சனி, 25 ஜூன், 2011

மாட்டிகொண்ட எழுத்தாளர்

(ஆல் இன் ஆல்  நாத்திக கட்டுரைகளில் போலி சாமியார் முதல் போப்பாண்டவர் வரை பெண்டு கழட்டுவார்)
வினவின் கட்டுரை   (என்னதான் இலங்கை தமிழர் உள்ளிட்ட விவகாரங்களில்  வினவுடன் நான் வேறுபட்டாலும் இந்த விஷயத்தில் வினவின் கருத்தை மனதில் சிறிதளவு ஈரமுள்ள எவரும் ஏற்றுகொள்வர்.)
         இவுரு எழுதுன "*"ரோ டிகிரி என்ற நாவலை(இது நாவலா?எனக்கு தெரியிலீங்க) முதல் பக்கமே இவர் கொடுத்திருக்கும் முன்னுரை குமட்டி வாந்தி வர செய்யும் தன்மை கொண்டது.அதுக்கு மேல படிக்க எனக்கு வயித்துல திராணி இல்லை!!(ஆமா எத்தன தபா வாந்தி எடுக்க?).
        குருதிப்புனல் பட விமர்சனத்தில் இவுரோட மாவோயிச சிந்தனை தெறிக்குது.ஆனா இப்போ?மோடியை ஆதரிக்கும் சோவின் பத்திரிக்கையான துக்ளக்கில் எழுதுறார்!!என்னே முரண்பாடு?
              ஒரு பெண்ணிடம்  இவர் பேசிய பேச்சு மேலே குடுத்த இணைப்புகளில் உள்ளது.என்னத்த சொல்ல?சிலர் அந்த பெண்ணே வரிந்து வந்து பேசினார் என சொல்கின்றனர்  .சரி அந்த பெண்ணின் வயதென்ன இவரின் வயதென்ன?
              இது தன்னுடைய உரையாடல் இல்லையென மறுக்கலாம்.ஆனால் இவரின் தளத்தை படித்தாலே எத்தனை கெட்ட வார்த்தை உள்ளது எப்படியெல்லாம் ஆபாசமாக எழுதியுள்ளார் என்பது விளங்கும்.அதையும் நம்பவில்லை எனில் அவரின் நாவல்களை படிக்கவும்.(வாந்தி வந்தா நான் பொறுப்பில்லை!!)
      நித்யானந்தா படத்தை பெருசா போட்டு அவரின் ஜகஜால யோகபயிற்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை நாசூக்காக தன் தளம் மூலமாக செய்து வந்தவர் நித்தி மாட்டியவுடன் அவரின் படத்தை எடுத்துவிட்டு தன க்லோசப்பை போட்டுகொண்டார்.(ஆமா இவுரு தளம் ரொம்ப நாளா beta வாகவே இருக்கே.அடுத்து என்ன   Release candidate ஆ?நமக்கு தெரியல.அப்புறம்அந்த சாமியார் பற்றி புலனாய்வு ஏட்டில் வாரா வாரம் கட்டுரை எழுதி காசு பார்த்ததோடு மட்டுமலாம அதை புத்தகமா வேறு வெளியிட்டார்.
      சாய் பாபா படத்தில் கொட்டிய விபூதி,சாமியடி சித்தரின் சமாதி, தர்காவில் குறி சொன்ன முதியவர் என இவரின் அலப்பல்கள் கொஞ்சநஞ்சமில்லை.
          மல்லுகட்டும் நோக்கிலோ அல்லது வேண்டுமென்றே சேறுவாரி  இறைக்க வேண்டுமென்றோ  நான் இதை எழுதவில்லை.சொல்ல நினைத்ததை சொல்பவன் நான்.அம்புட்டுதேன்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக