செவ்வாய், 28 ஜூன், 2011

நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோயிங்கா?

குலைன்ஜர் குடும்ப உரையாடல் கற்பனை.
**********************************************************************************
இடம்:குலைன்ஜர்  வீடு
கூஜாத்தி அம்மாள்: என்னங்க முறுக்கு,சீடை,சுழியம்  ,இட்லி,வடை எல்லாம் ரெடி.வாங்க தில்லிக்கி போய் மகள் பாத்துட்டு வரலாம்
குலைன்ஜர்  : (மைன்ட் வாய்சில்)மறுபடியுமா?.....ரெண்டு நாளைக்கு முன்னதானே போனோம் ..ம்ம் ம்ம் பாக்கலாம்.
கூ.அ: என்ன பாக்கலாம் இதே அவுக வீட்டு பிள்ளைங்கன்னா உடனே கிளம்பியிருப்பீங்க.
குலைன்ஜர்: (மைன்ட் வாய்ஸ்)என்ன பால் போட்டாலும் கோல் போட்டுடுராளே!! .....சரி வா
(திடீரென்று பிறை முருகன் ஓடி வருகிறார்)
பிறை: தலைவரே திஹார்னா உதடுகள் ஒட்டாது  புழல்னா  ஓட்டும்...
குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஐயோ இருக்குற இம்சைல இவன் வேற நேரம் காலம் தெரியாம....யோவ் இப்போ டில்லிக்கு கெளம்புறேன் நாளைக்கு வா.
(பயாநிதியின் பரிதாப என்ட்ரி)
பயாநிதி: தாத்தா தூங்குனாலே ஒரே திஹார் கனவா வருது..ஒரே டர்ரா இருக்கு..
(அப்போது பயாநிதி செல்போன் அலறுகிறது.தெரியாத நம்பர்)
கர கர குரலில் பழகிரி போனில்: என்ன தயா நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோயிங்கா?
பயா: யோவ் யாருய்யா அது வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறது?
(லைன் கட் செய்யப்படுகிறது)
குலைன்ஜர்: என்ன பா நீயும் வாயேன் டில்லிக்கு நான் போறேன்.
பயா: எப்படியும் அங்கதானே போக போறேன்.அப்புறம் பாக்கலாம்
கூலின் என்ட்ரி
குலைன்ஜர்: குளபதி டில்லி போறேன் நீயும் வா
கூலின்: சரி தலிவரே.
********************************************************************************
திஹார் சிறை
பாசமலர் பாடல் பேக்க்ரவுண்டில் ஒலிக்கிறது.கூலின் குனிமொழி சந்திப்பு
குனிமொழி: அண்ணா ஆஆ  ஆஅ ஆஅ ஆ
கூலின்: (மைன்ட் வாய்ஸ்)நம்ம குலைன்ஜர் டிவி சீரியல் மாதிரி   இருக்கு.எதுக்கும் நாமும் அழுது வைப்போம்.....ஆ ஆ
கூதித்யா: அம்மா நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?
கூலின்:ஆமா இது வேறயா?பயபுள்ள கோத்து விடுது பாரு
குனி: கண்ணீருடன் தெரியலையேப்பா!!
கூலின்: மைன்ட் வாய்ஸ் (200 கோடி மட்டும் தெரிஞ்சிதோ?)
குலைன்ஜர்: கூம்ஜெத் மலானி பிச்சுவா பக்கிரிக்கு ஆஜராகுரராம்.அதனால் பிபில் சிபலை ட்ரை பண்ணேன்.போனியே எடுக்க மாற்றார்.
கூலின்:(மைன்ட் வாய்ஸ்) எப்படி எடுப்பார்?பங்கு கிடைக்கலைன்குற கோபமா இருக்கும்.
கூசா: தலைவா ஆரிய திராவிட யுத்தத்துல நாம்தான் ஜெயிப்போம்.
குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா நானே ஏதோ ஒட்டு வாங்க இந்த ரீல்தான் அம்பது வருஷமா  ஓட்டிகினு இருக்கேன்.
கூலின்: ரீல் அந்து போச்சுடா சாமி!!!
குலைன்ஜர்:(கண்டிப்புடன்)என்ன சாமி?ஏது சாமி?
கூலின்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒட்டு வாங்கும்போது எடுக்குற ஆரத்திய ஏன் ஏத்துகுரீங்களோ !
கூஜாத்தி: என்ன பண்ணுவீங்களோ தெரியாது எம்மக வெளிய வரணும்.இந்தாம்மா முறுக்கு.
கூலின்: பேசாம நீங்க ரெண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்து  இலங்கைல போர   நிறுத்திய மாதிரி இப்பவும் செய்யலாமே?
குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா இவன் நம்மள   ஒரேடியா முடிக்க வழி சொல்லுறான்.பீ கேர்புல்..நான் என்ன சொன்னேன்.
ஜெயிலர்: ம்ம்..ம்ம் நேரம் முடிஞ்சிது.கெளம்புங்க.
***********************
 குலைன்ஜர் பக்கீரன்  போபாலை செல்லில் அழைக்கிறார்.
(காலர் ட்யூனாக  2011 நம்ம கையில சந்திப்போன்டா  தோழா நாம் சட்டசபையில பாடுகிறது)
குலைன்ஜர்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்களே!!
பக்கீரன்  போபால்: தலைவரே சொல்லுங்க என்ன செய்யணும்
குலைஞ்ச்ர்: இந்த திஹார் சந்திப்பை குலைன்ஜர் டிவி சீரியல் ரேஞ்சுக்கு கண்ணீரோடு விளக்கி ஒரு தலையங்கம் போடு.உடனே பக்கீரன் இதழ் வரணும்.என்ன?
போபால்: நீங்க சொன்னா மறுபேச்சு  ஏது தலைவா!!செஞ்சிடுறேன்.சாமியார் பித்யானந்தா விவகாரம் போல சூம் கவரேஜ் பண்ணிடுறேன்  .
*****************************************************************************
மீண்டும் குலைன்ஜர் வீடு
கூலினிடம் வேலையாள்:பைதை குரைசாமி ஓங்க வெற்றி செல்லாதுன்னு வழக்கு போட்ருகாராம் .
கூலின்:ஐயோ..முதல்வர் பதவிதான் பழகிரியால்  கானல் நீரானது.எம் எல் ஏ பதவியும் காலியாகப்போகுதா?என்ன கொடுமை சார்!!


ஞாயிறு, 26 ஜூன், 2011

ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது?!!!?!; அன்புமணியின் அந்தர்பல்டி

 அம்பேத்கர் சுடர் விருது இந்தாண்டு  ராமதாசுக்கு அளிக்கப்படுமென திருமாவளவன் அறிவித்துள்ளார்.என்ன கொடுமை இது?1987 இல் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு மரம்வெட்டி போராடிய ராமதாசுக்கா?இல்லை அதே போராட்டத்தில் தலித் மக்களின் குடிசைகளை தீவைத்து கொளுத்தியதற்கா?இல்லை இன்னும் பல இடங்களில் இவரது சாதியினர் தலித்துகளை அடித்து துன்புறுத்தி சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கி கொண்டிருப்பதற்கு அம்பேத்கர் விருதா?இரண்டு தலிவர்களான ராமதாசு மற்றும் திருமா ரெண்டு பேர் மட்டும் கட்டிக்குவாங்க.ஆனா தொண்டர்கள்?என்றுமே ஒற்றுமையாக இருந்ததில்லை.தலித் மக்களை அடிப்பது தீண்டாமை கொடுமை செய்வது குடிசைக்கு தீவைப்பது என மருத்துவர் அய்யா மொதல்ல ஓங்க கட்சியினருக்கு தீண்டாமை கொடுமை செய்யக்கூடாதுன்னு என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?இல்லையே!!தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு என்ற கேடயதிற்குள் நீங்க ரெண்டு பெரும் அடிக்கடி கூடிக்கிறீங்க ஆனால் ஓங்க தொண்டர்கள்?இன்னும் தீண்டாமையை,ஆதிக்க மனப்பான்மையை  விடவில்லையே!!தொண்டர்களாக தாங்கள் தலைவர்களால் அவர்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிரோம்னு அவர்களே உணர்ந்தாலே ஒழிய இந்த கொடுமைக்கு தீரவில்லை!
********************************************
இது தவிர இவுரு மகன் அன்புமணி(அதான் புகையிலை எதிர்ப்பு செய்தாலும் தான் சுகாதார அமைச்சராக இருந்தப்போ சிகரெட்டு தொழிற்சாலையை மூடி அதன் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாதவர்.கொல்லைபுறம் வழியே அமைச்சர் ஆனவர்) இப்போது தோல்விக்கான காரணத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டாராம்.அது திமுக எதிர்ப்பு அலையாம்.மேலும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளனவாம்! அப்போ இத்தனை பிரச்சனைக்கும் காரணமான திமுகவுடன் ஏன் கூட்டு வைத்தீர்கள்?வெளிப்படையா சொன்னா ஒங்களுக்கு ராஜசபா எம்பி பதவி தர அதிமுக மறுத்ததால்தானே மக்களை பல பிரச்சனைகளில்(உங்கள் கூற்றுப்படி.அது உண்மையும் கூட) வாடவிட்ட உங்களுக்கு எம்பி பதவி தர ஒப்புக்கொண்ட  திமுகவுடன் கூட்டு வைத்தீர்கள்.அப்போ மக்கள் நலன் உங்களுக்கு முக்கியம் இல்லை உங்கள் பதவி குடும்ப நலன்தான் முக்கியம்!ஒத்துக்குங்க.அப்போ நீங்க தேர்தல் பிரசாரத்தில் திமுக அமோக ஆட்சி செய்ததுன்னு ரீல் விட்டதெல்லாம் உங்கள் பதவிக்காகதானே?
     இப்போ கனிமொழிக்கான ராஜசபா எம்பி பதவிக்கே இருக்குற சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து வெற்றி பெற சிரமமாகிவிட்ட நிலையில் இருக்கிறது திமுக.அதனால் 2012 இல் ராஜசபா எம்பி பதவி அன்புமணிக்கு எட்டாகனியாகிவிட்ட நிலையில்தான் அந்த ஆதங்கத்தில்தான் இப்படி கூவுறார்.இவர்களின் நிஜ நிறத்தை மக்கள் இப்போது தெளிவாக பார்க்கலாம்!!

சனி, 25 ஜூன், 2011

புத்தகப்பரிந்துரை

அமெரிக்கா என்னும் தேசம் உருவாக்கி 250 ஆண்டுகள் ஏறக்குறைய ஆகியிருக்கலாம்.ஆனால் அந்த தேசம் விழுகிய இயற்கை வளங்கள்,எரிபொருட்கள், சுரண்டிய தேசங்கள்,கண்டங்கள் என இதன் "சிறப்பு" பட்டியல் நீளுகிறது.இதை பற்றிய விவரங்கள் மேலும் அறிய ஏதேனும் புத்தகம் உதவும்.இடதுசாரி எழுத்தாளர்களின் புத்தகமெனில் "ஆமா!இவுகளுக்கு வேறன்ன வேலை " என சட்டென முடிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இந்த அமெரிக்க பகாசுரன்களை பற்றி எழுதிய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அமெரிக்க நிறுவனத்தில் பொருளாதார அடியாளாக பணியாற்றிய ஒருவர் சொன்னால்?அதான் இந்த இரண்டு புத்தகங்களான "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" மற்றும் "அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு" சொல்கிறது.எழுதியவர் மெய்ன் என்னும் பொருளாதார அடியாட்களை பயன்படுத்தி மிகைப்படுத்திய பொருளாதார மதிப்பெடுகளை அளித்து மூன்றாம் நாடுகளை சுரண்டுவதுதான் வேலை.
  இதில் வேலை பார்த்த ஜான் பெர்கின்ஸ் மனசாட்சி உறுத்தலால் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலபடுத்தியிருக்கிறார்.அமெரிக்காவின் பகாசுரன்களை தெரிந்து கொள்ள தவறாமல் படிக்கவும்.முதலில் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் அதன் பின் அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு வெளியானது.அந்த வரிசையிலேயே படிப்பது நல்லது.இந்த புத்தகங்களை வாங்க கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கவும்
http://www.udumalai.com/?prd=&page=products&id=4809

http://www.udumalai.com/index.php?prd=&page=products&id=6767

மாட்டிகொண்ட எழுத்தாளர்

(ஆல் இன் ஆல்  நாத்திக கட்டுரைகளில் போலி சாமியார் முதல் போப்பாண்டவர் வரை பெண்டு கழட்டுவார்)
வினவின் கட்டுரை   (என்னதான் இலங்கை தமிழர் உள்ளிட்ட விவகாரங்களில்  வினவுடன் நான் வேறுபட்டாலும் இந்த விஷயத்தில் வினவின் கருத்தை மனதில் சிறிதளவு ஈரமுள்ள எவரும் ஏற்றுகொள்வர்.)
         இவுரு எழுதுன "*"ரோ டிகிரி என்ற நாவலை(இது நாவலா?எனக்கு தெரியிலீங்க) முதல் பக்கமே இவர் கொடுத்திருக்கும் முன்னுரை குமட்டி வாந்தி வர செய்யும் தன்மை கொண்டது.அதுக்கு மேல படிக்க எனக்கு வயித்துல திராணி இல்லை!!(ஆமா எத்தன தபா வாந்தி எடுக்க?).
        குருதிப்புனல் பட விமர்சனத்தில் இவுரோட மாவோயிச சிந்தனை தெறிக்குது.ஆனா இப்போ?மோடியை ஆதரிக்கும் சோவின் பத்திரிக்கையான துக்ளக்கில் எழுதுறார்!!என்னே முரண்பாடு?
              ஒரு பெண்ணிடம்  இவர் பேசிய பேச்சு மேலே குடுத்த இணைப்புகளில் உள்ளது.என்னத்த சொல்ல?சிலர் அந்த பெண்ணே வரிந்து வந்து பேசினார் என சொல்கின்றனர்  .சரி அந்த பெண்ணின் வயதென்ன இவரின் வயதென்ன?
              இது தன்னுடைய உரையாடல் இல்லையென மறுக்கலாம்.ஆனால் இவரின் தளத்தை படித்தாலே எத்தனை கெட்ட வார்த்தை உள்ளது எப்படியெல்லாம் ஆபாசமாக எழுதியுள்ளார் என்பது விளங்கும்.அதையும் நம்பவில்லை எனில் அவரின் நாவல்களை படிக்கவும்.(வாந்தி வந்தா நான் பொறுப்பில்லை!!)
      நித்யானந்தா படத்தை பெருசா போட்டு அவரின் ஜகஜால யோகபயிற்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை நாசூக்காக தன் தளம் மூலமாக செய்து வந்தவர் நித்தி மாட்டியவுடன் அவரின் படத்தை எடுத்துவிட்டு தன க்லோசப்பை போட்டுகொண்டார்.(ஆமா இவுரு தளம் ரொம்ப நாளா beta வாகவே இருக்கே.அடுத்து என்ன   Release candidate ஆ?நமக்கு தெரியல.அப்புறம்அந்த சாமியார் பற்றி புலனாய்வு ஏட்டில் வாரா வாரம் கட்டுரை எழுதி காசு பார்த்ததோடு மட்டுமலாம அதை புத்தகமா வேறு வெளியிட்டார்.
      சாய் பாபா படத்தில் கொட்டிய விபூதி,சாமியடி சித்தரின் சமாதி, தர்காவில் குறி சொன்ன முதியவர் என இவரின் அலப்பல்கள் கொஞ்சநஞ்சமில்லை.
          மல்லுகட்டும் நோக்கிலோ அல்லது வேண்டுமென்றே சேறுவாரி  இறைக்க வேண்டுமென்றோ  நான் இதை எழுதவில்லை.சொல்ல நினைத்ததை சொல்பவன் நான்.அம்புட்டுதேன்


 

