் இருந்து தந்திரமாக பிடுங்கி அதிக விலை பார்க்கும் அமைச்சர்கள் ஒரு புறம்.மற்றொரு  புறம் விளைச்சல் சரிவர இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் அவல நிலை மறுபக்கம்.
                இன்னொரு புறம் இதை விட அசிங்கமாக பெற்ற தாயை கூட்டி கொடுப்பது போல மரபணு மாற்று விதிகளை விற்பனை செய்ய பன்னாட்டு பண முதலைகளுக்கு(முக்கியமாக அமெரிக்காவின் மான்சாண்டோ) உதவும் அரசுகள் விவசாயிகளை தாஜா செய்வது மறுபக்கம்.இந்த விதைகள் கேன்சர் மலட்டுத்தன்மை உள்ளிட்ட படு பயங்கர விளைவுகளை உண்பவருக்கு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதை ஒரு முறைதான் விதைக்க முடியும்.ஒரு கிலோ விதை பல  ஆயிரம் வரை செல்லும்.ஒரு முறை விளைச்சல் முடிந்தால் மீண்டும் விவசாயிகள் இந்த மான்சாண்டோ கம்பனியிடம்தான் கையேந்தவேண்டும்.
        ஏற்கெனவே  மரபணு மாற்ற பருத்தியை விளைவித்த விதார்பா விவசாயிகள் பின்னர் அந்த நிலம் மலடான அதிர்ச்சியிலும் மேலும் தங்கள் வாழ்வை தொடர வழியில்லாமலும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்(வேளாண் அமைச்சராக அப்போது இருந்த சரத் பவார் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது இன்னொரு வெக்ககேடு)
           இப்போது வெடித்திருக்கும் என்டோசல்பான்  பூச்சிகொல்லி விவகாரம்.கேரளா முதல்வர்  அச்சுதானந்தன் இதை மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென உண்ணாவிரதமிருக்கிறார்.
இந்த என்டோசுல்பான் பூச்சி கொல்லி குறித்து மேலும் அறிய கீழே உள்ள சுட்டிகளை சொடுக்கவும்:


http://www.nalanda.nitc.ac.in/environmental_study/Effect_of_endosulfan.pdf
http://endosulphanvictims.org/resources/ENDOSULFAN_FACTSHEET.pdf 
**
இதனால் பாதிக்கப்பட்ட சில அப்பாவிகளின் படங்கள் கீழே.


இத்தகைய கொடூர விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்டோசல்பான்  ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 63 நாடுகள் தடை செய்திருக்கின்றனர்(அது சரி ஊர் ஒலகத்துல தடை செய்யப்பட ` எல்லா விஷங்களும் இந்தியாவில் மட்டும் மத்திய அரசின் தயவோடு விற்பனை ஆகும்.அடிங்கோ!).இந்தியா மற்றும் சீனா மட்டுமே இதை இன்னமும் பயன்படுத்தி வருகிறது.அதுவும் இந்திய அரசின் Hindustan pesticides நிறுவனமே இதை உற்பத்தி செய்வது வெக்ககேடு!.இந்த நிலையில இந்தியா வல்லரசாம் .திருந்துங்கடா.
           நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள்  இயற்கை உரம் மற்றும் பூச்சி அழிப்பான் குறித்து எவ்வளவோ சொல்லி வருகின்றனர்.அதை அரசு கேட்டு உடனே செயல்படுத்த  வேண்டும்.மேலும் இந்த என்டோசுல்பானை தயாரித்தவர்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதை உடனே தடை செய்ய வேண்டும்.எப்போதாவது இந்தியா வந்து  செல்லும் பொம்மை பற்றி நான் பேச விரும்பவில்லை.இத்தாலிய ஏஜன்ட் பத்தியும் ஒன்னும் சொல்லவேண்டியதில்ல.இந்த  நிலையில் மேலே சொன்ன  நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?என்னத்த சொல்ல!!

திங்கள், 25 ஏப்ரல், 2011

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

இத ஸ்டீபன் ஹாக்கிங்தான் விளக்கனும்!!!!

 ******************************************************************************
சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.

இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.
*************************************************************************

           "மந்திரவாதி" சாய்பாபா மரணத்தையொட்டி தினமலர் நாளேடு ஒரு பெட்டி செய்தி வெளியிட்டுள்ளது.மேலே படிக்கவும்!அடங்கப்பா எனக்கு தல சுத்துதுடா சாமி(தலைவர் கவுண்டமணி சொல்வதுபோல்!!) நானும் எவ்வளவோ கணக்கு இயற்பியல் படித்திருக்கேன்.ஆனா இப்படி ஒரு கணக்க யாரும் சொன்னாதில்ல.நீ என்ன பண்ற இத அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டிவெச்சிட்டு பக்கத்துலையே ஒக்காந்துக்க.பின்னாடி வர சந்ததிகள் இத படிச்சிட்டு தெளிவாகிடுவாங்க!!!
           இந்த கணக்க ஸ்டீபன் ஹாக்கின்க்தான் வெளக்கனும்.எனக்கு தல சுத்துது ஒரு சோடா குடுன்கப்பு!!

சரணடைந்த ஜான் டேவிட்டு: வேலை கொடுத்த கேணை மென்பொருள் நிறுவனம்

எனது பள்ளி நாட்களில் முதன் முதலில் நூலகம் கொண்டு வரப்பட்டது.(1996 இல்).அதே ஆண்டு நவம்பர் மாதம் முதல் எல்லா பத்திரிகைகளிலும் பல மாதங்களுக்கு முதல் பக்கத்தில் தொடங்கிய பத்தி கடைசி பக்க மூலைக்கு செல்லும் வரையில் விடாமல் படித்தேன்.என்னவா?அதான் நாவரசு கொலை வழக்கு.செருப்பை நக்க சொல்லி ரேகிங் செய்த ஜான் டேவிட்டு நாவரசை கொலை செய்தது எல்லாம் அறிந்தது.அவன் முகம் என் மனதில் ஆழ பதிந்தது.
          ஆனா இவனோட மொகத்த கூட தெரியாம 30 ,000 ரூபாய் சம்பளத்தில் Sutherland Global என்ற பீ பீ ஒ நிறுவனம் வேலை கொடுத்ததாம்.அடப்பாவிகளா.இவன் மூஞ்ச கூட ஒங்களுக்கு தெரியாதா?அது சரி நீங்க(அதான் கார்பபரேட்டு) சொரண்டுவது சாரி வேலை செய்வது நாட்டுக்ககுன்னு  சிலர் இன்னும்  தப்பா நெனச்சிகிட்டிருக்காங்க.நீங்க இருப்பதே நாட்ட சொரண்டி கொல்லையடிப்பாதுதானே.யோக்கியமா எவனாவது இண்டர்வீவ் போனா "இன்னிக்கி சொல்றோம் நல்லா மறுனா சொல்றோம் 3011 ஆம் ஆண்டில் முடிவ சொல்றோம்" னு திறமையான ஆட்களை தொரத்தி அடிப்பது எதுக்குன்னு இப்ப வெளங்குது.கொலைகாரன் ரேப்பு பண்ணவன் கொள்ளைகாரன்(கார்பரேட்டுகளின் அப்பட்டமான பெயரே அதுதானே) என கேப்மாரிகளுக்கு வேலை கொடுக்கும் டுபாக்கூர் நிறுவனம்தான நீங்கல்லாம்?இந்த லட்சணத்துல நாலு சாப்ட்வேர் கம்பனிய காட்டி "இந்தியா வல்லரசு" ன்னு சொல்ற டுபாக்கூர் காங்கரஸ் கட்சிய என்ன செய்வதுன்னே தெரியல!
            ஏதோ ஜான் டேவிட்டே சரணடைஞ்சிட்டான்.இல்லன்னா ஆஸ்த்ரேலியாவில் பாதிரியாரா இருந்தான்னு சொல்றதுக்கு நித்தியானந்தன்,சங்கராச்சாரி  போல கண்டுக்காம  உட்ருபாங்க(சாமியார் கொலை பண்ணுறது இந்திய சட்டப்படி தப்பில்லை.என்னத்த சொல்ல!!).நீயே வந்து சிக்கிட்டியே ராசா!!

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

குரூரமான நகைச்சுவை

எப்போதாவது இந்தியா வந்து செல்லும் இந்திய பிரதமர்(!!?) மன்மோகன் சிங் "இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளது." என கூறியுள்ளது குரூரமான நகச்சுவையன்றி வேறு எப்படி விளக்குவதென எனக்கு தெரியவில்லை.ஏற்கெனவே 27   ஆண்டுகள் ஆகியும் இன்னும் போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட சந்ததி வழியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும்  மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கப்படாததும், இந்த கொடுமைக்கு காரணமான வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட கேடிகள் தண்டிக்கபடாததுமே பல்லிளித்து கொண்டிருக்கும்போது இப்படி ஒரு அறிக்கையை மன்மோகன் சிங் விட்டிருப்பது சேடிசம் கலந்த குரூர நகைச்சுவை.
             அய்யா ஓங்க குடும்பமே அமெரிக்காவுல இருக்குன்னு எங்களுக்கு தெரியும்.ஏதாவது அணு விபத்து ஏற்பட்டால் நீங்க "வழக்கம் போல" விமானம் ஏறிடுவீங்கன்னும் தெரியும்.அதனால கொஞ்சம் சாத்துங்க.

திங்கள், 18 ஏப்ரல், 2011

உலக மகா நடிகன்

எனக்கு ஒரு டவுட்டு: சாயங்காலம் போலீசு வெளியில உடமாட்டாங்கன்னு வைங்க  அப்போ நீங்க இப்படி கைது ஆவீங்களா  ?
ஊற ஏமாத்த இப்படி ஒரு இழிவான வழி தேவையா?இலங்கைக்கு ஆயுதம் தந்ததே நீங்கதான்.அப்புறம் இந்திய கடற்படை ஹோவேர்க்ராப்ட் அது இதுன்னு சீனு போடறாங்க.எங்கேயோ இருக்குற சோமாலியா கடற்கொள்ளையர்களை புடிக்கிறாங்க ஆனா தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து   கொல்ற சிங்கள இன வெறி கடற்படைய ஒங்களால தடுக்க முடியல?இத கண்டிச்சு  நீங்க ஆர்பாட்டம் பண்ணா நம்புறவன் கேனையனா?இப்படிதான் கொஞ்ச மாசம் முன்னாடி கனிமொழி கைது நாடகம் ஆடுனாங்க.அது டி ஆர் பாலுவுக்கு சொந்தமான Trawler என்று சொல்லபடுகிற கடலின் ஆழம் வரை சொரண்டி மீன்பிடிக்கும் படகில் சென்ற அவரது அடிப்பொடிகளை விடுவிக்க கோரி ஆர்பாட்டம் நடத்துனதும் தெரியும்.ஊர ஏமாத்த ஒரு அளவுண்டு .உலகம் சுற்றும் முதியவர்!!! ;)

வியாழன், 14 ஏப்ரல், 2011

ஒரு சின்ன தெளிவுபடுத்துதல்

அசாம் சட்டபேரவைக்கு  நடந்த தேர்தலில் வாக்களிக்காத அவ்வப்போது இந்தியா வந்து செல்லும் வெளிநாட்டு பயணத்திலேயே பாதி பதவிக்காலத்தை கழித்த மன்மோகன் சிங்(திஸ்பூர் தொகுதியில் அவுரு பேரு இருக்காம்) வாக்களிக்காததை கண்டித்து எதிர்கட்சிகள் உட்பட பலர் வீணாக நரம்பு புடைக்க கத்துவது ஏன் என எனக்கு விளங்கவில்லை .மன்மோகன் சிங் இந்தியாவின் குடிமகனா?இதுக்கு மொதல்ல யாரவது பதில் சொல்லுங்க!அமெரிக்க தேர்தல்னா ஆர்வத்தோட வாக்களிப்பார் அமெரிக்க கைப்பாவை.இது இந்திய மாநில தேர்தல்தானே.அடுத்த நாள் வெளிநாட்டு  (சீன) சுற்றுபயணம்  என்றவுடன் முதல் ஆளாக விமானம் ஏறிய பெருமைக்குரிய  பிரதமர் மன்மோகன் சிங்!!!!!! என்னத்த சொல்ல!!!

வெள்ளி, 8 ஏப்ரல், 2011