ஞாயிறு, 25 ஜனவரி, 2009

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம்
நீ எனை பார்த்தாய்
என் உயிர் உன் விழி எனும் கிணற்றுக்குள் விழுந்தது
காலடியில் வேர்கள் முளைக்கும் வரை காத்திருந்தேன்
நீ எனை கடந்து செல்லும் அந்த ஒரு நொடிக்காக
நீ என்னுடன் பேசிய அந்த ஒரு நிமிடம்
என் உயிர் உன் வார்த்தைகளில் கரைந்தது
உன் ஸ்பரிசம் எனை தீண்டிய
அந்த ஒரு நிமிடம்
நான் எனை தொலைத்தேன்
நீ என் உயிரின் கதறலை கேட்கவிருக்கும்
அந்த ஒரு நிமிடத்திற்காக காத்திருக்கிறேன்

சனி, 24 ஜனவரி, 2009

என் நெருங்கிய நண்பிக்கு by-pass சிகிச்சை

என் நெருங்கிய நண்பி உடல் நலமில்லாமல் மிகவும் அவதிப்பட்டாள் .அவள் தான் என் "கணினி".அவள் குடும்பத்தை எனக்கு 15 வருடங்களாக தெரியும்.windows 3.1 முதல் அவளை எனக்கு தெரியும்.அப்போது 13" கருப்பு வெள்ளை மாநிட்டர்கள்தான் .அப்போதே எனக்கு அவள் மீது காதல். பார்த்துகொண்டே இருப்பேன்.இப்போதும் அவளை பார்த்து கொண்டிருக்கிறேன்.ஆனால் சலிப்பு இல்லை.
சமீபத்தில் அவளுக்கு மிகவும் உடம்பு சரியில்லை.smps பிரச்னை அவளை பாடாய் படுத்தியது .அவள் கதறினாள் .என்னால் அதை பார்க்க முடியவில்லை.எனவே சர்வீஸ் செய்பவரிடம் அவளை நீங்களே எடுத்து சென்று குணப்படுத்தி வாருங்கள் என கூறி விட்டேன்(எப்போதும் நானே சரி செய்து விடுவேன்.இம்முறை மனம் சரியில்லை)இப்போது அவள் நலம்