ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

இத ஸ்டீபன் ஹாக்கிங்தான் விளக்கனும்!!!!

 ******************************************************************************
சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.

இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.
*************************************************************************

           "மந்திரவாதி" சாய்பாபா மரணத்தையொட்டி தினமலர் நாளேடு ஒரு பெட்டி செய்தி வெளியிட்டுள்ளது.மேலே படிக்கவும்!அடங்கப்பா எனக்கு தல சுத்துதுடா சாமி(தலைவர் கவுண்டமணி சொல்வதுபோல்!!) நானும் எவ்வளவோ கணக்கு இயற்பியல் படித்திருக்கேன்.ஆனா இப்படி ஒரு கணக்க யாரும் சொன்னாதில்ல.நீ என்ன பண்ற இத அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டிவெச்சிட்டு பக்கத்துலையே ஒக்காந்துக்க.பின்னாடி வர சந்ததிகள் இத படிச்சிட்டு தெளிவாகிடுவாங்க!!!
           இந்த கணக்க ஸ்டீபன் ஹாக்கின்க்தான் வெளக்கனும்.எனக்கு தல சுத்துது ஒரு சோடா குடுன்கப்பு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக