ஞாயிறு, 25 ஜனவரி, 2009

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம்
நீ எனை பார்த்தாய்
என் உயிர் உன் விழி எனும் கிணற்றுக்குள் விழுந்தது
காலடியில் வேர்கள் முளைக்கும் வரை காத்திருந்தேன்
நீ எனை கடந்து செல்லும் அந்த ஒரு நொடிக்காக
நீ என்னுடன் பேசிய அந்த ஒரு நிமிடம்
என் உயிர் உன் வார்த்தைகளில் கரைந்தது
உன் ஸ்பரிசம் எனை தீண்டிய
அந்த ஒரு நிமிடம்
நான் எனை தொலைத்தேன்
நீ என் உயிரின் கதறலை கேட்கவிருக்கும்
அந்த ஒரு நிமிடத்திற்காக காத்திருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக