திங்கள், 20 ஜூன், 2011

ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவு ;வினவின் மட்டரகமான கட்டுரை

******************************************
        இந்த ஒலக நாயகனோ உள்ளூர் நாயகனோ அதான் கமலஹாசன் குணா படத்தில் சொல்வார்."நடு  நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம்  போட்டுக்கணும்" அதாவது பாடல் எழுதுபவர்களை கிண்டல் அடித்திருப்பார்.
அது போல வினவின் கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறுவது:"பார்ப்பன,பாசிச,கோயபல்ஸ்,காவி கும்பல்,கார்பரேட்டு,போலீசு இதெல்லாம் தவறாமல் இடம்பெறும்.
       இப்போ எதுக்கு இதை சொல்லுகிரேனேன்றால் வினவு இப்போது இலங்கை தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சேனல் 4 வீடியோ பற்றி ஒரு கட்டுரை என்ற  பெயரில் ராஜபக்சே தவிர அவரை எதிர்ப்பவர்கள் எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறது.
       தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தனி தீர்மானங்களான இலங்கை மீது பொருளாதார தடை மற்றும் கட்ச்சதீவு மீட்பு இரண்டுமே ஏமாற்று வேலையாம்.இந்த வீடியோவை வெளியிட்ட இங்கிலாந்தும் நம்பத்தகுந்தது இல்லையாம்.சரிங்க்ணா யாரை நமப் நீங்க சொல்லுங்க?!!
          கொத்து குண்டுகளை இலங்கைக்கு சப்ளை செய்த ரசியாவை நம்பனுமா?எயிட்ஸ் நோய் கொண்ட சீன கைதிகளால் தமிழச்சிகள் புனரப்படுகின்றனர்.அந்த சீனாவை நமப்னுமா?இல்லை கம்யூனிச நாடுன்னு சொல்லப்படும் இலங்கைக்கு ஆதரவு என அறிவித்த க்யூபா உடனா?யாரை நம்பனும் நீங்க சொல்லுங்க?
           இப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இலங்கை போர் குற்றங்கள் பத்தி விவாதிக்கப்பட்டது.ஆனால் வினவு சொல்வதென்ன?மேற்குலக நாடுகளை நம்ப வேண்டாம் அவர்கள் ஏமாற்றுவார்கள்.சரி கிழக்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எதனா உதவிக்கு வருதா சொல்லுங்க?இல்லை ஒங்களுக்கு ஏதாவது நாட்டை அப்படி தெரியுமா?
     கட்டுரையில் வசதியாக இலங்கை போரிலும் சரி அதற்கு பின்பும் சரி ரசியா சீனாவின் பங்கை மறைக்கிறது வினவு .இலங்கைக்கு ஆதரவளித்த க்யூபாவையும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.ஏதாவது நல்லது நடக்காதான்னு அத்தனை ஈழ தமிழர்களும் இங்குள்ள இன மானமுள்ள தமிழர்களும் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கையில் "அவனை நம்பாத அவன் லொட்டு! இவன நம்பாத இவன் லொசுக்கு"ன்னு திண்ணையில் பாக்கு இடித்துக்கொண்டே தெருவில் போகிற வருபவர்களை திட்டிகொண்டிருக்கும் கிழவி போல வினவு ஆனது  கொடுமையிலும் கொடுமை.அப்போ யார்தான் நல்லவங்க நீங்களே சொல்லுங்க!
          இரண்டு உதாரணங்கள்:நீச்சல் தெரியாத ஒருவன் காட்டாற்றில் மூழ்கி கொண்டிருக்கிறான்.கடைசி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு உதவிக்கு கையை மேலே தூக்கி ஆட்டிகொண்டிருக்கிறான்  .அப்போது யாரோ ஒருவர் அந்த பக்கம் வந்த இவனுக்கு கை கொடுக்கிறார் அவனும் மேலே வருகிறார்ன்.கைகொடுத்தவன் ஏதோ ஒரு வகையில் தீயவன் என்பதால் சீ வேணாம் போ நான் மூழ்கிடுரேன்னா சொல்லுவான் அந்த சாககிடப்பவன் ?அப்படி இருக்குது வினவு சொல்வது.அதாவது மூழ்குபவன் தன்னை காப்பாற்ற நீளும் கைக்குரிய அந்த நபரின் கிரிமினல் ரெகார்டை  சாவகாசமா ஆராய்ஞ்சி அதன் படி இவனால் காப்பாற்ற படுவதா வேண்டாமான்னு முடிவு செய்யணுமாம்,.அது சரி ஒரேடியா சுடுக்காட்டுலதான் அப்படி முடிவு செய்ய முடியும்.
            இன்னொன்று: ஒருவன் வண்டியோ காரோ சைக்கிளோ ஒட்டிக்கொண்டு போகிறான்.இடது பக்கம் திரும்ப தனது இடது கையை நீட்டி சைகை செய்கிறான்.இது வினவின் பார்வையில் எப்படி இருக்கும் தெரியுமா?அவன் சைகை செய்தது யாரவது அவனை மோதிவிட்டால் "யோவ் நாந்தான் கை காட்டுநேனுல்ல நீ என்ன குருடா"அப்படின்னு கேக்கதான் அவன் கை காடுறான்னு சொல்வது போல.
         ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டு வந்தா அதை எதிர்த்து வீடோ அதிகாரத்தை பயன்படுத்துவோம்னு மிரட்டுகிறது ரசியா மற்றும் சீனா.இந்தியா பற்றி சொல்லவே தேவையில்லை.அதுவும் போற்குற்றத்தில் பங்காளி என்பதால் வழக்கம் போல தீர்மானத்தை எதிர்த்துதான் ஓட்டளிக்கும்.ஆக கிழக்கு அல்லது மூன்றாம் நாடுகளில் இலங்கையை எதிர்ப்பவர் யார்?வினவு சொல்லுமா?இவுகளுக்கு தெரிந்ததெல்லாம் கார்பரேட்டு அமெரிக்கா பார்ப்பன,காவி கும்பல்.இலங்கை தமிழர்கள் சாகலாம்.ஆனால் மேற்குலக நாட்டின் உதவியை மட்டும் பெறக்கூடாதாம் .சே!!எத்தகைய கொடூர சேடிச மனப்பான்மை!இலங்கை இனவொழிப்பு மே 2009 இல் முடிந்ததும் வினவு&கோ ஒரு கட்டுரை எழுதியது."நாம் அப்பவே சொன்னோம் இதெல்லாம் சரிப்படாது......." என்று சேடிசத்தின் உச்சத்தை அந்த கட்டுரையில் காண முடிந்தது.அதன் பின் இந்த கட்டுரை.காரி  உமிழ தோன்றுகிறது.
   ஒங்கள  யாரும் "தமிழர்களுக்காக போராடு!கட்டுரை  எழுதுன்னு கேக்கவில்லை"அதனால் இது போன்ற அபத்தத்தை  நிறுத்திக்கொள்ளவும். இல்லை முடியாதுன்னா  ராஜபக்சேவின் அடிப்பொடி கூட்டத்தில் சேர்ந்துடுங்க இங்க நாங்க நிம்மதியா இருப்போம்.

   

2 கருத்துகள்:

  1. வினவின் பலக்கட்டுரைகள் எனக்கு உடன்பாடானவை ஆனால் இந்தக்கட்டுரை வினவின் மேல் இருக்கும் மரியாதையை குறைத்து விட்டது.
    உங்கள் மனக்குமுறலோடு என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி.எனக்கும் அதே மனக்கசப்புதான்

    பதிலளிநீக்கு