செவ்வாய், 23 டிசம்பர், 2008

பெண்களின் அவல நிலை

சுமார் 10 லட்சம் பெண்கள் விபச்சார விடுதிகளில் உள்ளனர்.
இதில் 80% பேர் வற்புறுத்தலாலும் மீதம் உள்ளவர்கள் குடும்ப சூழ்நிலையாலும் இத்தொழிலுக்கு வந்துள்ளனர்.
இந்த குடிகார அப்பன்களால் தான் பெரும்பாலும் பெண்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளே "செல்போன் அழகிகள் கைதுன்னு "பெண்களின் படத்தை மட்டும் போடுகிறார்கள்.
ஏன் அதில் ஈடுபட்ட ஆண் "த்யாகிகள்" என்ன ஆனார்.அவர்கள படங்களை ஏன் போடுவதில்லை.மேலும் அவர்கள் என்ன புறா மூலமாவா தூது விடுகின்றனர்?அவர்களும் செல்போன் வைத்துள்ளனர் அல்லவே?

செவ்வாய், 16 டிசம்பர், 2008

மேல் தட்டு மக்களின் "தேசபக்தி"


சமீபத்தில் நடந்த மும்பை சம்பவத்தை கண்டித்து நடந்த மக்களின் இரங்கல் மற்றும் கண்டிப்பு கூட்டத்திற்கு முதல் முறையாக மேல் தட்டு மக்கள் தங்கள் "ஸ்கோடா" காரில் வந்திறங்கினர்.
இவ்வளவு காலம் பங்களாவில் ஒளிந்து கொண்டு அமெரிக்க புராணம் பாடி கொண்டிருந்தவர்கள் திடீரென்று "பாரத் மாத கீ ஜே" என்று கோஷம் போட்டது வியப்பளிக்கிறது.இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல குண்டு வெடிப்புகள் நடந்த பொது வெளியே வராதவர்கள் இப்போது வந்த காரணம்?ஒன்றுமில்லை.தாக்கப்பட்ட இடம் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதாலேயே.இவர்கள் அடிக்கடி அங்கு சென்று வருவர் என்பதாலேயே தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இவர்கள் என்றாவது ஓட்டுச்சாவடி பக்கம் வந்ததுண்டா?கேட்டால் நான் ஒருவன் ஒட்டு போடாவிட்டால் என்ன ஆகிவிடும்?என்பர்.
மேலும் மத்திய அரசும் இவ்விஷயத்தில் தீவிரம் காட்ட காரணம் அவர்கள் குடும்பத்தினரும் அந்த ஓட்டல்களுக்கு செல்வோரே.முன்பு ரயிலில் குண்டு வெடித்த பொது வெறும் விசாரணை கமிஷன் என்ற நாடகத்தை அரங்கேற்றினர்.இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதால் இவ்வளவு தீவிரம்.ஏனென்றால் இவர்கள் குடும்பம் நாளை ஒரு வேலை ஓட்டலில் பலியாகி விட்டால்?