புதன், 22 ஜூன், 2011

கேட்க கூடாத கேள்விகள்

கருணாநிதியிடம்: 1 .ஒரு சில பார்ப்பன ஊடகங்களால்தான் நீங்க தோற்கடிக்கப்பட்டதா சொல்றீங்க.ஒரு சில பார்ப்பனர்கள் சொல்வதை கேக்கும் அளவுக்கா   திராவிடர்கள்(உங்கள் மொழியில்) இருக்கிறார்கள்?அப்போ அறுபது வருட திராவிட இயக்கம் கிழித்தது என்ன?
,
2 .உங்கள் பெண்ணை விடுவிக்க எதுக்கு டில்லி போகணும்?உங்களோட "சர்வரோக நிவாரணி" அதான் அண்ணா சமாதி முன் இரண்டு மணி நேர உண்ணாநிலை இருக்கலாமே!!அதன் மூலம் நீங்க போரையே நிறுத்திய சாதனையாளர் அல்லவே!!
*
ஜெயலலிதாவிடம்:சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில் பகல் கொள்ளையர்களையும் தமிழே தெரியாதவர்களையும் நியமித்ததன் நோக்கமென்ன?
*
ராமதாசிடம்:சமச்சீர் கல்வி பாமாக ஆட்சி வந்தாதான் கொண்டு வரப்ப்படும்னு சொல்றீங்க.சரி.ஓங்க பேரப்பசங்க டில்லியில் தமிழை ஒரு பாடமாக கூட கொண்டிராத பள்ளியில் படிக்கிரான்களே.அதை பத்தி?
*
சிபிஐ யிடம்: 1 :சாதிக்  பாட்சா பிரேத பரிசோதனை அறிக்கையை ஏன் வெளிய விடவில்லை?
2 .கனிமொழி டாடா மற்றும் நீரா ராடியாவுடன் பேசிய பேரத்தை ஏன் நீங்கள் அவருக்கெதிரான வழக்கில் சேர்க்கவில்லை?
*
தனுசிடம்: எதுக்கு ஒனக்கு தேசிய விருதுன்னு இப்போவாவது காரணம் தெரிந்ததா?ஏன்னா எங்களுக்கும் தெரியலை.அதான்
*
அழகிரியிடம்: காங்கிரசுடன் உறவு முரியாதமைக்கு உங்களுக்கு  "புழல் பயம்" இருப்பதுதான் காரணம்னு சொல்லப்படுது.அதை பற்றி?
*
ஸ்டாலினிடம்: சிவகங்கை பார்முலா படி ஜெயிச்சதா சொல்றாங்களே.அது பற்றி:
*
திக்விஜய் சிங் : நீங்க இன்னும் "பழைய நெனப்புடா  பேராண்டி" கணக்கா மத்திய பிரதேச முதல்வர் கனவிலேயே வாய்க்கு வந்த படி அள்ளி தெளிப்பதாக சொல்லப்படுவது பற்றி?
*
ராகுல் காந்தி: போஸ்கோ ஆலையை எதிர்த்து நீங்களும் சீன் போட்டீங்க.ஆனா இப்போ மீண்டும் பழங்குடி நிலங்கள் பிடுங்கப்பட்டு தொழிற்சாலை ஆரம்பிக்கபோறான்களே!!அப்போ ஓங்க போராட்டம் நாடகம்னு ஒப்புகிரீங்களா?
*
தயாநிதி மாறன்: நீங்க கனிமொழியை சிறையில் சந்திக்கவில்லை.ஏன் எப்படியும் கூடிய சீக்கிரம் அங்க போகத்தானே போறோம்குறதனாலையா  ?

மன்மோகன் சிங்கின் உலக சாதனைசராசரியாக பதினோரு நாட்களுக்கொரு முறை வெளிநாட்டு பயணம்(ஏன் எதுக்குநெல்லாம் கேக்ககூடாது!!) செய்து உலக சாதனை செய்துள்ளார் அமெரிக்காவின்  தீவிர விசுவாசி உலக வங்கியிடம் இன்னும் பென்சன் வாங்கும் மன்மோகன்  சிங் .இதற்கு பாராட்டு விழா நடத்தாத காங்கிரசை கண்டிக்கிறேன்.ஒலக நாயகனுக்கு ஒன்பது வேடங்கள் போட்டு நேரு ஸ்டேடியத்தில் ஒரு விழா எடுங்க....வெளங்கிடும்!!யார் வீட்டு காசு?இவுரு எதுக்கு வெளிநாடு போறாரு இதெல்லாம் கேக்க  கூடாத கேள்விகள்.

திங்கள், 20 ஜூன், 2011

ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவு ;வினவின் மட்டரகமான கட்டுரை

******************************************
        இந்த ஒலக நாயகனோ உள்ளூர் நாயகனோ அதான் கமலஹாசன் குணா படத்தில் சொல்வார்."நடு  நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம்  போட்டுக்கணும்" அதாவது பாடல் எழுதுபவர்களை கிண்டல் அடித்திருப்பார்.
அது போல வினவின் கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறுவது:"பார்ப்பன,பாசிச,கோயபல்ஸ்,காவி கும்பல்,கார்பரேட்டு,போலீசு இதெல்லாம் தவறாமல் இடம்பெறும்.
       இப்போ எதுக்கு இதை சொல்லுகிரேனேன்றால் வினவு இப்போது இலங்கை தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சேனல் 4 வீடியோ பற்றி ஒரு கட்டுரை என்ற  பெயரில் ராஜபக்சே தவிர அவரை எதிர்ப்பவர்கள் எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறது.
       தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தனி தீர்மானங்களான இலங்கை மீது பொருளாதார தடை மற்றும் கட்ச்சதீவு மீட்பு இரண்டுமே ஏமாற்று வேலையாம்.இந்த வீடியோவை வெளியிட்ட இங்கிலாந்தும் நம்பத்தகுந்தது இல்லையாம்.சரிங்க்ணா யாரை நமப் நீங்க சொல்லுங்க?!!
          கொத்து குண்டுகளை இலங்கைக்கு சப்ளை செய்த ரசியாவை நம்பனுமா?எயிட்ஸ் நோய் கொண்ட சீன கைதிகளால் தமிழச்சிகள் புனரப்படுகின்றனர்.அந்த சீனாவை நமப்னுமா?இல்லை கம்யூனிச நாடுன்னு சொல்லப்படும் இலங்கைக்கு ஆதரவு என அறிவித்த க்யூபா உடனா?யாரை நம்பனும் நீங்க சொல்லுங்க?
           இப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இலங்கை போர் குற்றங்கள் பத்தி விவாதிக்கப்பட்டது.ஆனால் வினவு சொல்வதென்ன?மேற்குலக நாடுகளை நம்ப வேண்டாம் அவர்கள் ஏமாற்றுவார்கள்.சரி கிழக்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எதனா உதவிக்கு வருதா சொல்லுங்க?இல்லை ஒங்களுக்கு ஏதாவது நாட்டை அப்படி தெரியுமா?
     கட்டுரையில் வசதியாக இலங்கை போரிலும் சரி அதற்கு பின்பும் சரி ரசியா சீனாவின் பங்கை மறைக்கிறது வினவு .இலங்கைக்கு ஆதரவளித்த க்யூபாவையும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.ஏதாவது நல்லது நடக்காதான்னு அத்தனை ஈழ தமிழர்களும் இங்குள்ள இன மானமுள்ள தமிழர்களும் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கையில் "அவனை நம்பாத அவன் லொட்டு! இவன நம்பாத இவன் லொசுக்கு"ன்னு திண்ணையில் பாக்கு இடித்துக்கொண்டே தெருவில் போகிற வருபவர்களை திட்டிகொண்டிருக்கும் கிழவி போல வினவு ஆனது  கொடுமையிலும் கொடுமை.அப்போ யார்தான் நல்லவங்க நீங்களே சொல்லுங்க!
          இரண்டு உதாரணங்கள்:நீச்சல் தெரியாத ஒருவன் காட்டாற்றில் மூழ்கி கொண்டிருக்கிறான்.கடைசி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு உதவிக்கு கையை மேலே தூக்கி ஆட்டிகொண்டிருக்கிறான்  .அப்போது யாரோ ஒருவர் அந்த பக்கம் வந்த இவனுக்கு கை கொடுக்கிறார் அவனும் மேலே வருகிறார்ன்.கைகொடுத்தவன் ஏதோ ஒரு வகையில் தீயவன் என்பதால் சீ வேணாம் போ நான் மூழ்கிடுரேன்னா சொல்லுவான் அந்த சாககிடப்பவன் ?அப்படி இருக்குது வினவு சொல்வது.அதாவது மூழ்குபவன் தன்னை காப்பாற்ற நீளும் கைக்குரிய அந்த நபரின் கிரிமினல் ரெகார்டை  சாவகாசமா ஆராய்ஞ்சி அதன் படி இவனால் காப்பாற்ற படுவதா வேண்டாமான்னு முடிவு செய்யணுமாம்,.அது சரி ஒரேடியா சுடுக்காட்டுலதான் அப்படி முடிவு செய்ய முடியும்.
            இன்னொன்று: ஒருவன் வண்டியோ காரோ சைக்கிளோ ஒட்டிக்கொண்டு போகிறான்.இடது பக்கம் திரும்ப தனது இடது கையை நீட்டி சைகை செய்கிறான்.இது வினவின் பார்வையில் எப்படி இருக்கும் தெரியுமா?அவன் சைகை செய்தது யாரவது அவனை மோதிவிட்டால் "யோவ் நாந்தான் கை காட்டுநேனுல்ல நீ என்ன குருடா"அப்படின்னு கேக்கதான் அவன் கை காடுறான்னு சொல்வது போல.
         ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டு வந்தா அதை எதிர்த்து வீடோ அதிகாரத்தை பயன்படுத்துவோம்னு மிரட்டுகிறது ரசியா மற்றும் சீனா.இந்தியா பற்றி சொல்லவே தேவையில்லை.அதுவும் போற்குற்றத்தில் பங்காளி என்பதால் வழக்கம் போல தீர்மானத்தை எதிர்த்துதான் ஓட்டளிக்கும்.ஆக கிழக்கு அல்லது மூன்றாம் நாடுகளில் இலங்கையை எதிர்ப்பவர் யார்?வினவு சொல்லுமா?இவுகளுக்கு தெரிந்ததெல்லாம் கார்பரேட்டு அமெரிக்கா பார்ப்பன,காவி கும்பல்.இலங்கை தமிழர்கள் சாகலாம்.ஆனால் மேற்குலக நாட்டின் உதவியை மட்டும் பெறக்கூடாதாம் .சே!!எத்தகைய கொடூர சேடிச மனப்பான்மை!இலங்கை இனவொழிப்பு மே 2009 இல் முடிந்ததும் வினவு&கோ ஒரு கட்டுரை எழுதியது."நாம் அப்பவே சொன்னோம் இதெல்லாம் சரிப்படாது......." என்று சேடிசத்தின் உச்சத்தை அந்த கட்டுரையில் காண முடிந்தது.அதன் பின் இந்த கட்டுரை.காரி  உமிழ தோன்றுகிறது.
   ஒங்கள  யாரும் "தமிழர்களுக்காக போராடு!கட்டுரை  எழுதுன்னு கேக்கவில்லை"அதனால் இது போன்ற அபத்தத்தை  நிறுத்திக்கொள்ளவும். இல்லை முடியாதுன்னா  ராஜபக்சேவின் அடிப்பொடி கூட்டத்தில் சேர்ந்துடுங்க இங்க நாங்க நிம்மதியா இருப்போம்.

   

ஞாயிறு, 19 ஜூன், 2011

மானம்கெட்ட தமிழ் ஊடகங்கள்; சேனல் 4 இன் தைரியம்


 (எச்சரிக்கை :இதை 18 வயதுக்குட்பட்டவர்கள் இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)
இதை தைரியமாக வெளியிட்ட சேனல் 4 இக்கு நன்றி.அது மட்டுமலாமல் இதை பற்றி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அதற்கு டேவிட் கேமரோன் பதிலளித்துள்ளார்.ஆனால் இந்திய +தமிழ் ஊடகங்கள் இதை பற்றி ஒரு **** இம் கண்டுகொள்ளவில்லை.ஆமா நித்யானந்தாவின் சரச லீலையை ஆயிரம் முறையாவது காட்டிய அந்த பன் டிவி இப்போது எங்கே?கொரங்காட கூத்தாட காட்டத்தான் குலைன்ஜர் டிவிக்கு இந்த  கொடூரமான போற்குற்றத்தை பற்றி பேச  ஏது  நேரம்??எல்லாம் மானம்கெட்ட தமிழ் மக்களை சொல்லணும்.
இதை பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் பேசுவார்களா?தமிழின துரோகிகள் உள்ளவரை அது நடக்காது.

சனி, 18 ஜூன், 2011

சாய் பாபாவின் தனியறையில் வழியும் தங்கம்,வைரம் குவியல்!!!


சாய் பாபா மண்டையை போட்டபின் அவரது தனியரையான் யஜூர்வேத மந்திர் திறக்கப்பட்டது.அதில் 12 கோடி ரூபாயும், 82 + கிலோ தங்கமும் இன்னும் வைரம் நகைகள் என ஒரு கருவூலமே கண்டெடுக்கப்பட்டு வங்கியில் போடப்பட்டதாம்.எப்படி இம்புட்டு காசு வைரம் தங்கம்?செக்கிழுத்தியா?கொளுத்து வேலை செய்தாரா?கல்லுடைத்தாரா?ஒண்ணுமில்ல.வாய்ல லிங்கத்த போட்டுகினு மக்கள் முன்னாடி வாந்தியெடுத்து அதை மீண்டும் வெளியே வரவைத்து விரலிடுக்கில் விபூதி வரவைப்பது கையிலிருந்து  செயின் வரவைப்பது(இந்த செயின் மோதிரமேல்லாம் வி ஐ பி க்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும்.சாதாரண மக்களுக்கு விபூதிதான்!!ஏன் எல்லோருக்கு செயின் மோதிரம் கூத்தா வறுமை ஒழிந்திருக்குமே!!இத எவனாவது கேட்டீங்களா?கேக்க  மாட்டாங்க கேக்காம மண்டையை ஆட்டும் மக்கள் இருக்கும் வரை சாய்பாபா நித்யானந்தா பிரேமானந்தா  ராம்தேவ் போன்ற மக்கள் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.திருந்துக மக்களே கும்புடணுமா?அதான் ஆயிரம் கோவில் இருக்கே!!சாமிய கும்புடுங்க(இதில் நான் உடன்படுவதில்லை) ஆசாமிய இல்லை!!

கனிமொழி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீர் விலகல்

நான்தான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கேன்.இந்த வழக்கு விரைவில் ஊத்தி மூடப்ப்படும்னு  .அவ்வளவுதான் வழக்கு முடிஞ்சிது.எல்லாரும் அவங்கவங்க பொழப்பை பாருங்க!!ரெண்டு லட்சம் கோடி சுவாகா!!
வெளியில் வந்ததும் கனிமொழிக்கு "சிறை சென்று வந்த பெண்சிங்கம்" பட்டம்  வழங்கப்பட்டு கட்சியில் இன்னும் உயர்பதவி கிடைக்கபெருவார்.திமுக கட்சியின் தகுதியே ஊழல்,அடிதடி ஜெயில் வாழ்க்கைதானே!!
******************
பி.கு:அப்புறம் ஸ்பெக்ட்ரம் வழக்கு??தலைவர் கவுண்டமணி பாணியில் உ  ஊ ஊ 

வியாழன், 16 ஜூன், 2011

ராகுலும் ராம்தேவும்!!

இரண்டு பேருக்கும் என்ன ஒற்றுமைன்னா  கேக்குறீங்க!!ரெண்டு பேருமே போலியான மக்கள் அக்கறையை காட்டியும் மக்களை கவரமுடியாமல் தோற்றவர்கள்.ராகுல் உத்தர பிரதேசத்துக்கு தனது படைபலம் வண்டியில் சூழ விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு (ஆம் அந்த நிலப்பறிப்பதை அவுரு எதிர்க்கலை.இதை கவனிக்கவும்  !!) அரசு பிடுங்குவதை கண்டித்து அந்த விவசாயிகளை சந்திக்க மேற்சொன்னவாறு போனார்.ஆனா பொடரீல அடிச்சி போலீசு கைது பண்ணதும் "அய்யா சாயங்காலம் வரைக்கும் வெச்சி உட்ருங்கைய்யா" என கெஞ்சி ரிலீசு ஆயிட்டார்.அப்புறம் அவுரு அந்த பக்கம் தலை வெச்சும் படுக்கல.இன்னொரு நாடகம் மாதா மாதம் ஏதாவது ஒரு தலித்தின் குடிசைக்கு சென்று அவுங்க தனக்குன்னு வச்சிருக்கும் கொஞ்ச உணவையும் இவுரு புடிங்கி சாப்பிட்டிட்டு அவுங்க கட்டிலை பிடுங்கி இவுரு படுத்துக்குவார்.இதனால் இவுரு தலித்துகளின் தோழர் எனகாட்டுராராம்!!அடங்கப்ப eththana கிராமத்துல இன்னும் ரெட்டை குவளை முறை இருக்கு!!தலித்துகளின் வாயில் மலம்  கரைத்து ஊற்றும் அவலம் இன்னும்தானே நடக்குது.பல ஆயிரம் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பரணில் இருக்கு!!அதெலாம் நீங்க கேக்க மாட்டீங்க !!ஏன்னா   ஒங்களுக்கு வேண்டியது அமேதி தொகுதி ஒட்டு மட்டுமே!!இதே ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்காக பழங்குடி இன மக்களின் நிலங்களை  பிடுங்கும் ஒரிசா அரசை  கண்டிச்சீங்களா?தமிழ்நாட்டுளையும் சென்ற ஆட்சியில் விலை நிலங்கள் ஓட்ட பிடுங்கப்பட்டது.நீங்கதான் பிசி போல!!நீங்க பிரசாரம் போனாலே காங்கிரசு அந்த மாநிலத்துல  அவுட்டு.தொடர்ந்து பிரசாரம் வாங்க அதான் நல்லது மக்களுக்கு!!
******************************************************************************
  அப்புறம் இந்த ராம்தேவ்.அதான் மூஞ்சி பூரா தாடி.காலை கையை வளைத்து மேடையை தூக்குவது(!!?) போன்ற (சர்க்கஸ் சிறுமிகூட செய்யும்) வித்தைகளை காட்டி ஆயிரம் கோடி சொத்து சேத்தவர்தான்.கருப்பு பணத்துக்கேதிரா உண்ணாவிரதம் இருந்தாரு(எலுமிச்சை சாறு குடிச்சிகிட்டே).சரி இவுரு யோகா குரு பல மாதங்கள் சாப்பிடாம இருப்பாருன்னு சிலர் சொல்ல பத்து நாலு கூட தாங்காம "இப்பவே கண்ணா கட்டுதேன்னு" மருத்துவமனைல சாஞ்சிடாரு  !!அப்புறம் கருப்பு பணத்த இனி யாரு சுவிஸ் வங்கியில் இருந்து கொண்டு வரப்போராங்கலோன்னு மெழுகுவத்தி நடுத்தர வர்க்கம் கன்னத்தில் கைவைத்து காத்திருக்கு.!!நித்தி நீங்க ட்ரை பண்ணலியா?ஆக ரெண்டு பேரும் மக்களை ஏமாத்த முடியாம தோத்தவங்க!!

இவரை பின்பற்றுங்கள்!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தனது கோபிகா என்ற தனது மகளை தானே சென்று அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்து சத்துணவும் சாப்பிட வேண்டுமென வலியுறித்தியுள்ளார்.இதற்கு ஒரு சபாஷ்!!


இதேபோல எல்லா அரசு ஊழியர்கள்,அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதும் தனக்கோ தன குடும்பத்துக்கோ வியாதி என்றால் அரசு மருத்துவமனையை நாடுவதும் தொடர்ந்தால் தானாக இரண்டின் தரமும் உயரும்.சும்மா அபோல்லோவில் போய் படுத்துகொல்வது.தமிழ் வாழ்கன்னு தெருவுல கொடி   புடிச்சிட்டு புள்ளையை டில்லியில் தமிழை ஒரு பாடமாக கூட சொல்லித்தராத பள்ளியில் சேர்ப்பது போன்ற போலி பகட்டுகள்  இனி ஒழியட்டும்

புதன், 15 ஜூன், 2011

தமிழன்னா இளக்காரம்!!!சட்டி தலையனின் திமிர் பேச்சு

சட்டி தலையன் (அதான் சிவசங்கர மேனன்)இலங்கைக்கு சென்று போற்குற்றவாளி நவீன ஹிட்லர்  ராஜபக்சேவுடன் பேசிவிட்டு வந்ததும் நிருபர்கள் "இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க தமிழக சட்டமன்றம் தீர்மானம் போட்டுள்ளது.இது பற்றி பேசினீர்களா?" என கேட்டமைக்கு "தனி மனிதனின் புலம்பலைஎல்லாம்    கணக்கில் எடுத்துகொள்ள முடியாது என கூறியுள்ளான் சட்டிதலையன்.எது தனி மனிதன்?ஏழு கோடி பேர் வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக சட்டமன்றமா?உனக்கென்னா அவ்வளவு இளக்காரம்?அப்போ ஜனநாயகம் மன்னாங்கட்டீன்னு   கூவுரதேல்லாம் சும்மாவா?தமிழக சட்டமன்ற தீர்மானம்(இலங்கை  மீது பெருளாதார தடை) ஏழு கோடி தமிழக மக்கள் மற்றும் நாடு கடந்த தமிழர்களின் தீர்மானம் தெரியுமா?ஒனகென்ன தெரியும்?கேரளாவுல கடஞ்சாயா துன்னவநெல்லாம் தமிழக சட்டமன்றத்த பத்தி பேச வந்துட்டான்.
             நேரு நேருன்னு ஒருத்தர் ஓங்க காங்கிரஸ் கட்சியில் இருந்தாரு ஒனக்கும் சோனியாவுக்கும்  தெரியவாய்ப்பில்லை!!அவுரு என்ன சொன்னாருன்னா "ஒவ்வொரு மாநில  உணர்வும் மதிக்கபடனும்.ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த உணர்வு மத்திய அரசின் உணர்வுக்கு எதிராக இருந்தால் அந்த மாநில உணர்வுக்கே நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்று சொன்னார்.ஒனகென்ன  தெரியும் அதை பத்தி!!நல்லா படி.படிக்கிற காலத்துல சகீலா படம் பார்த்துருப்ப.

நித்திக்கு தண்டனை கொடுத்த குதிரையின் தைரியம் நீதிமன்றத்துக்கு இல்லை!!

நித்யானந்தா வழக்கம் போல குதிரையின் மீதேறி உடற்பயிற்சி செய்வானாம்!!(அதென்ன பயிற்சியோ!!)அப்படி செய்யும் பொது குதிரை மிரண்டு(!!) இவனை கீழே தள்ளி விட இவனுக்கு கைமுறிந்து இப்போ ஆஸ்பித்திரியில் .சபாஷ் அந்த குதிரைக்கு.இவனின் சொத்துகளை முடக்கி இவனை உள்ளே தள்ள வக்கில்லாத நீதிமன்றத்தை விட இந்த குதிரைக்கு தைரியம் அதிகம்.ஒருவேளை குதிர பேரு ரஞ்சிதா இல்லையோ!!

சனி, 11 ஜூன், 2011

காங்கிரசுடன் கூட்டு வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள்

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் திமுக காங்கிரசு உறவு அறுபடுமென  எல்லோரும்(புலி வருது கதையா) எதிர்ப்பார்த்த நிலையில் கனிமொழி மீதான பிணை விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வருகிறது  .அதன் முடிவை பொறுத்து இருப்பதா வெளியேறுவதா என முடிவெடுத்ததாக தெரிகிறது.கனிக்கு ஜாமீன் கொடுக்காத பட்சத்தில் அனைத்து திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வராம்(நம்புவோம்!!).
         அப்போ உச்சநீதிமன்றத்த நடத்துவது காங்கிரசா?என்ற கேள்வி எழும்புது.போபால் விஷவாயு வழக்கை ஊத்தி மூடியதிலயே உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை  கேள்விக்குறியானது.இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கை கண்காணிக்க வில்லையா என சிலர் கேள்விஎழுப்பலாம்!!ஆனால் எத்தனை வருடத்துக்கு?பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு இந்த வழக்கு ஊத்தி மூடப்படும்.அதற்குள் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் நேர்மையானோர் சிலர் ரிட்டையர் ஆகி விடுவர்.அந்த இடத்துக்கு காங்கிரசுக்கு ஜால்ரா போடும் ஆட்களை போட்டாலும் ஆச்சர்யமில்லை.
         இப்போ காங்கிரசின் திட்டம் ஜெவை வளைப்பது.இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்ச தீவை மீட்க வேண்டும் என்ற இரண்டு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய உடனே ஓடி வந்தார் மொட்டை பாஸ்!! சிவசங்கர மேனன்.ஏனெனில் ஒருவேளை நேர்மையாக போர்குற்ற விசாரணை நடக்கும் பட்சத்தில் பாதிக்கபடுவது அதிகம் இந்தியாவாகத்தான்(அதாவது காங்கிரஸ் & கோ) இருக்கும்.
        கடைசி கட்ட போரில் இலங்கை தயங்கி நின்ற பொது கடைசி வரை அழித்தொழி என ஆதரவு கொடுத்தது இந்தியாதான்.இதில் எம் கே நாராயணன் சிவசங்கர மேனன் விஜய் நம்பியார் எல்லாவற்றுக்கும் மேலே சோனியா காந்தி அப்புறம் தமிழ் துரோகி சிதம்பரம் எல்லோரும் மாட்டுவர்.எனவே ஜெவை தன்னை கட்டிகொண்டாள் தப்பிக்கலாம் என்ற நிலையில் 13 ஆ தேதி டில்லி செல்கிறார் ஜெ  .அப்போது சோனியா அவரை சந்திப்பார் என சொல்லபடுகிறது.
               முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இனத்த்ரோகி காங்கிரசை புறக்கன்க்கவும்.இப்போதுதான் தமிழர்கள் சிறு நம்பிக்கை ஒழி தோன்றுவதாக நம்ப ஆரம்பித்துள்ளனர்.இந்த நிலையில் காநிரசுடன் கூட்டு வேண்டாம்.அனைத்து தமிழக கட்சிகளும் காங்கிரசை புறக்கணிக்க வேண்டும் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும்  !!

வியாழன், 2 ஜூன், 2011

ராசா வைக்கபோகும் செக்!!ஸ்பெக்ட்ரம் வழக்கு ஊத்தி மூட முயற்சி!!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா தனக்கு தானே வாதாடப்போகிராராம்!!பிரதமருக்கு தான் அனுப்பிய பெற்ற 18 கடிதங்கள் கொண்டு இதை செய்யப்போகிறாராம்!!இதை உடனே "ஆஹா நல்ல விஷயம் பிரதமரும் மாட்டுவார்" என சில ஒன்னும் தெரியாதவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் உண்மையில் என்னவாகுமெனில் ராசாவின் இந்த செக் வைக்கும் முயற்சியில் சோனியா&கோ'வை  ஸ்பெக்ட்ரம் வழக்கை கொத்ரோச்சி வழக்கு போல,போபால் விஷவாயு  வழக்கு போல ஊத்தி மூட வைக்கும் ஒரு தந்திரமே!!
     "நீ என்ன வெளிய உடலையில்ல!!சரி நான் உன்னை மாட்டி விடுகிறேன்"என சின்ன புள்ள தனமா இந்த கிரிமினல் வேளையில் ஈடுபடவுள்ளார் ராசா!இப்போது அந்த 18 கடிதங்களால் பிரதமரும் மாட்டுவர்.அப்புறம்?ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 60% பணத்தை தன தங்கச்சிகளான அனுஷ்க மற்றும் நாடியா ஆகியோரிடம் அளித்ததாக சொல்லப்படும்  சோனியாவும் மாட்டுவார்.அதனால் இப்போ என்ன செய்வார் சோனியா?ஒண்ணுமில்ல.ஸ்பெக்ட்ரம் வழக்க ஊத்தி மூடும் வேலையைத்தான் செய்வர்.அப்புறம் ராசா வெளியே மொரிஷியஸ் தீவில்.சோனியாவின் தங்கச்சிங்கோ எஸ்கேப்பு!!வாழ்க சனநாயகம்