வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஒரு மோசமான முன்னுதாரணம்

இங்கு ஏற்கெனவே நான் 49 ஒ என்ற விருப்பத்தை பொத்தானாக ஓட்டுபதிவு எந்திரத்திலேயே வைக்காததால் வரும் விளைவுகள பற்றி சொல்லி முடிக்கவில்லை.தமிழ் நாடு முழுக்க கிட்டத்தட்ட 25 ,000 பேர் 49 ஒ பயன்படுத்தியுள்ளனர்.உளவுத்துறை இந்த 49 ஒ பயன்படுத்தியவர்கள நக்சலைட்டுகளா என விசாரணை செய்வதாக புகார் எழுத்துள்ளது.
         இதை தேர்தல் ஆணையம் முறையாக விசாரிக்க வேண்டும்.பிச்சைகாரன் சட்டைப்பையில் கூட கைவிட்டு சோதனை செய்த தேர்தல் ஆணையம்  இதை கண்டுக்காமல்  விடுவது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
         ஆளும்கட்சி மட்டுமல்ல எல்லா கட்சிகளும் இந்த 49 ஒ பயன்படுத்தியவர்கள மீது கடும் வெறுப்போடு இருப்பதை சொல்லி விளங்க வேண்டியதில்லை.இந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கடும் நெருக்கடி அவர்களுக்குதான்.அதனால் இப்போது க்யூ பிரிவு போலீசு  மூலம் நடக்கும் இத்தகைய சட்டவிரோத விசாரணை உடனே நிறுத்தப்பட வேண்டும்.இதனால் அரசு மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்தி அல்லது ஒரு மாயை என்னவெனில் "மவனே இனி எவனாவது 49 ஒ போட்டீங்கனா  அவுங்கள நக்சலைட்டுகள்னு உள்ள தள்ளிபுடுவேன்" ன்னு மிரட்டுவதுதான்.
        தான் யாருக்கு ஒட்டு போட்ட்ம்னு ரகசியம் காக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தால் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சோதனை சட்ட விரோதம் என்பதில் சந்தேகமில்லை.இதற்கு ஒரே தீர்வு ஒட்டு பதிவு எந்திரத்திலேயே தனி பொத்தானாக 49 ஒ இடம் பெற செய்ய வேண்டும்.இது குறித்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் இது பற்றி பேச வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நடுநிலைவாதிகள் தள்ளபட்டிருக்கிரன்றனர் என்பதே உண்மை.
        அப்புறம் 49 ஒ போட்டவர்கள் நக்சலைட்டுகள் என கூறுவது கேலிக்கூத்து.அவர்களின் முழக்கமே "ஒட்டு போடாதே புரட்சி செய்" என்பதுதான்.தேர்தலுக்கு முன்பு கூட   இதை தான் அவர்கள் துண்டு சீட்டு மூலமும்  போஸ்டர்கள் மூலமும் விளம்பரபடுத்தினர்.எங்குமே "49ஒ போடு" என்று அவர்கள சொல்லவில்லை.சொல்லவும் மாட்டார்கள் .ஏனெனில் அவர்களுக்கு இந்த இந்திய நாடாளுமன்ற அமைப்பிலேயே நம்பிக்கை  அற்றவர்கள்.எனவே இந்த மோசமான விசாரணையை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.அதோடு 49 ஒ குறித்த வழக்கு விசாரணையை தீவிரபடுத்தி அடுத்த நாடாளுமன்ற தேர்தல்(2014 க்கு முன்) முன்பாவது அதை ஒரு பொத்தானாக வாக்குபதிவு எந்திரத்தில் வைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக