புதன், 27 ஏப்ரல், 2011

என்டோசல்பான் மற்றும் பில விஷ பூச்சிகொல்லிகளை தடை செய்!

60-70 -களில்   பச்சை புரட்சி (Green Revolution ) என்ற பெயரில் விளைச்சலை அதிகபடுத்துறோம் பார் எனக்கூறி எம் எஸ் சுவாமிநாதன் உள்ளிட்ட அறிவுஜீவிகள்(அல்லது  அமெரிக்க  ஏஜண்டுகள்!!!) பூச்சிகொல்லி மருந்து மற்றும் செயற்கை உரங்களை பயன்படுத்தும் ஒரு கட்டாயத்திற்கு இந்திய விவசாயிகளை தள்ளினர்.இதனால் வந்த விளைவுகள் சொல்லி மாளாது.முன்பு அறுபது வயசில் வாக்கில்  வரும்  சக்கரை ரத்த கொதிப்பு போன்றவை இப்போது முப்பதுகளிளிருந்தே வருகிறது.(அதற்கு வேகமான வாழ்கை முறை சொல்லபட்டாலும் இது ஒரு முக்கிய காரணம்).இந்த பூச்சிகொல்லி மருந்து மற்றும் செயற்கை உரங்களை அறிமுகம் செய்ய அரசு சொன்ன காரணம் "இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்குநாள் பெருகி வருகிறது.அதற்கேற்ப உணவு உற்பத்தி இருக்க வேண்டும் ".இந்த ஒரு காரணத்தை சொல்லி அமெரிக்க மற்றும் பிற பன்னாட்டு உர மற்றும் பூச்சிகொல்லி மருந்து நிறுவனங்கள் பிழைக்க வழி செய்தனர்.
                இப்போது தொடர்ந்த பூச்சிகொல்லி மற்றும் ரசாயன உர பயன்பாட்டால் பல விளைநிலங்கள் மலடாகிவிட்டன.அந்த நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சாப்டுவேர் பூங்காக்கள் மற்றும் பிளாட்டு போட விவசாயிகளிடம் இருந்து தந்திரமாக பிடுங்கி அதிக விலை பார்க்கும் அமைச்சர்கள் ஒரு புறம்.மற்றொரு  புறம் விளைச்சல் சரிவர இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் அவல நிலை மறுபக்கம்.
                இன்னொரு புறம் இதை விட அசிங்கமாக பெற்ற தாயை கூட்டி கொடுப்பது போல மரபணு மாற்று விதிகளை விற்பனை செய்ய பன்னாட்டு பண முதலைகளுக்கு(முக்கியமாக அமெரிக்காவின் மான்சாண்டோ) உதவும் அரசுகள் விவசாயிகளை தாஜா செய்வது மறுபக்கம்.இந்த விதைகள் கேன்சர் மலட்டுத்தன்மை உள்ளிட்ட படு பயங்கர விளைவுகளை உண்பவருக்கு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதை ஒரு முறைதான் விதைக்க முடியும்.ஒரு கிலோ விதை பல  ஆயிரம் வரை செல்லும்.ஒரு முறை விளைச்சல் முடிந்தால் மீண்டும் விவசாயிகள் இந்த மான்சாண்டோ கம்பனியிடம்தான் கையேந்தவேண்டும்.
        ஏற்கெனவே  மரபணு மாற்ற பருத்தியை விளைவித்த விதார்பா விவசாயிகள் பின்னர் அந்த நிலம் மலடான அதிர்ச்சியிலும் மேலும் தங்கள் வாழ்வை தொடர வழியில்லாமலும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்(வேளாண் அமைச்சராக அப்போது இருந்த சரத் பவார் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது இன்னொரு வெக்ககேடு)
           இப்போது வெடித்திருக்கும் என்டோசல்பான்  பூச்சிகொல்லி விவகாரம்.கேரளா முதல்வர்  அச்சுதானந்தன் இதை மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென உண்ணாவிரதமிருக்கிறார்.
இந்த என்டோசுல்பான் பூச்சி கொல்லி குறித்து மேலும் அறிய கீழே உள்ள சுட்டிகளை சொடுக்கவும்:


http://www.nalanda.nitc.ac.in/environmental_study/Effect_of_endosulfan.pdf
http://endosulphanvictims.org/resources/ENDOSULFAN_FACTSHEET.pdf 
**
இதனால் பாதிக்கப்பட்ட சில அப்பாவிகளின் படங்கள் கீழே.


இத்தகைய கொடூர விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்டோசல்பான்  ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 63 நாடுகள் தடை செய்திருக்கின்றனர்(அது சரி ஊர் ஒலகத்துல தடை செய்யப்பட ` எல்லா விஷங்களும் இந்தியாவில் மட்டும் மத்திய அரசின் தயவோடு விற்பனை ஆகும்.அடிங்கோ!).இந்தியா மற்றும் சீனா மட்டுமே இதை இன்னமும் பயன்படுத்தி வருகிறது.அதுவும் இந்திய அரசின் Hindustan pesticides நிறுவனமே இதை உற்பத்தி செய்வது வெக்ககேடு!.இந்த நிலையில இந்தியா வல்லரசாம் .திருந்துங்கடா.
           நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள்  இயற்கை உரம் மற்றும் பூச்சி அழிப்பான் குறித்து எவ்வளவோ சொல்லி வருகின்றனர்.அதை அரசு கேட்டு உடனே செயல்படுத்த  வேண்டும்.மேலும் இந்த என்டோசுல்பானை தயாரித்தவர்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதை உடனே தடை செய்ய வேண்டும்.எப்போதாவது இந்தியா வந்து  செல்லும் பொம்மை பற்றி நான் பேச விரும்பவில்லை.இத்தாலிய ஏஜன்ட் பத்தியும் ஒன்னும் சொல்லவேண்டியதில்ல.இந்த  நிலையில் மேலே சொன்ன  நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?என்னத்த சொல்ல!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக